எரிவாயு, மின் கட்டணம், உரம் விலை உடனடியாக உயராது: சிதம்பரம் விளக்கம்
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement
எழுத்தின் அளவு:
Advertisement

""இயற்கை எரிவாயுவை, உற்பத்தி செய்யும் நிறுவனங்களிடம் இருந்து, கூடுதல் விலை கொடுத்து வாங்க, மத்திய அரசு முடிவு செய்திருந்தாலும், பொதுமக்களுக்கான விற்பனை விலை அதிகரிக்காது. அத்துடன், மின் கட்டணமோ அல்லது உரங்களின் விலையோ, உடனடியாக உயர வாய்ப்பு இல்லை,'' என, மத்திய நிதி அமைச்சர் சிதம்பரம் கூறினார்.
பொருளாதார விவகாரங்களுக்கான, மத்திய அமைச்சரவை குழு கூட்டம், பிரதமர் மன்மோகன் சிங் தலைமையில், நேற்று முன் தினம் நடந்தது. அப்போது, பொதுத்துறை மற்றும் தனியார் துறை நிறுவனங்களிடமிருந்து வாங்கும், இயற்றை எரிவாயுவின் விலையை, அடுத்த ஆண்டு ஏப்ரல் முதல் உயர்த்துவது என்பது உட்பட, பல முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டன. இயற்கை எரிவாயு விலையை உயர்த்த, மத்திய அரசு முடிவு செய்துள்ளதால், அதை நம்பியிருக்கும் பல துறைகளிலும், விலையேற்றத்தின் தாக்கம் எதிரொலிக்கும் என்ற பரபரப்பு உருவாகியுள்ளது.


யூனிட் எவ்வளவு?

பொதுத்துறை நிறுவனங்களான, ஓ.என்.ஜி.சி., ஆயில் இண்டியா மற்றும் தனியார் நிறுவனமான ரிலையன்ஸ் போன்றவை, இயற்கை எரிவாயு உற்பத்தியில் ஈடுபட்டுள்ளன. இந்த நிறுவனங்களிடம் இருந்து, எரிவாயுவை, அரசு விலை கொடுத்து வாங்கி வருகிறது. தற்போது, ஒரு யூனிட் எரிவாயுவுக்கு, 247 ரூபாய், அரசு கொடுக்கிறது. மத்திய அமைச்சரவை நேற்று முன் தினம் எடுத்த முடிவால், ஒரு யூனிட் எரிவாயுவுக்கு, 495 ரூபாய் கொடுக்க நேரிடும்.

இந்நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக, டில்லியில் நேற்று நிருபர்களிடம் பேசிய, மத்திய நிதி அமைச்சர் சிதம்பரம் கூறியதாவது: பொதுமக்கள் வாங்கும் எரிவாயு விலை ஏற்றப்பட உள்ளதாக பலரும் கருதுகின்றனர்; அது உண்மையல்ல. இயற்கை எரிவாயுவை உற்பத்தி செய்யும் நிறுவனங்களுக்கு, தற்போது அரசு ஒரு விலை கொடுத்து வருகிறது. அந்த விலையை உயர்த்தவே, மத்திய அமைச்சரவை முடிவு செய்துள்ளது.


கட்டணம் உயராது:

இந்த விலை உயர்வு காரணமாக, எரிவாயுவை நம்பியுள்ள மின்துறை, உரத்துறை ஆகியவற்றில் தாக்கம் ஏற்படலாம் என்ற பேச்சு எழுந்துள்ளது. இதுதொடர் பாக, மின்துறை அமைச்சகம் மற்றும் உர அமைச்சகம் என, இரண்டுமே, தங்களின் பிரச்னைகளை மத்திய அரசிடம் தெரிவித்துள்ளன. அவற்றை உரிய முறையில் அரசு அணுகும். இருந்தாலும், தற்போதைய விலை உயர்வு முடிவால், மின் கட்டணங்கள் உயர்த்தப்படாது. உரங்களின் விலை உயரும் என, யாரும் அச்சம் கொள்ளத் தேவையில்லை. விலையேற்றம் எதுவும் உடனடியாக இருக்காது. எரிவாயு உற்பத்தியில், உள்நாட்டு நிறுவனங்களில் தேக்கநிலை காணப்படுகிறது. கடந்த, நான்கு ஆண்டுகளாக, உற்பத்தி சரியாக இல்லை. எரிவாயுவை உற்பத்தி செய்யும் பொதுத்துறை நிறுவனங்கள் எல்லாம், அதிகபட்ச உற்பத்தி இலக்கை எட்ட முடியாத நிலை காணப்படுகிறது. அதேபோல், தனியார் நிறுவனங்களின் உற்பத்தியும், மிக குறைவாகவே உள்ளது.


இறக்குமதி:

நம்நாட்டின் எரிவாயு தேவையில், 70 சதவீதம், உள்நாட்டு நிறுவனங்கள் மூலம் பூர்த்தி செய்யப்படுகிறது. 30 சதவீதம் மட்டுமே, வெளிநாட்டிலிருந்து, இறக்குமதி செய்யப்படுகிறது. அதேநேரத்தில், உள்நாட்டு எரிவாயு நிறுவனங்களுக்கு, ஒரு யூனிட் எரிவாயுவுக்கு, 247 ரூபாய் வழங்கப்படுகிறது. இறக்குமதி செய்யப்படும் எரிவாயுவுக்கோ, ஒரு யூனிட்டிற்கு, 767 ரூபாய் தர வேண்டியுள்ளது. எரிவாயு விஷயத்தில், உள்நாட்டு உற்பத்தியை அதிகரிக்க வேண்டும்; இல்லையெனில், முழுக்க முழுக்க, இறக்குமதியை சார்ந்திருக்க வேண்டியது நேரிடும். அதாவது, உள்நாட்டு நிறுவனங்கள் மூலம், 30 சதவீதமும், இறக்குமதி மூலம், 70 சதவீதமும், எரிவாயு தேவையை பூர்த்தி செய்ய வேண்டிய சூழ்நிலை உருவாகலாம். அந்த நிலை ஏற்பட்டால், நாட்டின் பொருளாதாரம் தாங்காது.


முதலீடு:

அதனால் தான், உள்நாட்டு நிறுவனங்களிடம் இருந்து வாங்கும், எரிவாயுவுக்கு, கூடுதல் விலை கொடுக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த நடவடிக்கையால், எரிவாயு துறையில், புதிய முதலீடுகள் வரும். வெளிநாடுகளில் முதலீடு செய்யும் நிறுவனங்கள் எல்லாம், நம்நாட்டிற்குள்ளேயே முதலீடு செய்ய முன்வரும். இவ்வாறு சிதம்பரம் கூறினார்.

- நமது டில்லி நிருபர் -

Advertisement


தொடர்புடைய செய்திகள்:


Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (17)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
KUMUKKI - male,மாலத்தீவு
01-ஜூலை-201312:21:01 IST Report Abuse
KUMUKKI கழுதை கெட்டால் குட்டி சுவர்
Rate this:
Share this comment
Cancel
kumaresan.m - hochimin ,வியட்னாம்
29-ஜூன்-201317:47:26 IST Report Abuse
kumaresan.m " என்னவோ போங்க .....மேதைகள் ....சொக்காளிகள் .....நாளும் தெரிந்த வல்லவர்கள் ....கதர் தரித்த நல்லவர்கள் ... என்றெல்லாம் சொல்வதை கேட்கிறோம் ....ஆனால் பரிட்சை என்று வந்து விட்டால் கேட்ட கேள்விக்கு பதில் எழுதாமல் பக்கம் பக்கமாக கதை மட்டும் எழுதி கோழி முட்டை வாங்குவது ஏன் ???
Rate this:
Share this comment
Cancel
kumaresan.m - hochimin ,வியட்னாம்
29-ஜூன்-201317:42:53 IST Report Abuse
kumaresan.m " இப்பொழுது உயராது ஆனால் பிறகு உயரும் இதற்க்கு எதற்கு விளக்கம் ??? மேற்கொண்டு உயராமல் இருப்பதற்கு அரசு என்ன நடவடிக்களை எடுத்து உள்ளது ???என்பதுதான் இந்திய மக்களின் எதிர்ப்பார்ப்பு "
Rate this:
Share this comment
Cancel
S Rama(samy)murthy - karaikudi,இந்தியா
29-ஜூன்-201317:26:50 IST Report Abuse
S Rama(samy)murthy இந்தியாவின் சாபங்கள் சுப ராம karaikudi
Rate this:
Share this comment
Cancel
swaminathan - madurai,இந்தியா
29-ஜூன்-201316:48:32 IST Report Abuse
swaminathan இது மூன்றும் உயராது என்றால் வேற எதாவது உத்தேசம் இருக்கா சார் மிச்ச மீதிய உருவ
Rate this:
Share this comment
Cancel
p.boopathy enkira Boopathiyar - chennai,இந்தியா
29-ஜூன்-201316:39:40 IST Report Abuse
p.boopathy enkira Boopathiyar விலை உயராது.., அப்படி என்றால் விலை குறையுமா மக்களுக்கு சரியாக சொல்லவேண்டும். பெட்ரொலிய அரசு நிறுவனங்கள் தனியாருக்கு பங்குகளை விற்று நிர்வாகத்தை சீர்படுத்தினால் பெட்ரொலிய பொருள்கள் விலையும் அதனை சார்ந்து விலை உயர்வுகள் சரியாக கட்டுபாட்டுக்குள் வரும். அடிக்கடி விலைஉயர்வு ஏற்படாது. மேலும் வீடு மனை விற்பனை அரசு வங்கிகளை முகவர்களாக நியமனம் செய்து நேர்மையான வீடு/மனை விற்பனை முறையும் உரிய வெளிப்படையான பதிவு கட்டணமும் நடைபெறும். இதனால் தனியார் முகவரால் நடைபெறும் வீடு / மனை மோசடிகள் முற்றலும் தடுக்கப்பட்டும். பண நடவடிகைகள் வங்கி காசோலை மூலம் நடைபெறும். கறுப்பு பணபுழக்கம் தடுக்கப்படும். வீடு/மனைகள் விலை உயர்வுகள் கட்டுபடுத்தப்பட்டு மக்கள் வாங்கும் நிலைக்கு வரும். இதனால் பொருளாதார சரிவு முற்றிலும் தடுக்கப்படும். ரூபாய் மதிப்பு பாதுகாக்கப்படும். இப்படித்தான் ஒரு நல்ல மத்திய நிதி அமைச்சர் நாட்டு மக்களுக்கு சொல்லவேண்டும். செய்ய வேண்டும் - பூபதியார்
Rate this:
Share this comment
Cancel
Soundar - Chennai,இந்தியா
29-ஜூன்-201311:37:19 IST Report Abuse
Soundar உடனடியாக உயராது... நான் இந்த அறிக்கையை படித்து முடித்தவுடன் உயரும்... மக்களின் கஷ்டத்தை புரிந்து கொண்டு... கொஞ்சம் கொஞ்சமாக தான் நாங்கள் உயர்த்துகிறோம்... வாகனம் வாங்கும் திறன் உள்ள மக்களுக்கு பெட்ரோல் போடா வசதி இருக்காதா... நங்கள் (காங்கிரெஸ் அமைச்சர்கள்) எல்லாம் மக்கள் கஷ்டத்தை உணராதவர்களா...
Rate this:
Share this comment
Cancel
siva - Chennai,இந்தியா
29-ஜூன்-201310:33:26 IST Report Abuse
siva இதுவரைக்கு ஏத்துனதுக்கு மட்டும் மக்கள் பொங்கிட்டாங்கலா என்ன? நீங்க எதுவும் சொல்லவேண்டாம் நீங்க நினைப்பதை செய்யலாம் ? இதுவரைக்கும் அப்படிதானே இப்போ என்ன புதுசா ??????
Rate this:
Share this comment
Cancel
PRAKASH - AHMEDABAD, GUJARAT,இந்தியா
29-ஜூன்-201309:03:25 IST Report Abuse
PRAKASH அதெல்லாம் இருக்கட்டும் .. நீங்க எப்போ ஆட்சிய விட்டு போவீங்க ?
Rate this:
Share this comment
Cancel
appu - madurai,இந்தியா
29-ஜூன்-201308:40:23 IST Report Abuse
appu உடனடியாக உயராது...ஆனால் உயரவேண்டிய நேரத்தில்(கூடிய விரைவில்) உயரும்...வழக்கம் போல...
Rate this:
Share this comment
சு கனகராஜ் - chennai -33,இந்தியா
29-ஜூன்-201310:51:15 IST Report Abuse
சு கனகராஜ் உடனடியாக உயர்த்துங்கள் மக்கள் எல்லாரும் உங்களை போல கோடீசுவரர்களாக தானே இருக்கிறார்கள் ...
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.
மேலும் செய்திகள்