Advertisement
தமிழகத்துக்கு 90 டி.எம்.சி., தண்ணீர் திறக்க வாய்ப்பில்லை : கர்நாடகா நீர்வளத்துறை அமைச்சர் கைவிரிப்பு
Advertisement
 
 
Advertisement
 
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

27 ஜூன்
2013
23:54

பெங்களூரு : ""பருவ மழை காரணமாக, கர்நாடகா அணைகளில் நீர்மட்டம் உயர்ந்து வந்தாலும், 90 டி.எம்.சி., தண்ணீரை, தமிழகத்துக்கு திறந்து விட வாய்ப்பில்லை என்று, காவிரி கண்காணிப்பு குழுவிடம், திட்டவட்டமாக கூறியுள்ளோம்,'' என, கர்நாடகா நீர்வளத்துறை அமைச்சர், எம்.பி.பாட்டீல் கூறினார்.


நிருபர்களிடம், அவர் கூறியதாவது:வழக்கமாக, கர்நாடகாவில், அணைகள் முழுவதுமாக நிரம்பிய பின்னரே, தண்ணீர் திறந்து விடப்படும். காவிரி நதிநீர் நடுவர்மன்றம் நிர்ணயித்தபடி, மாதந்தோறும் குறிப்பிட்ட அளவு நீரை, திறந்து விடுவது இயலாத காரியம். நடுவர் மன்றத்திடமும், சுப்ரீம் கோர்ட்டிலும், எங்கள் ஆட்சேபனையை, பதிவு செய்துள்ளோம்."ஆண்டுதோறும் தமிழகத்துக்கு தேவையான, 192 டி.எம்.சி., அடி தண்ணீரை திறந்து விடுவதில், எவ்வித ஆட்சேபனையும் இல்லை. பருவ மழை காரணமாக, கர்நாடகா அணைகளில், நீர்மட்டம் உயர்ந்து வந்தாலும், 90 டி.எம்.சி., அடி தண்ணீரை, தமிழகத்துக்கு திறந்து விட வாய்ப்பில்லை' என, காவிரி கண்காணிப்பு குழுவிடம், திட்டவட்டமாக கூறிள்ளோம்.கர்நாடகா கோரிக்கைக்கு சாதகமாக, சுப்ரீம் கோர்ட்டும், கண்காணிப்பு குழுவும் நீதி வழங்கும் என்று எதிர்பார்க்கிறோம். தற்போது, கர்நாடகா அரசு சார்பாக, சுப்ரீம் கோர்ட்டில் வாதாடி வரும், மூத்த வழக்கறிஞர் நாரிமன் மீது, அரசுக்கு முழும் நம்பிக்கை உள்ளதால், அவரை மாற்றும் எண்ணம் எதுவுமில்லை.இவ்வாறு, அவர் தெரிவித்தார்.


பெங்களூரு பிரஸ் கிளப்பில், நிருபர்களிடம் முதல்வர் சித்தராமையா கூறியதாவது: நகரவாசிகளுக்கு, காவிரி நதியிலிருந்து விநியோகிக்கும் நீர், போதுமானதாக இல்லை. கூடுதல் நீரை, பயன்படுத்த வாய்ப்பளிக்கும்படி, சுப்ரீம் கோர்ட்டில், சிறப்பு மேல்முறையீடு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக, திறமையாக வாதிடும்படி, மாநிலம் சார்பான வழக்கறிஞரிடம் தெரிவித்துள்ளேன்.பெங்களூரு மக்களின் குடிநீருக்காக, குறைந்தபட்சம், 20 டி.எம்.சி., நீர், அவசியமாகிறது என்ற, மாநிலத்தின் கோரிக்கையை, காவிரி நதிநீர் ஆணையம் தீவிரமாக எடுத்து கொள்ளவில்லை. இதனால், எதிர்வரும் நாட்களில், குடிநீர் பிரச்னை தீவிரமாகும் அபாயம் உள்ளது.இவ்வாறு, அவர் தெரிவித்தார்.


தொடர்புடைய செய்திகள்:


Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (10)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
aangileya adivarudi Thamilan - madurai,இந்தியா
28-ஜூன்-201315:06:32 IST Report Abuse
aangileya adivarudi Thamilan தமிழக அரசைப்போல, இந்திய அரசியல் சாசனப்படி அவர்கள் கன்னட மக்களின் குரலை பிரதிபலிக்க கடமைப்பட்டவர்கள்.
Rate this:
10 members
0 members
0 members
Share this comment
Cancel
Pushparaj Ramakrishnan - Mannachanallur,இந்தியா
28-ஜூன்-201312:50:42 IST Report Abuse
Pushparaj Ramakrishnan இயற்கை அன்னை தமிழகத்துக்கு வாரி வழங்குவாள்...
Rate this:
0 members
0 members
16 members
Share this comment
Cancel
sumaithangi - chennai,இந்தியா
28-ஜூன்-201310:51:03 IST Report Abuse
sumaithangi நம்ம ஒழுங்க இருந்த ஏன் மத்தவங்க கிட்ட போய் கை என்தணும்????இருக்குற மலை,மரங்கள்,பெரிய எரிங்க..ஆற்றின் மணல் எல்லாத்தையும் அளவுக்கு அதிகமா அழிச்சிட்டு வரோம்...அதன் விளை வை இப்ப கொஞ்சம் கொஞ்சமா அறுவடை பண்றோம்.....வரும் முன் காப்பதே சிறந்த அரசுக்கு நல்லது....
Rate this:
0 members
0 members
5 members
Share this comment
Cancel
g.s,rajan - chennai ,இந்தியா
28-ஜூன்-201309:21:01 IST Report Abuse
g.s,rajan Pongadaa,Appa ungalukku Thamizh nattula irundhu current Kandippa kidaiyaathu. g.s.rajan,chennai.
Rate this:
2 members
4 members
35 members
Share this comment
Cancel
PRAKASH - CHENNAI,இந்தியா
28-ஜூன்-201308:53:19 IST Report Abuse
PRAKASH தமிழ்நாட்டு விவசாயிகளின் சாபம் உங்களை சும்மா விடாது /..
Rate this:
3 members
0 members
19 members
Share this comment
Cancel
யதார்தவாதி வெகுஜன விரோதி - சிராப்பள்ளி,இந்தியா
28-ஜூன்-201305:51:55 IST Report Abuse
யதார்தவாதி வெகுஜன விரோதி அடுத்த படியாக தமிழக அரசு இவர் மீதும் கோர்ட் அவமதிப்பு வழக்கு தொடரும். அது தொ ....ட.....ரு......ம்
Rate this:
3 members
1 members
48 members
Share this comment
Cancel
Krish Sami - Trivandrum,இந்தியா
28-ஜூன்-201303:16:51 IST Report Abuse
Krish Sami அப்படியே மெயின்டெயின் பண்ணுங்க. தமிழ் நாட்டு காவிரி கரையில் சிதம்பரத்தை நிற்கவும் சொல்லுங்கள். நீர் இல்லாத காவிரிதான். ஆனாலும், அவர் கரை சேர முடிகிறதா என்று பாருங்கள்
Rate this:
4 members
0 members
16 members
Share this comment
Cancel
Ambaiyaar@raja - Nellai to chennai ,இந்தியா
28-ஜூன்-201301:30:10 IST Report Abuse
Ambaiyaar@raja நீங்க என்னைக்கி தண்ணிய கொடுத்தீங்க, பருவ மழை வெள்ளம் வந்தால் தான எங்களுக்கு அது தானாகவே வரும் இப்போது அது தான் நடக்கின்றது.
Rate this:
3 members
1 members
78 members
Share this comment
Cancel
28-ஜூன்-201301:09:26 IST Report Abuse
ரமேஷ்பாபு ராமதாஸ் அப்படி எல்லாம் சொல்லக் கூடாது. கேரளாவின் வயநாடு கபினியின் முக்கிய நீர்பிடிப்பு பகுதியாகும்.கேரளாவின் மேற்கு தொடர்ச்சி பகுதிகளில் , குறிப்பாக வயனாட்டிலும், மழை தொடரும் பட்சத்தில் , இனி கபிணி அணைக்கு வரும் நீர் முழுவதையும் நீங்கள் வெளியேற்றியே ஆக வேண்டும்.கபினியில் வெளியேற்றப் படும் நீர் நேரடியாக மேட்டூரை வந்தடையும் இடையில் எந்த அணையும் இல்லை . புதிதாக அணை கட்டினால் தான் உண்டு .எனவே இனிமேல் , மழை பெய்யும் பட்சத்தில் தமிழகத்துக்கு தண்ணீர் தர முடியாது என்று ஒரு மாநிலத்தின் நீர் வளத்துறை அமைச்சராகிய நீங்கள் சொல்ல முடியாது . அகில உலக நீர் வளத் துரையின் அதிபதி வருண பகவான் தான் அப்படி நினைக்க வேண்டும். எனவே , இதற்கு மேலும் தொடரும் பருவ மழையானது தமிழ் நாட்டுக்கு தான் சாதகம் .கன்னத்தில் போட்டு கொள்ளுங்கள். இந்த வருடம் நீங்கள் விரும்பா விட்டாலும், தமிழகத்துக்கு தண்ணீர் உறுதி , அதை இன்னும் ஒன்று அல்லது இரண்டு வாரங்களில் கண் கூடாக காணுங்கள்.
Rate this:
1 members
1 members
111 members
Share this comment
Cancel
Bala Subramani - Pittsburgh,யூ.எஸ்.ஏ
28-ஜூன்-201300:10:55 IST Report Abuse
Bala Subramani டாமே உடைந்தாலும் தண்ணீர் திறந்து விடமாட்டோம் என்று சொல்லுங்கள் அமைச்சரே.
Rate this:
0 members
0 members
77 members
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
( OR )Login with
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.