ராஜ்யசபா தேர்தலில் ஓட்டு போட தடுமாறிய எம்.எல்.ஏ., க்கள்| Dinamalar
பதிவு செய்த நாள் :
கருத்துகள் (19)  கருத்தை பதிவு செய்ய
எழுத்தின் அளவு:

சென்னை : ராஜ்யசபா தேர்தலில், எம்.எல்.ஏ.,க்கள் மற்றும் அமைச்சர்களில் பெரும்பாலானோர், ஓட்டு போடும் போது, பதட்டத்தில் தடுமாறினர்.


தமிழகத்திலிருந்து, ஆறு ராஜ்யசபா எம்.பி.,க்களை தேர்வு செய்ய, நேற்று ஓட்டுப்பதிவு நடந்தது. சென்னை தலைமைச் செயலகம், பிரதான கட்டடத்தின், தரை தளத்தில், சட்டசபை குழுக்கள் கூடும் அறையில், ஓட்டுப் பதிவிற்கான ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

தயார் நிலை:காலை, 9:00 மணிக்கு, தேர்தல் கமிஷன் அறிவித்தபடி, ஓட்டுப்பதிவு துவங்கியது. ஓட்டுப்பதிவு அறையில், அரசியல் கட்சிகளின், அதிகாரப்பூர்வ ஏஜன்ட்கள், அவர்களுக்கு ஒதுக்கப்பட்ட இருக்கையில் அமர்ந்திருந்தனர். அடுத்து ஓட்டுச்சாவடி ஏஜன்ட்கள் இருந்தனர். அவர்கள் முன்பாக, தேர்தல் நடத்தும் அதிகாரி ஜமாலுதீன் அமர்ந்திருந்தார். அவர் முன், ஓட்டுப் பெட்டி வைக்கப்பட்டிருந்தது.அவர் அருகில், ஓட்டுச்சாவடி அலுவலர்கள், மூன்று பேர் அமர்ந்திருந்தனர். அவர்கள் இருக்கை எதிரில், ஓட்டு போட தடுப்பு அமைக்கப்பட்டிருந்தது. தடுப்பு அருகில், தேர்தல் கமிஷன் மேற்பார்வையாளர், பிரவீன் குமார் அமர்ந்திருந்தார்.

தாமதம்:காலை, 11:00 மணி வரை, யாரும் ஓட்டு போடவில்லை. காலை, 11:20 மணிக்கு, முதல்வர் ஜெயலலிதா வந்தார். அவர், 11:25 மணிக்கு, ஓட்டு போட்டார். அதன்பிறகு, அ.தி.மு.க., - கம்யூனிஸ்ட் எம்.எல்.ஏ.,க்கள் ஓட்டு போட்டனர். தேர்தலில் எவ்வாறு ஓட்டு போட வேண்டும் என, எம்.எல்.ஏ.,க்களுக்கு, கட்சி தலைமை சார்பில், பயிற்சி அளிக்கப்பட்டிருந்தும், ஓட்டுப் போட வந்த,

எம்.எல்.ஏ.,க்கள் மற்றும் அமைச்சர்கள், பதட்டத்துடன் இருந்தனர்; பெரும்பாலானோர் தடுமாறினர்.எம்.எல்.ஏ.,க்கள் உள்ளே நுழைந்ததும், ஓட்டுப் பதிவு அலுவலர், அவரது பெயர், வரிசை எண் ஆகியவற்றை சத்தமாக படித்தார். அடுத்த நபர், ஓட்டுச் சீட்டை கொடுத்தார். மூன்றாவது நபர், ஓட்டு சீட்டை மடித்து, ஓட்டு போட, "ஸ்கெட்ச்' பேனா கொடுத்தார். அதை பெற்றுக் கொண்ட எம்.எல்.ஏ.,க்கள், ஓட்டுப் போடுவதற்காக அமைக்கப்பட்டிருந்த தடுப்பு உள்ளே சென்று, ஓட்டை பதிவு செய்து, அதை கட்சி அதிகாரப்பூர்வ ஏஜன்டிடம் காண்பித்து, ஓட்டுப் பெட்டியில் போட்டனர்.


எதிர்ப்பு:காலை, 11:50 மணிக்கு, தே.மு.தி.க., அதிருப்தி வேட்பாளர் சாந்தி, ஓட்டு போட வந்தார். அவர் ஓட்டு சீட்டை, தே.மு.தி.க., ஏஜன்ட் வெங்கடேசனிடம், வேகமாக காண்பித்து விட்டு, ஓட்டுப் போட சென்றார். உடனே,
வெங்கடேசன்," காண்பிக்கவில்லை' என்றார். தேர்தல் அதிகாரி, சாந்தியிடம், "சீட்டை காண்பித்து விட்டு வந்து ஓட்டுப் போடுங்கள்' என்றார். அதைத் தொடர்ந்து, அவர் மீண்டும் வெங்கடேசனிடம் ஓட்டு சீட்டை காண்பித்துவிட்டு, ஓட்டளித்தார்.அமைச்சர் ரமணா, பதட்டத்துடன் ஓட்டளித்து விட்டு, எப்படி வெளியில் செல்ல வேண்டும் என, அதிகாரிகளிடம் கேட்டு சென்றார். அமைச்சர் வைத்தியலிங்கமும், எந்த பக்கம் செல்ல வேண்டும் எனத் தெரியாமல் தடுமாறினார்.அ.தி.மு.க., - எம்.எல்.ஏ., செல்வி ராமஜெயம், ஓட்டு போட்டதும் கடவுளை வணங்கினார். பகல், 12:06 மணிக்கு, தி.மு.க.,வை சேர்ந்த துரைமுருகன் உள்ளே வந்து, தேர்தல் மேற்பார்வையாளரிடம், ஓட்டுப்பதிவு வேகமாக செல்கிறதா எனக் கேட்டு சென்றார். ஒவ்வொரு

Advertisement

எம்.எல்.ஏ.,விற்கும், எப்படி ஓட்டு போட வேண்டும் என, தேர்தல் அதிகாரி எடுத்துரைத்தும், வந்தவர்கள் தடுமாறினர்.


தே.மு.தி.க., அதிருப்தி எம்.எல்.ஏ.,க்கள், ஏழு பேரும், தங்கள் ஓட்டுகளை, தே.மு.தி.க., ஏஜன்டிடம் காண்பித்த பிறகு, ஓட்டளித்தனர்.பகல், 1:10 மணிக்கு, தி.மு.க., தலைவர் கருணாநிதி ஓட்டளித்தார். பகல், 1:25 மணிக்கு, விஜயகாந்த் ஓட்டளித்தார். கட்சி தலைவர்கள் ஓட்டளித்தபோது, பத்திரிகையாளர்கள் அனுமதிக்கப்படவில்லை.

தேடல் :

தி.மு.க.,- எம்.எல்.ஏ., பெரிய கருப்பன், ஓட்டுச்சீட்டில் ஓட்டை பதிவு செய்துவிட்டு, அதை
காண்பிக்க ஏஜன்டை தேடினார். அதை கண்ட, ஏஜன்ட் கம்பம் ராமகிருஷ்ணன், "இங்கிருக்கிறேன்' எனக் குரல் கொடுத்ததும், அவரிடம் சென்றார்.தே.மு.தி.க.,- எம்.எல்.ஏ., அருண் சுப்பிரமணியம், ஓட்டுச்சீட்டில், ஓட்டை பதிவு செய்ததும், அதே இடத்தில் நின்றபடி, ஓட்டு சீட்டை பிரித்து காண்பித்தார். அதை கண்ட, தேர்தல் நடத்தும் அதிகாரி, "அங்கிருந்து காண்பிக்கக் கூடாது. உங்கள் ஏஜன்டிடம் சென்று காண்பிக்க வேண்டும்' என்றதும், அவர் ஏஜன்டிடம் சென்று காண்பித்தார்.பெரும்பாலான, எம்.எல்.ஏ.,க்கள், அமைச்சர்கள், ஓட்டு போட்டு, வந்த வழியே திரும்ப முயன்றனர். அவர்களை மாற்று வழியில் செல்லும்படி, அதிகாரிகள் அனுப்பி வைத்தனர். போட்டோகிராபர்கள் நின்ற திசையில், முதுகை காண்பித்தபடி ஓட்டளித்தவர்களை, திரும்பி நின்று ஓட்டளிக்கும்படி, தேர்தல் அதிகாரி அறிவுறுத்தினார். பலர் ஓட்டை போட்ட பிறகு, "போஸ்' கொடுத்தனர். சிலர், "ஸ்கெட்ச்' பேனாவுடன் செல்ல முயன்றனர். அவர்களிடம் அதிகாரிகள் பேனாவை திரும்ப வாங்கினர்.
Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (19)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
g.s,rajan - chennai ,இந்தியா
30-ஜூன்-201316:38:35 IST Report Abuse
g.s,rajan உங்களை நம்பி இந்த நாட்டை ஒப்படைச்சா அவ்வளவுதான் ஜி.எஸ்.ராஜன் சென்னை
Rate this:
Share this comment
Cancel
msyavaram seket - chennai  ( Posted via: Dinamalar Android App )
28-ஜூன்-201314:08:22 IST Report Abuse
msyavaram seket பொதுவாகவே இந்த வாக்களிக்கும் முறை கடினமானது. அதனால் இதி்ல் படித்தவர் நல்லவர் கெட்டவர் என கருத்து தேவையில்லை.
Rate this:
Share this comment
Cancel
Santhoshkumar.N - Doha,கத்தார்
28-ஜூன்-201313:11:59 IST Report Abuse
Santhoshkumar.N நாசமா போச்சி போ
Rate this:
Share this comment
Cancel
amukkusaamy - chennai,இந்தியா
28-ஜூன்-201312:38:57 IST Report Abuse
amukkusaamy முதுவேனில் முடிந்து இளவேனில் தொடங்கிற்று..அட நான் பருவ காலங்களை சொல்றேனுங்க..நேத்திக்கு நல்ல மழைங்க...
Rate this:
Share this comment
Cancel
amukkusaamy - chennai,இந்தியா
28-ஜூன்-201312:32:59 IST Report Abuse
amukkusaamy CLASSIC EXAMPLE OF CLASSICAL TAMILIANS. செம்மொழி தமிழர் காண், செம்மையில்லா மாக்கள் இவரே அன்றோ..
Rate this:
Share this comment
Cancel
anandhaprasadh - Bangalore,இந்தியா
28-ஜூன்-201312:30:35 IST Report Abuse
anandhaprasadh நல்ல வேளை... இலவச லாப்டாப் MLA-க்களுக்கு குடுக்கலை... அவங்க அதை ஆன் பண்ணி யூசர் நேம் பாஸ்வோர்டு டைப் பண்ண கத்துக்கறதுக்குள்ள அடுத்த அசெம்ப்ளி எலக்ஷன் வந்துடும்...
Rate this:
Share this comment
Cancel
Baskar,G - Perambalur,இந்தியா
28-ஜூன்-201312:24:56 IST Report Abuse
Baskar,G எந்த கட்சிக்காரர் எத்தனை தும்மல் போட்டார் என்பதையும் நுணுக்கமாக பார்த்திருப்பீர்கள் போல?
Rate this:
Share this comment
Cancel
Pugazh V - Coimbatore / Cochin,இந்தியா
28-ஜூன்-201311:35:14 IST Report Abuse
Pugazh V ஸ்கெட்ச் பேனாவை சுடப் பார்த்தது தான் ஹை லைட். வாக்களித்ததும் சாமி கும்பிட்டாரா, ஜெயலலிதா இருக்கும் திசை பார்த்து கும்பிட்டாரா? 9 மணியிலிருந்து தேர்தல் அதிகாரிகள் முதல்வர் வரும் வரை 2 மணி நேரம் காத்திருக்க வேண்டி வந்ததும் சூப்பர்.
Rate this:
Share this comment
Cancel
R.Saminathan - mumbai,இந்தியா
28-ஜூன்-201310:35:20 IST Report Abuse
R.Saminathan கட்சிக்கே அதிருப்தி எம்.எல்.ஏ.,க்கள் செய்யும் தவறுகளை மக்கள் ஏற்றுக்கொள்ளக்கூடாது..
Rate this:
Share this comment
Cancel
mirudan - kailaayam,இந்தியா
28-ஜூன்-201310:28:26 IST Report Abuse
mirudan எம்.எல்.எ ஒன்னாம் கிளாசும் மூன்றாம் கிளாசும் படித்தவர்களாக இருப்பதால் இந்த குழப்பம் ?
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.