Tn govt speed rescue work in uttargand | உத்தரகண்டில் சிக்கியவர்களை மீட்பதில் மற்ற மாநிலங்களை விட வேகம் காட்டிய தமிழக அரசு| Dinamalar

பொது செய்தி

இந்தியா

உத்தரகண்டில் சிக்கியவர்களை மீட்பதில் மற்ற மாநிலங்களை விட வேகம் காட்டிய தமிழக அரசு

Added : ஜூன் 27, 2013 | கருத்துகள் (13)
Advertisement
உத்தரகண்டில் சிக்கியவர்களை மீட்பதில் மற்ற மாநிலங்களை விட வேகம் காட்டிய தமிழக அரசு

உத்தரகண்டில், வெள்ளம் மற்றும் நிலச்சரிவு பாதித்த பகுதிகளில், சிக்கிய பயணிகளை மீட்பதில், மற்ற மாநிலங்களை காட்டிலும், தமிழக அரசு காட்டிய வேகம், அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.


களம் இறங்கிய அரசுகள்:

உத்தரகண்ட் மாநிலத்தில் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் நிலச்சரிவால், அம்மாநிலத்திற்கு புனித பயணமாக சென்ற எண்ணற்ற சுற்றுலா பயணிகள், ஆங்காங்கே சிக்கினர். அவர்கள் எந்தப் பகுதியில், சிக்கித் தவிக்கின்றனர் என்ற விவரம் கிடைப்பதே, முதலில் சிரமமாக இருந்தது. இருந்தாலும், பல மாநிலங்களை சேர்ந்தவர்கள் புனித யாத்திரை சென்றிருந்ததால், அவர்களை மீட்க, அந்தந்த மாநில அரசுகளே களம் இறங்கின.இந்த விஷயத்தில், முதலில் முந்திக் கொண்டது தமிழகமே. உத்தரகண்ட் வெள்ள சேதத்தில், தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் சிக்கியுள்ளனர் என்ற தகவல் கிடைத்ததும், உடனடியாக மீட்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளும்படி, மாநில அரசு உத்தரவிட்டது. இதையடுத்து, மின்னல் வேகத்தில் பணிகள் துவங்கின. அதுவரை உத்தரகண்ட் மாநில அரசும், மத்திய உள்துறை அமைச்சகமும்தான், மீட்புப் பணிகளில் வேகம் காட்டத் துவங்கியிருந்தன.முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டதும், தமிழக அரசின் டில்லி பிரதிநிதியான, ஜக்கையன் தலைமையில், கூடுதல் தலைமை செயலர் ஸ்ரீதர், வருவாய் துறை செயலர் ககன்தீப்சிங் பேடி ஆகியோர் அடங்கிய குழு அமைக்கப்பட்டு, அந்தக் குழு டேராடூன் விரைந்தது. அத்துடன், டில்லி தமிழ்நாடு இல்லத்தில், 24 மணி நேரமும் செயல்படும், உதவி மையம் ஒன்றும் அமைக்கப்பட்டது.


மருத்துவ சிகிச்சை:

உத்தரகண்டில் மீட்கப்பட்டு, டில்லிக்கு அழைத்து வரப்பட்ட, தமிழக பயணிகளுக்கு, டில்லி தமிழ்நாடு இல்லத்தில், மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டு, அறையில் தங்க வைக் கப்பட்டு, உணவு கொடுத்து, ஓய்வெடுக்கச் செய்து, விமானம் மூலம் சென்னைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.தமிழக அரசின் இந்த துரித நடவடிக்கைக்கு பிறகே, மற்ற மாநில அரசுகள், வேகம் காட்ட துவங்கின. குறிப்பாக குஜராத், மகாராஷ்டிரா போன்ற மாநில அரசுகள், வேகம் காட்டின. உத்தரகண்டில் மீட்கப்பட்ட தமிழர்களில், 387 பேர், நேற்று முன்தினம் வரை, விமானம் மூலம், சென்னைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். நேற்று ஒரே ஒரு நபர், சென்னைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.உத்தரகண்ட் மாநிலம், டேராடூனில் முகாமிட்டுள்ள, தமிழக அரசின் குழு, இன்னும் டில்லி திரும்பவில்லை. உத்தரகண்டில் வெள்ள பாதிப்பு பகுதிகளில் சிக்கிய, தமிழக பயணிகள் அனைவரும் மீட்கப்பட்டு விட்டனர் என்ற நிலைமை உருவாகும் வரை, தமிழக அரசின் மீட்பு நடவடிக்கைகள், தொடரும் என, கூறப்படுகிறது.
- நமது டில்லி நிருபர் -

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...Advertisement

வாசகர் கருத்து (13)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
mohamed fareed fareed - batam ,இந்தோனேசியா
28-ஜூன்-201306:08:06 IST Report Abuse
mohamed fareed fareed ஐயா நமது நிருபர் உண்மையான செய்தி யை கொடுங்கள் ... இந்த பணியை செய்தது இந்திய இராணுவம். அவர்களை விட்டுவிடு ஒட்டு பிச்சை எடுக்கும் இந்த அரசியல் கோமாளிகளை இவர்களுடன் இணைக்காதீர்கள் ...
Rate this:
Share this comment
Cancel
k.sathiamoorthy - nagapattinam,இந்தியா
28-ஜூன்-201304:43:34 IST Report Abuse
k.sathiamoorthy வேகம் காட்டிய தமிழக அரசு...// உட்டாலங்கடி வேலையெல்லாம் இங்க வேண்டாம். பாழ்படும் தமிழகத்தை சீர்படுத்த வேகம் காட்டச்சொல். முதல்வர் கொடநாடு போய் தூக்கத்தை போடபோறாங்க. இனி எங்க இந்த மாநிலம் உருப்பட போகுது. திட்டங்கள் போடதெரியாத ஒரு முதல்வர். யாராவது போட்டதிட்டத்தை வேறு பெயரில் மாற்றி அறிவிக்க ஒரு முதல்வரா. பேசாமல் நிரந்தரம்மா கொடனாட்டிலே இருந்தாலே நல்லா இருக்கும் "" மந்திரிகளுக்கு முதுகு வலி இல்லாமலும் M L A இக்கு கவளி இல்லாமலும் இருக்கும் """"
Rate this:
Share this comment
Cancel
N.Purushothaman - Kuala Lumpur,மலேஷியா
28-ஜூன்-201304:19:00 IST Report Abuse
N.Purushothaman தமிழர்கள் காப்பாற்றப்பட்டு அவர்கள் திரும்பியதற்கு தமிழக அரசும் ஒரு காரணம் என்றால் வரவேற்க்கதக்கதே....
Rate this:
Share this comment
Cancel
குஞ்சுமணி சென்னை - Chennai ,இந்தியா
28-ஜூன்-201303:11:02 IST Report Abuse
குஞ்சுமணி சென்னை இனி யாரு தமிழ்நாட்டு பார்டர கிராஸ் பண்ணினாலும் முதல்வர் கிட்ட போயிட்டு வரேன்னு சொல்லீட்டு போனா இந்த மாதிரி மீட்ப்பு பணிகளின்போது மீட்க வசதியா இருக்கும். நாஞ்சில் சம்பத்தோட இன்னோவா கார வெச்சா தமிழக அரசு மீட்பு பணிகள செஞ்சுது ?
Rate this:
Share this comment
Cancel
Sivakumar - Permbalur,இந்தியா
28-ஜூன்-201301:32:09 IST Report Abuse
Sivakumar புயல் வெள்ளம் அடிச்சு பத்து நாள் ஆச்சு,, "உத்தரகண்டில் சிக்கியவர்களை மீட்பதில் மற்ற மாநிலங்களை விட வேகம் காட்டிய தமிழக அரசு" என்ன கொடுமைடா இது,,,இந்‌‌நேரம் இறந்தவன் இடத்தில புல் பூண்டுகளே முளைத்து இருக்கும்,,,
Rate this:
Share this comment
NavaMayam - New Delhi,இந்தியா
28-ஜூன்-201303:12:41 IST Report Abuse
NavaMayamமுளைத்த பிறகுதானே அறுவடை செய்ய முடியும்.......
Rate this:
Share this comment
Cancel
Balagiri - Chennai,இந்தியா
28-ஜூன்-201301:01:56 IST Report Abuse
Balagiri சும்மா வேகம் அது இது என்று புருடா விட வேண்டாம், மோடி செய்ததைப்போல் நாங்களும் செய்தோம் என்று இவர்கள் கூறுவது முழு பொய்
Rate this:
Share this comment
Cancel
Binu - Trichy,இந்தியா
28-ஜூன்-201300:44:53 IST Report Abuse
Binu அப்போ மோடி இரண்டாவதா? அப்போ ஜெயா அம்மா தான் அடுத்த பிரதமர்.....Because ஜெயா அம்மா க்கு மக்கள் பணியில் மோடி விட வேகம் கூடுதல்.....
Rate this:
Share this comment
NavaMayam - New Delhi,இந்தியா
28-ஜூன்-201303:15:55 IST Report Abuse
NavaMayamமோ(ச)டிக்கு அம்மா எவ்வளவோ பரவாயில்லை .......
Rate this:
Share this comment
Cancel
NavaMayam - New Delhi,இந்தியா
28-ஜூன்-201300:43:47 IST Report Abuse
NavaMayam ஏம்பா மலை உச்சியில் உயிருக்கு போராடி பேரிழப்பில் சிக்கிய எல்லா மாநில மக்களை காப்பாற்றிய மாநில அரசுகளின் பட்டியலை வெளியிடுங்களேன் ... அதை செய்தது உத்தர்கந்த் மாநில , மற்றும் மதிய காங்கிரஸ் அரசுதானே ...அதை முதலில் ஒத்து கொள்ளுங்கள்....
Rate this:
Share this comment
Cancel
Bala Subramani - Pittsburgh,யூ.எஸ்.ஏ
28-ஜூன்-201300:08:19 IST Report Abuse
Bala Subramani தமிழக முதல்வர் அக்கறைக்கு என் நன்றி மட்டும் பாராட்டுக்கள்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை