vijayakanth plan failure | விஜயகாந்த் போட்ட சொதப்பல் "பிளான்' : ஓட்டு போட படாத பாடுபட்ட எம்.எல்.ஏ.,க்கள்| Dinamalar

அரசியல் செய்தி

தமிழ்நாடு

விஜயகாந்த் போட்ட சொதப்பல் "பிளான்' : ஓட்டு போட படாத பாடுபட்ட எம்.எல்.ஏ.,க்கள்

Added : ஜூன் 27, 2013 | கருத்துகள் (17)
Advertisement
விஜயகாந்த் போட்ட சொதப்பல் "பிளான்' : ஓட்டு போட படாத பாடுபட்ட எம்.எல்.ஏ.,க்கள்

தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்த் போட்ட திட்டத்தால், ராஜ்யசபா தேர்தலில் ஓட்டுப்போட சென்ற கட்சி எம்.எல்.ஏ.,க்கள், படாத பாடுபட்டனர்.
ராஜ்யசபா தேர்தலில், தி.மு.க., வேட்பாளர் கனிமொழிக்கு ஆதரவாக ஓட்டளிக்க, தே.மு.தி.க., - எம்.எல்.ஏ.,க்களை தி.மு.க., இழுக்க கூடும் என்ற தகவல், நேற்று முன்தினம் இரவு, தே.மு.தி.க., தலைமைக்கு கிடைத்தது.உஷார் அடைந்த கட்சி தலைமை, நேற்று காலை, 8:30 மணிக்கே, கட்சி அலுவலகத்திற்கு வருமாறு எம்.எல்.ஏ.,க்களுக்கு ரகசிய உத்தரவு பிறப்பித்தது. அதன்படி, பண்ருட்டி ராமச்சந்திரன் உள்ளிட்ட, 21 எம்.எல்.ஏ.,க்கள், கோயம்பேட்டில் உள்ள கட்சி அலுவலகத்திற்கு வந்தனர். அவர்களுக்கு, ஓட்டலில் இருந்து வரவழைக்கப்பட்ட இட்லி, பொங்கல், பூரி, மசால் வடை, காபி ஆகியவை காலை உணவாக வழங்கப்பட்டது.காலை, 9:00 மணிக்கு ஓட்டளிக்க புறப்பட வேண்டும், என கூறியிருந்த நிலையில், 10:30 மணியாகியும் விஜயகாந்த் வரவில்லை. எரிச்சல் அடைந்த எம்.எல்.ஏ.,க்கள் அதை வெளிக்காட்டிக் கொள்ளாமல், பேசிக் கொண்டும், நாளிதழ்களை புரட்டி பார்த்து கொண்டும் இருந்தனர்.
சரியாக, 10:30 மணிக்கு விஜயகாந்த் வந்ததும், தலைமை செயலகத்திற்கு புறப்பட்டனர். பூந்தமல்லி நெடுஞ்சாலை வழியாக, 11:15 மணிக்கு, அவர்கள் சென்றுக் கொண்டிருந்த போது, முதல்வர், ஓட்டுப் போட, தலைமை செயலகம் வந்துள்ளதாக தகவல் கிடைத்தது. இதையடுத்து, விஜயகாந்த் உள்ளிட்ட எம்.எல்.ஏ.,க்கள், சாலையோரம் ஆங்காங்கே கார்களை நிறுத்தினர். முதல்வரை தொடர்ந்து, அ.தி.மு.க., - எம்.எல்.ஏ.,க்கள் ஓட்டுப் போடுவதாக தகவல் கிடைத்ததால், சாலையில் நிற்க விருப்பமில்லாமல், எம்.எல்.ஏ.,க்கள் விடுதிக்கு சிலர் சென்று விட்டனர்.
தலைமை செயலகத்தில் இருந்து, அ.தி.மு.க.,வினர் சென்று விட்டதாக தகவல் கிடைத்த பிறகு, 1:10 மணிக்கு, தே.மு.தி.க.,வினர் தலைமை செயலகம் சென்றனர். அந்த நேரத்தில், தி.மு.க., தலைவர் கருணாநிதி அங்கு வந்தார்.விஜயகாந்திடம் சென்ற தி.மு.க., கொறடா, "கருணாநிதி ஓட்டளித்த பிறகு நீங்கள் ஓட்டு போட முடியுமா?' என, கேட்டார். அதற்கு விஜயகாந்த் சம்மதம் தெரிவித்தார். கருணாநிதி மற்றும் அவருடன் வந்த, ஐந்து எம்.எல்.ஏ.,க்கள் ஓட்டளித்த பிறகு, விஜயகாந்த் மற்றும் தே.மு.தி.க., - எம்.எல்.ஏ.,க்கள் ஓட்டளிக்க வாய்ப்பு கொடுத்தனர். தே.மு.தி.க.,வினர் ஓட்டளித்த பிறகு, மீதமுள்ள தி.மு.க.,வினர் ஓட்டளித்தனர். ஓட்டு போட செல்வதற்கு விஜயகாந்த், போட்ட சொதப்பல் திட்டத்தால், தே.மு.தி.க., - எம்.எல்.ஏ.,க்கள் படாதபாடு பட்டனர்.
-நமது நிருபர்-

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...Advertisement

வாசகர் கருத்து (17)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Bosco - Dubai ,ஐக்கிய அரபு நாடுகள்
01-ஜூலை-201312:43:17 IST Report Abuse
Bosco Nothing wrong with Vijaya kanth.... He is far better than Karuna......
Rate this:
Share this comment
Cancel
யதார்தவாதி வெகுஜன விரோதி - சிராப்பள்ளி,இந்தியா
28-ஜூன்-201306:06:02 IST Report Abuse
யதார்தவாதி வெகுஜன விரோதி இவருடைய டைமிங் எல்லாம் சினிமாவில் மட்டும் தான் என்று புரிகிறது.....(ஷூட்டிங் கிற்கு வரும்/ போகும் நேரம் பற்றி சொல்லவில்லை.... காட்சி அமைப்பில் உள்ள டைமிங். பற்றி சொல்கிறேன்.)
Rate this:
Share this comment
Cancel
G.Prabakaran - Chennai,இந்தியா
28-ஜூன்-201305:27:03 IST Report Abuse
G.Prabakaran நேற்றைய செய்தியில் முதல்வர் வாக்களித்த பிறகுதான் மற்றவர்கள் வாக்களிக்க அனுமதிக்கப்படுவார்கள் என செய்தி வெளியாகியது. ஆகவே முதல்வர் தான் இந்த மொத்த குழப்பத்திற்கும் காரணம். வேண்டும் என்றே விஜயகாந்தை அலைய விட்டார்களோ என சந்தேகம் வருகிறது. எல்லாரும் முதல்வர் உட்பட நல்ல நேரம் பார்த்து தான் வாக்களித்திருக்கிறார்கள்.
Rate this:
Share this comment
Cancel
Skv - Bangalore,இந்தியா
28-ஜூன்-201304:58:36 IST Report Abuse
Skv இந்த ஆளுக்கு, தான் தான் பெரிய லொள்ளுன்னு காட்டிக்க ஆசை + வெறி. தலைமை என்றால் இஷ்டத்துக்கு ஆட்டிப்படைப்பத கேவலம்
Rate this:
Share this comment
Cancel
Vaduvooraan - Chennai ,இந்தியா
28-ஜூன்-201304:39:37 IST Report Abuse
Vaduvooraan ஐயோ பாவம், அவரை சொல்லி குற்றமில்லை. அரசியல் என்பது படங்களில் காலை தூக்கி சுவற்றில் வைத்து சக்கர வட்டமாக சுற்றி பத்து பேரை சுழற்றி அடிப்பது போல சுலபம் என்று நினைத்து விட்டார்.
Rate this:
Share this comment
Cancel
g.s,rajan - chennai ,இந்தியா
28-ஜூன்-201304:38:26 IST Report Abuse
g.s,rajan "Soodhu" Kavviyathu
Rate this:
Share this comment
Cancel
NavaMayam - New Delhi,இந்தியா
28-ஜூன்-201303:09:12 IST Report Abuse
NavaMayam இந்த 22 இவரை விட்டு போகாது ...ஏன்னா....ரெண்டு ரெண்டா தெரியுதுல்ல ....
Rate this:
Share this comment
Cancel
குஞ்சுமணி சென்னை - Chennai ,இந்தியா
28-ஜூன்-201302:59:50 IST Report Abuse
குஞ்சுமணி சென்னை விஜயகாந்துக்கிட்ட நிறைய ஐடியா இருக்கு. ஆனா பிளான் இல்ல. இவர் ஆட்சிக்கு வந்தால் அமெரிக்காவுக்கு முட்டை ஆபாயில் ஏற்றுமதி செய்து அரசுக்கு பெரும் வருவாய் ஈட்டர மாதிரி ஒரு ஐடியா இருக்கு.
Rate this:
Share this comment
Cancel
Vettri - Coimbatore,இந்தியா
28-ஜூன்-201301:21:40 IST Report Abuse
Vettri "தெளிவாக" இருக்கும் போது போட்ட பிளானாக இருக்கும். அதான் சொதப்பிருச்சு.
Rate this:
Share this comment
Cancel
Pugazh V - Coimbatore / Cochin,இந்தியா
28-ஜூன்-201301:11:22 IST Report Abuse
Pugazh V இவரின் ஏஜன்ட் கை தூக்கினால் அந்த வாக்கை தேர்தல் அதிகாரி செல்லாது என்று அறிவிப்பார் என்றும், அதிருப்தி எம் எல் ஏக்கள் கலக்கம் என்றும் செய்திகள் வந்த போதே, அதெல்லாம் தவறு எனு எழுதினேன், இனி கனிமொழி இங்கே சென்சுரி அடிக்கப் போவதைப் படிக்க ஆவலுடன் இருக்கிறேன்.
Rate this:
Share this comment
Salim - Trichy,இந்தியா
28-ஜூன்-201305:41:43 IST Report Abuse
Salimஊழல் பண்ணிய பெண்மணிக்கு சப்போர்ட் பண்ணும் உன்னை போன்ற படிச்ச திருடர்கள்தான் திருந்தனும்....
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை