congress make profit in Uttargand loss | உத்தரகண்ட் சோகத்திலும் விளம்பரம் தேடிய காங்.,| Dinamalar

உத்தரகண்ட் சோகத்திலும் விளம்பரம் தேடிய காங்.,

Added : ஜூன் 26, 2013 | கருத்துகள் (17)
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement
உத்தரகண்ட் சோகத்திலும் விளம்பரம் தேடிய காங்.,

டேராடூன் : உத்தரகண்ட் மழை வெள்ளத்தில் சிக்கி தவித்த ஆயிரக்கணக்கானோரை, ராணுவத்தினர் தங்கள் உயிரை பணயம் வைத்து மீட்டு வரும் நிலையில், காங்கிரஸ் தலைவர், சோனியா, அவர் கட்சியை சேர்ந்த முதல்வர், விஜய் பகுகுணாவின் சிரித்த முகத்துடனான நோட்டீஸ் வினியோகம், அப்பகுதி மக்களை முகம் சுளிக்க வைத்துள்ளது.

உத்தரகண்டில் பேய் மழை பெய்ததில், ஏராளமானோர் தவிக்கின்றனர். இவர்களை, ராணுவ வீரர்கள், தங்களின் உயிரை பணயம் வைத்து மீட்டு வருகின்றனர்.பாதிக்கப்பட்டுள்ள மாநில மக்களுக்கு தெம்பூட்டும் வகையில், முதல்வர், விஜய் பகுகுணா தலைமையிலான, ஆளும் காங்கிரஸ் அரசு, நோட்டீஸ் வினியோகித்து வருகிறது. இதில், காங்., தலைவர் சோனியா மற்றும் முதல்வர் பகுகுணாவின் படங்கள், சிரித்த முகத்துடன் இடம் பெற்றுள்ளன.

அதில், "பேரிடரான இந்த நேரத்தில், அரசு என்றும் உங்களுடன் இருக்கும்' என்ற வாசகம் இடம் பெற்றுள்ளது.சோகமான இந்த நிகழ்விற்கு அச்சடிக்கப்பட்ட நோட்டீஸ்களில், சிரித்த முகத்துடன் காங்., தலைவர்களின் படங்கள் இடம் பெற்றுள்ளது, மக்களை முகம் சுளிக்க வைத்துள்ளது.உத்தரகண்டில் சிக்கித் தவித்த, குஜராத் மாநில மக்களை மீட்க சென்ற மோடியை, விளம்பரம் தேடுகிறார் எனக் கூறிய, காங்., தலைவர்கள், "சிரித்த முக நோட்டீஸ்' மூலம் விளம்பரம் தேடுவதை, என்னவென்று கூறுவது என, பா.ஜ.,வினர் கேள்வி எழுப்பியுள்ளனர்.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...Advertisement

வாசகர் கருத்து (17)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Skv - Bangalore,இந்தியா
27-ஜூன்-201309:57:11 IST Report Abuse
Skv செத்தவீட்டுலேயும் சிரிக்கும் ஜாதி இருக்கு ஆப்பு தேர்தலில் டோன்ட் வொர்ரி
Rate this:
Share this comment
Cancel
kumaresan.m - hochimin ,வியட்னாம்
27-ஜூன்-201307:42:43 IST Report Abuse
kumaresan.m " இந்த பேரிடர் மக்களுக்கு வந்ததே முற்போக்கு சிந்தனை மற்றும் முற்போக்கு திட்டங்கள் இல்லாத காங்கிரஸ் அரசால் தான் என்று மக்கள் கேட்பது காதில் விழுகிறதா ???? மக்கள் மன்றத்தில் வெட்கி தலை குனிய வேண்டிய செயலுக்கு இதில் சிரிப்பு என்ன வேண்டியுள்ளது ???
Rate this:
Share this comment
Cancel
Thangairaja - tcmtnland,இந்தியா
27-ஜூன்-201306:13:29 IST Report Abuse
Thangairaja 'என, பா.ஜ.,வினர் கேள்வி எழுப்பியுள்ளனர்.' இதை கூட செய்யலைனா அவங்க அந்த கட்சில இருந்து என்ன பிரயோஜனம். எவ்வித விளம்பரமும் இல்லாமல் தன் மாநில மக்களை தமிழகம் உள்பட அனைத்து மாநில முதல்வர்களும் கொண்டு வந்து சேர்த்ததன் பின்னர் 15000 பேரை காப்பாற்றி விட்டதாக கூறி அதையே விளம்பரமாக்கி தன் வேஷத்தை வெளிப்படுத்தியவர்களை விட இது ஒன்றும் அசிங்கமில்லை. போட்டோவுக்கெல்லாம் அழுது கொண்டு போஸ் கொடுத்தால் அது கூட ஒரு விளம்பரமாகவே இருக்கும். தவிர தன்னம்பிக்கையுடன் செயல்பட்டு பாதிக்கபட்ட மக்களுக்கு இழந்த வாழ்வை மீட்டுக் கொடுக்க வேண்டிய தலைமைப் பொறுப்பில் உள்ளவர்களே கண்ணீர் விட்டு கலங்கி நின்றால் அந்த பதவிக்கு லாயக்கில்லாதவர்களாகி விடுவார்கள். எதிர்த்தரப்பில் இருந்தாலும் பொறுப்புடன் செயலாற்றிய மகாராஷ்டிரா முதல்வர் சவானை பாராட்டிய உத்தவ் தாக்ரே தன் கூட்டணி கட்சியின் விளம்பர தலைவரை வறுத்து எடுத்ததை யாரும் மறந்திருக்க மாட்டார்கள்.
Rate this:
Share this comment
Cancel
s.maria alphonse pandian - CHENNAI-88,இந்தியா
27-ஜூன்-201305:59:33 IST Report Abuse
s.maria alphonse pandian சோக முகத்துடன் போஸ் கொடுத்திருந்தால்தான் அது நடிப்பு ...
Rate this:
Share this comment
Tamilnesan - Muscat,ஓமன்
27-ஜூன்-201308:19:05 IST Report Abuse
Tamilnesan அப்படியாவது போஸ் கொடுக்க வேண்டுமா? எரிகிற வீட்டில் பிடுங்கும் ஈன ஜென்மங்கள். ஜெய் ஹிந்த்...
Rate this:
Share this comment
Cancel
யதார்தவாதி வெகுஜன விரோதி - சிராப்பள்ளி,இந்தியா
27-ஜூன்-201305:46:30 IST Report Abuse
யதார்தவாதி வெகுஜன விரோதி விளம்பரம் தேடியது மோடியா? காங்கிரஸ் ஆ. மக்களே முடிவு செய்யட்டும்.
Rate this:
Share this comment
Cancel
யதார்தவாதி வெகுஜன விரோதி - சிராப்பள்ளி,இந்தியா
27-ஜூன்-201305:45:59 IST Report Abuse
யதார்தவாதி வெகுஜன விரோதி இத்தனைக்கும் பிறகு மதவாதம் என்னும் போர்வையில் காங்கிரஸ் வரும் தேர்தலில் மீண்டும் ஆட்சி அமைக்கும் அல்லது ஒரு இடைகால அரசை பின்னிருந்து இயக்கும் .
Rate this:
Share this comment
Cancel
Kumar - Trichy,இந்தியா
27-ஜூன்-201303:40:45 IST Report Abuse
Kumar சொல்லில் இல்லாமல் செயலில் காட்டினால் நன்றாக இருக்கும். இந்த நோட்டீஸ் விநியோகிப்பது தேவைற்ற ஒன்று. நீங்கள் செயலில் காட்டினால் அவர்களாக புரிந்து கொள்வார்கள்.
Rate this:
Share this comment
Cancel
NavaMayam - New Delhi,இந்தியா
27-ஜூன்-201303:02:50 IST Report Abuse
NavaMayam மோ(ச)டி கும்பலின் 15000 பேர் மீட்பு என்ற, நடக்க முடியாத காரியத்தை நடத்தியதாக சொல்லி விளம்பரம் தேடினால் குற்றமில்லை ... உலகிலேயே அதிகமான 330 ஹெலிகாப்டர் மீட்பு பயணங்களை மேற்கொண்டு பல ஆயிரம் மக்களை காப்பாற்றிய அரசு விளம்பரம் தேடுவது உங்களுக்கு குற்றமாக தெரிகிறது...
Rate this:
Share this comment
Cancel
தமிழ் சிங்கம் - chennai,இந்தியா
27-ஜூன்-201300:20:10 IST Report Abuse
தமிழ் சிங்கம் விளம்பரம் இல்லாமல் அரசியல் செய்ய முடியாது. ஒருவர் கஷ்டப்பட்டு உழைத்ததை மற்றவர் தட்டிக்கொண்டு செல்வதை அனுமதிக்க முடியாது. உத்திரகண்ட் மாநிலத்தில் காங்கிரஸ் கட்சி உளமார உழைத்து உள்ளது. வெளிநாட்டு உதவியை எதிர்பார்க்காமல் இந்தியாவின் ராணுவத்தை ஏவி, விரைவில் மக்களை மீட்ட பெருமை காங்கிரசிற்கு செல்லும்.
Rate this:
Share this comment
srinivasan - Chennai,இந்தியா
27-ஜூன்-201304:36:22 IST Report Abuse
srinivasanஅதற்க்கு சிரித்த முகத்துடனா போஸ் குடுப்பாங்க. மண்டையிலே மசாலா இருக்கா என்ன? இல்லை ரெண்டு பானை செய்கின்ற அளவுக்கு களிமண் இருக்கா என்ன?...
Rate this:
Share this comment
Padmanaban - DC,யூ.எஸ்.ஏ
27-ஜூன்-201305:46:51 IST Report Abuse
Padmanabanசரிங்க காங்கிரஸ் சொம்பு...
Rate this:
Share this comment
என்னுயிர்தமிழகமே - hyderabad,இந்தியா
27-ஜூன்-201305:59:33 IST Report Abuse
என்னுயிர்தமிழகமேபுண்ணாக்குகளா, ராணுவ வீரர்களும், RSS போன்ற தொண்டர்களும் இரவு பகலா மீட்பு பணியில் ஈடுபடிருக்காங்க, வெந்த புண்ணுல வேலை பாய்ச்சுவது போல இருக்கு தமிழ்நிதியின் கருத்து, மரியா போன்றோரின் கருத்தை ஒட்டியே உங்களது கருத்தும் இருப்பது ஒன்றை புரிய வைக்கிறது....
Rate this:
Share this comment
Cancel
Krish - Madurai,இந்தியா
27-ஜூன்-201300:17:51 IST Report Abuse
Krish தினமலரில் வரும் சில செய்திகள் பாஜக ஆதரவு செய்தி போல் தெரிகிறது. தினமலர் நடுநிலையுடன் இருக்கவேண்டும் என்பதுதான் என் ஆசை.
Rate this:
Share this comment
Padmanaban - DC,யூ.எஸ்.ஏ
27-ஜூன்-201305:49:28 IST Report Abuse
Padmanabanகாங்கிரஸ் இந்திய திருநாட்டை நன்றாக ஆட்சி செய்கிறது......காங்கிரஸ் மீது சொல்லும் ஊழல் அனைத்தும் பொய் மற்றும் ஆதாரம் இல்லாதது........இது நல்ல இருக்கா உங்களுக்கு.............
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை