TN govt plan to collect compensation from pmk | பா.ம.க.,விடம் ரூ.100 கோடி இழப்பீடு வசூலிக்க அரசு முடிவு: கட்சி நிர்வாகிகளிடம் 1ம் தேதி முதல் விசாரணை | Dinamalar
Advertisement
பா.ம.க.,விடம் ரூ.100 கோடி இழப்பீடு வசூலிக்க அரசு முடிவு: கட்சி நிர்வாகிகளிடம் 1ம் தேதி முதல் விசாரணை
Advertisement
 
 
Advertisement
 
 
 
எழுத்தின் அளவு:
Advertisement

சென்னை:வட மாவட்டங்களில் நடந்த வன்முறையால் ஏற்பட்ட சேதத்துக்கு இழப்பீடாக, 100 கோடி ரூபாய் வரை, பா.ம.க.,வினரிடம் வசூலிக்க, தமிழக அரசு முடிவெடுத்துள்ளது. ஜூலை, 1ம் தேதி முதல், விசாரணைக்கு வருமாறு, பா.ம.க.,வினருக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.
சென்னையை அடுத்த, மாமல்லபுரத்தில், ஏப்., 25ம் தேதி, வன்னியர் இளைஞர் பெருவிழா நடந்தது. இந்த விழாவிற்கு சென்றோருக்கும், மற்றொரு பிரிவினருக்கிடையே, மரக்காணத்தில் மோதல் நடந்தது. இதன் மீதான, போலீசாரின் நடவடிக்கையைக் கண்டித்து, தடையை மீறி ஆர்ப்பாட்டம் நடத்திய, பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டார்.இதைக் கண்டித்து, வட மாவட்டங்களில், வன்முறை சம்பவங்கள் நடந்தன. 800க்கும் மேற்பட்ட அரசு, தனியார் பஸ்கள் நொறுக்கப்பட்டன; 15க்கும் மேற்பட்ட வாகனங்கள், தீ வைத்து எரிக்கப்பட்டன. இதில், மூன்று பேர் இறந்தனர்."வன்முறையாளர்கள் மீது, கடும் நடவடிக்கை எடுக்கப்படும்' என, முதல்வர் ஜெயலலிதா அறிவித்தார். இதன்படி, பா.ம.க.,வைச் சேர்ந்த, 96 பேர், குண்டர் சட்டத்திலும், 24 பேர் தேசிய பாதுகாப்புச் சட்டத்திலும் கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப் பட்டுள்ளனர்.
இந்நிலையில், பொதுச் சொத்துக்களுக்கு சேதம் விளைவித்தால், இழப்புத் தொகையை சம்பந்தப் பட்டவர்களிடம் இருந்தே வசூலிக்க வகை செ#யும், "தமிழ்நாடு சொத்துக்கள் (சேதம் மற்றும் இழப்பு தடுப்பு) சட்டம் 1992' என்ற சட்டத்தின் படி, இழப்பீட்டுத் தொகையை, பா.ம.க., வினரிடமிருந்து பெறும் முயற்சி முடுக்கிவிடப்பட்டது.வன்முறையால் வடமாவட்டங்களில் ஏற்பட்ட சொத்து சேதம் குறித்து, வருவாய்த் துறை மூலம் கணக்கெடுப்புப் பணி நடந்தது. போக்குவரத்து துறை, டாஸ்மாக் உள்ளிட்ட அரசுத் துறைகள் மட்டுமின்றி, தனியாரிடமிருந்தும், 150க்கும் மேற்பட்ட புகார்கள் வந்துள்ளன.
இவற்றை கணக்கிடும்போது, 80 முதல் 100 கோடி ரூபாய் வரை இழப்பு ஏற்பட்டிருக்கலாம் என, தெரிய வந்துள்ளது.இத்தொகையை, பா.ம.க., வினரிடமே வசூலிக்கும் அதிரடியில் அரசு இறங்கியுள்ளது. இது தொடர்பான விசாரணைக்கு வருமாறு, பா.ம.க., நிறுவனர் ராமதாஸ், இளைஞர் அணி செயலாளர் அன்புமணி, கட்சி தலைவர் கோ.க.மணி உள்ளிட்டோருக்கு, வருவாய்த்துறை ஆணையர் அலுவலகம் மூலம் நோட்டீஸ் அனுப்பப் பட்டுள்ளது.ஜூலை, 1ம் தேதி முதல், வருவாய்த்துறை ஆணையர் அலுவலகத்தில், விசாரணை தொடங்குகிறது. இந்த விசாரணை முடிய, ஒரு மாதம் வரை ஆகலாம் எனவும், கூறப்படுகிறது. நோட்டீஸ் வந்துள்ளதை உறுதி செய்துள்ள, பா.ம.க.,வினர், "இதை எதிர்கொள்வது குறித்து, சட்ட ரீதியாக ஆலோசித்து வருகிறோம்' என்றனர்.

Advertisement

தொடர்புடைய செய்திகள்:


Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (21)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Krish Sami - Trivandrum,இந்தியா
29-ஜூன்-201302:22:55 IST Report Abuse
Krish Sami என்ன ஐடியா? தேர்தலுக்கு முன்னர் முரண் பட்ட எல்லா எதிர்கட்சிகளையும் ஒன்று சேர்த்து விட வேண்டுமா?
Rate this:
0 members
0 members
5 members
Share this comment
Cancel
Gopalakrishnan - Ahmedabad,இந்தியா
28-ஜூன்-201318:47:59 IST Report Abuse
Gopalakrishnan அபராதமா ? சங்கமே அபராதத்துல தான் ஓடுது .... வேணும்னா ஒரு பேங்க் ஒன்னு கட்டி விடுங்க நடத்துறோம்
Rate this:
3 members
0 members
12 members
Share this comment
Cancel
PRAKASH - AHMEDABAD, GUJARAT,இந்தியா
28-ஜூன்-201308:43:09 IST Report Abuse
PRAKASH அவங்களே தேர்தல் நிதிக்கு ஊரு ஊரா போய் ........ எடுக்க போறாங்க .. அவங்க கிட்ட ?? 100 கோடி ??? கேஸ் போடுறதுக்கு தான் தாத்தாவும் கேப்டன் இருக்காங்களே..
Rate this:
11 members
0 members
33 members
Share this comment
Cancel
Thambi Ravi - Erumainayakanpalayam,இந்தியா
28-ஜூன்-201302:11:56 IST Report Abuse
Thambi Ravi ஆமா ஆமா கடுகு வெட்டி ரவி இல்லை, காடு வெட்டி குரு. நூறு கோடி உடனே கொடுதுருவாறு. எல்லாரும் வரிசையில வந்து வாங்கிகோங்க....
Rate this:
6 members
0 members
48 members
Share this comment
Cancel
zakir hassan - doha,கத்தார்
28-ஜூன்-201301:40:54 IST Report Abuse
zakir hassan பா ம க வை தடை செய்யவும்
Rate this:
27 members
0 members
152 members
Share this comment
sumaithangi - chennai,இந்தியா
28-ஜூன்-201309:43:04 IST Report Abuse
sumaithangivengayam...
Rate this:
42 members
1 members
19 members
Share this comment
Cancel
Vettri - Coimbatore,இந்தியா
28-ஜூன்-201301:36:07 IST Report Abuse
Vettri இது ஒரு நல்ல முன்னோடி. ஜன நாயக நாட்டில் யார் வேண்டுமானாலும் போராட்டம் நடத்த உரிமை உள்ளது பொது சொத்தை சேதப்படுத்த யாருக்கும் உரிமை இல்லை. குறிப்பாக மரங்களை வெட்டுவதற்கு கடுமையான தண்டனைகள் வழங்க வேண்டும்.
Rate this:
12 members
1 members
194 members
Share this comment
sumaithangi - chennai,இந்தியா
28-ஜூன்-201309:45:13 IST Report Abuse
sumaithangiசுமார் அறுபது வருட ஜனநாயக நாடில் இப்ப தான் முன் உதாரணம் உங்களுக்கு கிடைத்ததா????முன்னாடி தப்பு பண்ணவங்களுக்கு என்ன தண்டனை கொடுப்பது????...
Rate this:
56 members
2 members
25 members
Share this comment
praveen - Chennai,இந்தியா
02-ஜூலை-201312:23:17 IST Report Abuse
praveenப.ம.க போல் யாரும் மரங்களை வெட்டியும், மக்களை கல்லால் அடித்தும், யாரும் போராட்டம் செய்தது இல்லை.. அப்படியே இருந்தால் அது உங்கள் கட்சியால் ஆரம்பிக்க பட்டதே... ஒரு மாதம் இரவுகளில் வெளியில் எங்கும் செல்ல முடியாமல், எதோ 144 போட்டது போல இருந்தது தமிழகம், மீறி சென்றால் கல்லடி... இபொழுது வக்காலத்து வாங்காதீர்கள் திரு சுமைதாங்கி.. மக்களின் சுமையை தாங்குங்கள், உங்கள் கட்சியின் சுமையை தாங்காதீர்கள்.....
Rate this:
1 members
0 members
5 members
Share this comment
Anniyan - vellore,இந்தியா
02-ஆக-201317:17:31 IST Report Abuse
Anniyanமனசாட்சி யுடன் பேசவும் பிரவீன் அவர்களே...
Rate this:
0 members
0 members
0 members
Share this comment
Cancel
Ambaiyaar@raja - Nellai to chennai ,இந்தியா
28-ஜூன்-201301:05:31 IST Report Abuse
Ambaiyaar@raja 100 கோடி எல்லாம் பத்தாது 1000 கோடி வாங்குங்கள் அப்படியே அந்த தைலாபுரம் தோட்டத்தை வேளாண் பல்கலைகழகமாக மாற்றி விடுங்கள் அதில் வன்னிய நண்பர்களை எல்லாம் இலவசமாய் சேர்த்துகொள்ளுங்கள் நல்லா படிக்கட்டும் எல்லாம் அவர்களின் கஷ்டபட்ட காசு தா.ஜாதி சண்டை இல்லாமல் அப்பத்தான் தமிழ் நாடு நல்ல இருக்கும்.
Rate this:
24 members
0 members
162 members
Share this comment
sumaithangi - chennai,இந்தியா
28-ஜூன்-201309:48:01 IST Report Abuse
sumaithangiஇரண்டு உயிர்களை கொலை செய்தது யார்?????...
Rate this:
28 members
0 members
31 members
Share this comment
Anniyan - vellore,இந்தியா
02-ஆக-201317:18:05 IST Report Abuse
Anniyanஇந்த தமிழக அரசு தானே.....
Rate this:
0 members
0 members
0 members
Share this comment
Cancel
appu - madurai,இந்தியா
28-ஜூன்-201301:02:54 IST Report Abuse
appu ஜெயா போல திறமை மிக்க அட்மின்ஷ்ற்றேடர் முதலமைச்சராக இருப்பது தமிழகத்துக்கு ஒரு பலமே...பலகுறைகள் இருப்பினும் ஜெயாவின் இப்போதைய ஆட்சி கண்டிப்பாக பாராட்ட தக்கதே...திமுகவினரை விட அதிமுகவினர் இப்போது மேலோ மேல்...சுயநலாம் பிடித்தோரை விட குடும்பத்துக்காக மக்களை அடகு வைக்க துணிபவர்களை விட இந்த காலகட்டத்தில் ஜெயா எவ்வளவோ மேல்....
Rate this:
75 members
3 members
259 members
Share this comment
குஞ்சுமணி சென்னை - Chennai ,இந்தியா
28-ஜூன்-201303:13:28 IST Report Abuse
குஞ்சுமணி சென்னைஜெயலலிதா, மேல் இல்லைங்க பீமேல்...
Rate this:
27 members
0 members
113 members
Share this comment
மதுரை விருமாண்டி - சான் ஹோஸே, கலிபோர்னியா ,யூ.எஸ்.ஏ
28-ஜூன்-201306:15:03 IST Report Abuse
மதுரை விருமாண்டிதிறமையா, தேராமையா ??...
Rate this:
20 members
1 members
18 members
Share this comment
Cancel
தமிழ் சிங்கம் - chennai,இந்தியா
28-ஜூன்-201300:17:09 IST Report Abuse
தமிழ் சிங்கம் தர்மபுரியில் பஸ்ஸை எரித்து ரெண்டு மாணவிகளை கொன்றார்களே, அவர்களின் குடும்பத்திற்கு முதலில் அதிமுக நஷ்ட ஈடு கொடுக்கட்டும். அதுவரை பாமக ஒரு சல்லிகாசு கொடுக்க தேவை இல்லை. அரசியல் போராட்டம் என்றால், வன்முறைகள் நடக்கும். அதை அரசே தூண்டிவிட கூடாது. ராமதாசை வேண்டுமென்றே சிறையில் அடைத்து ஜெயா வன்முறையை தூண்டினார். அதனால் ஏற்பட்ட நஷ்டத்தை அதிமுகவே அரசுக்கு கொடுக்க வேண்டும்.
Rate this:
252 members
1 members
91 members
Share this comment
28-ஜூன்-201302:02:30 IST Report Abuse
ரமேஷ்பாபு ராமதாஸ்என்னது, வேண்டுமென்றே ராமதாசை சிறையில் அடைத்தாரா ..? அடேங்கப்பா . . வசதியா ராமதாஸ் அன்புமணி, குரு ஆகியோர் சித்திரை விழாவில் சாதி உணர்வை தூண்டும் வகையில் பேசியதை மறந்து விட்டீர்களே. மேலும் ராமதாசே தன் மீது வழக்கு போடும் படி அங்கே தமிழக அரசுக்கு சவால் விட்டதையும் மறந்து விட்டீர்களா..? ஜெயலலிதா பொறுத்து பொறுத்து பார்த்தார். மருத்துவர் அமைதியாக இருக்காமல், எப்படியாவது ஜெயலலிதாவை தூண்ட வேண்டும் என்று கங்கணம் கட்டிக் கொண்டு, விழுப்புரத்தில், தடையை மீறி ஆர்ப்பாட்டம் நடத்தினார். இவ்வளவும் நடந்த பிறகே கைது நடந்தது. இதை போய் வேண்டுமென்றே சிறையில் அடைத்தார்கள் என்றா சொல்வது. .. வேண்டுமென்றே, சிறைக்கு செல்ல வேண்டும் என்று முடிவு செய்து ராமதாஸ் இவ்வாறெல்லாம் செய்தார் என்றும், ஜெயலலிதா தன்னை கைது செய்தவுடன் அரங்கேற்ற வேலைகளை முன் கூட்டியே , திட்டமிட்டு முடித்து விட்டார் என்று தான் சொல்ல வேண்டும். எல்லாம் தேர்தல் படுத்தும் பாடு . அன்புமணிக்கு முதல்வர் பதவி வேண்டும் என்றால் , இப்படி எல்லாம் செய்தால் கிடக்கும் என்று அவர் நினைத்து விட்டார் போலும் ......
Rate this:
26 members
0 members
147 members
Share this comment
Elangovan - Madurai,இந்தியா
28-ஜூன்-201302:14:28 IST Report Abuse
Elangovan"அரசியல் போராட்டம் என்றால், வன்முறைகள் நடக்கும்." இப்படி சொல்ல உங்களுக்கு எப்படி தைரியம் வந்தது. எந்த ஒரு நல்ல மனிதனும் இதை ஆமோதிக்க மாட்டன். மனிதாபிமானத்தோடு இருக்க முயற்சி செய்யுங்கள். இது போல் வன்முறை நடந்து உங்கள் வீடு சூரையாடபட்டால்? யோசித்து பாருங்கள்....
Rate this:
15 members
0 members
127 members
Share this comment
Anniyan - vellore,இந்தியா
02-ஆக-201317:20:01 IST Report Abuse
Anniyanஅடுத்த ஆட்சியில் என்ன அதிமுக கிழிக்க போகுது என்று பார்போம்...
Rate this:
0 members
0 members
0 members
Share this comment
Cancel
V P Arun Kumar - London,யுனைடெட் கிங்டம்
28-ஜூன்-201300:11:12 IST Report Abuse
V P Arun Kumar சங்கமே திவால்ல நடத்திட்டு இருக்கோம் , இதுல அபராதம் வேறேயா ...
Rate this:
16 members
0 members
175 members
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.
மேலும் செய்திகள்