Karunanidhi is an inactive leader: Parithi Ilamvazhuthi | செயல்படாத தலைவர் கருணாநிதி: பரிதி இளம்வழுதி சிறப்பு பேட்டி| Dinamalar

அரசியல் செய்தி

தமிழ்நாடு

செயல்படாத தலைவர் கருணாநிதி: பரிதி இளம்வழுதி சிறப்பு பேட்டி

Added : ஜூன் 28, 2013 | கருத்துகள் (29)
Advertisement
Karunanidhi is an inactive leader: Parithi Ilamvazhuthi

சென்னை: கடந்த, 1991ம் ஆண்டு முதல், 1996ம் ஆண்டு வரை நடைபெற்ற, அ.தி.மு.க., ஆட்சியில், சட்டசபையில், தி.மு.க., சார்பில், ஒரேயொரு, எம்.எல்.ஏ., வாக பரிதி இளம்வழுதி அதிரடியாக பணியாற்றி, தி.மு.க., வுக்கு குரல் கொடுத்தார். 1996 முதல், 2001ம் ஆண்டு வரை துணை சபாநாயகர் பதவி வகித்தார். பின், 2006 முதல், 2011ம் ஆண்டு வரை, செய்தித் துறை அமைச்சராக பணியாற்றினார்.
ஆறு முறை எம்.எல்.ஏ., வாக பணியாற்றிய அவர், கடந்த சட்டசபை தேர்தலில், சென்னை, எழும்பூர் தொகுதியில் போட்டியிட்டு, குறைந்த ஓட்டு வித்தியாசத்தில் தோல்வியை தழுவியதற்கு, சொந்த கட்சியின் உள்குத்து தான் காரணமாக அமைந்தது. தேர்தலில், தனக்கு எதிராக உள்குத்தில் ஈடுபட்டவர்களை, தி.மு.க., விலிருந்து வெளியேற்றிய பின், மீண்டும் தி.மு.க., வில் சேர்த்ததும், அதிருப்தி அடைந்த அவர், நேற்று காலை, தி.மு.க., விலிருந்து விலகி, முதல்வர் ஜெயலலிதா முன்னிலையில் அ.தி.மு.க.,வில் இணைந்தார்.

"தினமலர்' நாளிதழுக்கு பரிதிஇளம் வழுதி அளித்த சிறப்பு பேட்டி:

* தி.மு.க., வில் துணை சபாநாயகர், அமைச்சர், துணைப் பொதுச்செயலர் போன்ற பதவிகளை அனுபவித்த நீங்கள், தி.மு.க., விலிருந்து வெளியேற என்ன காரணம்?


தி.மு.க., வில் தொண்டர்களுக்கோ, காலமெல்லாம் கட்சிக்காக உழைத்தவர்களுக்கோ, எந்த முக்கியத்துவமும் கிடையாது. ஒரு குடும்பத்தின் நலனுக்காக, அக்கட்சி முழுமையாக பலி கொடுக்கப்பட்டு வருகிறது. கட்சி, முழுக்க முழுக்க, கருணாநிதியின் குடும்பத்தின் கட்டுப்பாட்டில் உள்ளது. இப்போதைக்கு கருணாநிதி செயல்பட முடியாத ஒரு தலைவராகவும், அதிகாரமற்ற ஒரு முதியவராகவும் மட்டுமே இருக்கிறார். தி.மு.க., என்ற கட்சியோ, குடும்பமோ இப்போது அவரது கட்டுப்பாட்டில் இல்லை. கட்சியில், குடும்பத்தினர் ஆதிக்கம் தலைவிரித்து ஆடுகிறது. குடும்ப பாசம் காரணமாக, கருணாநிதி, தகுதியற்ற, தன் வாரிசுகளை கட்சி பதவிகளிலும், அதிகார பீடங்களிலும், தூக்கி வைத்ததன் விளைவாக, தி.மு.க., தொண்டர்களும், முன்னணி தலைவர்களும், மன உளச்சலில் உள்ளனர். எனக்கும், இதே அனுபவம் தான் ஏற்பட்டது. தலைமை பண்புகள் அற்ற ஸ்டாலின் நடவடிக்கைகளால், கட்சிக்காக, காலமெல்லாம் உழைத்த நான், "தன்மானம்' காக்க, "மவுனமாக' வெளியேற வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

* கடந்த, 2011 சட்டசபை தேர்தலில் உங்களுக்கு எதிராக வேலை செய்தவர்களை, ஸ்டாலின் ஆதரித்ததால் தான் பிரச்னை ஏற்பட்டதாக கூறுகின்றனரே?


ஆம்; கடந்த சட்டசபை தேர்தலில், நான் வெற்றி பெறக் கூடாது என, கட்சியில் சிலர், எனக்கு எதிராக வேலை செய்தனர். அவர்களைப் பற்றி, முதலில் ஸ்டாலினிடம் தான் புகார் செய்தேன். ஆனால், என் புகாரை அவர் கண்டுக் கொள்ளவில்லை. இதனால், சில நாள் கழித்து, அறிவாலயத்தில், கருணாநிதியை பார்த்த போது, அவர், "என்னய்யா... நீ... 202 ஓட்டுகளில் தோற்று விட்டாய்' என்றார். உடனே, நான், தேர்தலில் எனக்கு எதிராக வேலை செய்தவர்களை பற்றி கூறினேன். என்ன ஏது என்ற விவரத்தை கேட்டவர், "நீ ஏன் என்னிடம் சொல்லவில்லை?' எனக் கேட்டார். நான் உடனே, "ஸ்டாலினிடம், ஏற்கனவே புகார் கூறிவிட்டேன்' என்றேன். அதை கேட்டு கோபப்பட்ட அவர், எனக்கு எதிராக வேலை செய்தவர்களை உடனடியாக கட்சியை விட்டு நீக்கும்படி உத்தரவிட்டார்; ஆனால், மறு வாரமே ஸ்டாலின் அழுத்தத்தால், கட்சியை விட்டு நீக்கப்பட்ட அந்த நபர்கள், மறுபடியும் கட்சியில் சேர்க்கப்பட்டனர். இது பற்றி, நான் கருணாநிதியிடம் சென்று முறையிட்டதற்கு, "நான் என்ன செய்வது?' என, இயலாமையோடு கையை விரித்து விட்டார். பின், அங்கு இருப்பது சரியாக இருக்காது என, அங்கிருந்து விலக நினைத்து, அவர்கள் தந்த, துணைப் பொதுச் செயலர் பதவியை ராஜினாமா செய்தேன். பின் மவுனமாக வெளியேறி விட்டேன்.

* அ.தி.மு.க., வில் சேர என்ன காரணம்?

நான் ஏற்கனவே கூறியது போல், கருணாநிதி கட்டுப்பாட்டில் கட்சி இல்லாததால், தி.மு.க., என்பது, குடும்ப உறுப்பினர்களின் விளையாட்டு மைதானமாகி விட்டது. இதனால், மனவலிக்கு ஆளாகியவர்களில் நானும் ஒருவன். இவ்வளவு நாள் நாங்கள் எதிர்த்து வந்த, அ.தி.மு.க., வில் மட்டும், இன்று வலுவாக ஒரே தலைமை இருப்பது காண முடிகிறது. ஜெயலலிதா ஒருவரே இன்றைய இந்தியாவில், ஒரு கம்பீரமான தலைவராக இருக்கிறார். இந்த நிலைமையில் அந்த தலைமையை ஏற்றுக் கொள்வதே என் மனக் காயங்களுக்கு, மருந்தளிக்கும் என, நான் கருதியதால், ஜெயலலிதாவை சந்தித்து, என்னை, அ.தி.மு.க.,வில் இணைத்துக் கொண்டேன்.

* அ.தி.மு.க., வில் உங்களுக்கு பதவி கிடைக்குமா?

கடந்த இரு ஆண்டுகளாக, மனப்புழுக்கத்தில் இருந்த நான், இன்று மனநிறைவாக இருக்கிறேன்; பதவிகளை விட, மனநிறைவு தான் முக்கியம். இவ்வளவு நாள், அ.தி.மு.க., கட்சியையும், அதன் தலைமையையும், அதன் தொண்டர்களையும் எதிர்த்து களத்தில் நின்ற என்னை, அவர்கள் இன்முகத்தோடு ஏற்றுக்கொண்டதை, பெரிய அங்கீகாரமாக கருதுகிறேன். புதியதாக முகாம் மாறி வந்திருக்கும் நான், அ.தி.மு.க., வில் ஒரு தொண்டனாகவே இருக்க விரும்புகிறேன்.

* முதல்வரை நேரில் சந்தித்த போது என்ன உணர்ந்தீர்கள்?


அவரை மிக கடுமையாக விமர்சித்ததில் நானும் ஒருவன். ஆனால், கருணாநிதியின் கபட வேடத்தை முழுமையாக புரிந்து கொண்ட பின், ஜெயலலிதா எவ்வளவோ உயர்வானவர் என்பதை உணர்ந்து கொண்டேன். என்னை விட, கடுமையாக அவரை விமர்சித்த பலரையும், அவர் மன்னித்து ஏற்று, அவர்களுக்கு அரசியல் ஏற்றம் தந்ததையும் பார்த்திருக்கிறேன். ஒரு சிறு குற்ற உணர்ச்சியுடன் தான், அவரை சந்திக்க சென்றேன். ஆனால், அவர் என்னிடம் காட்டிய பரிவு, என்னை நெகிழச் செய்து விட்டது. கருணாநிதிக்காக, தி.மு.க., வுக்காக பல மேடைகளில், அ.தி.மு.க., வுக்கு எதிராக பேசினேன்; இனிமேல், அதற்காக பிரயாச்சித்தம் தேடப் போகிறேன்.

* தி.மு.க., வை பற்றி ...

தி.மு.க., குடும்ப சொத்தாக மாறிவிட்டது. அதை உருவாக்கிய அண்ணாதுரையே திரும்பி வந்தாலும், அதை, கருணாநிதி குடும்பத்திலிருந்து மீட்க முடியாது. தொண்டர்களின் உழைப்பையும், உணர்வையும், தியாகங்களின் பலனையும், ஒரு குடும்பமே, இன்று அறுவடை செய்து வருகிறது. கருணாநிதி தன் குடும்ப உறுப்பினர் நலனுக்காக, எதையும் செய்ய தயங்க மாட்டார். இதற்கு சமீபத்திய உதாரணம் என்னவென்றால், மூன்று மாதம் முன், இலங்கை தமிழர்களை காக்க தவறியதாக குற்றம்சாட்டி, "கூடா நட்பு கேடா முடியும்' எனக் கூறி, காங்கிரஸ் கூட்டணியிலிருந்து வெளி வருவதாக கருணாநிதி அறிவித்ததார். அப்போது, தி.மு.க., தொண்டர்கள் பலர், அறிவாலயத்தில் கூடி, பட்டாசு வெடித்து இனிப்பு வழங்கி, தங்கள் மகிழ்ச்சியை கொண்டாடினர். அந்த வெடியோசை ஓய்வதற்குள், காங்கிரஸ் கட்சியிடம் மண்டியிட்டு, பின் வாசல் வழியாக ஆதரவு கேட்டு, ஆள் அனுப்பி, காங்கிரஸ் தயவில், தன் மகள் கனிமொழியை, ராஜ்யசபா எம்.பி.,யாக்கி விட்டார் கருணாநிதி. நாடகம் எழுதி, அதன் மூலம் அரசியலுக்கு வந்த கருணாநிதி, இன்னும் நாடகங்கள் எழுதுவதை விடவில்லை என்று தான் தோன்றுகிறது. இவ்வாறு, பரிதி இளம்வழுதி கூறினார்.

Advertisement


இதையும் தவறாமல் படிங்க ...Advertisement

வாசகர் கருத்து (29)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
grg - chennai,இந்தியா
29-ஜூன்-201317:58:58 IST Report Abuse
grg it is like karuna calling bjp communal, etc. after enjoying all comforts in the vajpayee govt for many years and coming out just before the elections and joining congees.
Rate this:
Share this comment
Cancel
Valarum Tamilagam - Madurai,இந்தியா
29-ஜூன்-201311:37:47 IST Report Abuse
Valarum Tamilagam குறைகளில்லாத கட்சி என்று எதுவும் இல்லை. எந்தக் கட்சியிடம் குறைகள் குறைவாய் இருக்கிறதோ அந்தக் கட்சி ஆட்சிக்கு வருகிறது. இப்போது தி மு க மற்றும் அதிமுக கட்சிகளில் அதி மு க வே சற்று பரவாயில்லை என்று தோன்றுகிறது.
Rate this:
Share this comment
Cancel
s.r.ramkrushna sastri - secunderabad,இந்தியா
29-ஜூன்-201311:33:12 IST Report Abuse
s.r.ramkrushna sastri இனி நீங்கள் செய்ய வேண்டியது மேலும் பல திமுகவில் முக்கியமானவர்களை அதிமுக விற்கு இழுப்பதுதான்
Rate this:
Share this comment
Cancel
koorvaal - Seattle,யூ.எஸ்.ஏ
29-ஜூன்-201310:49:07 IST Report Abuse
koorvaal போக போக தெரியும் இந்த பூவின் வாசம் புரியும் ......
Rate this:
Share this comment
Cancel
R.Saminathan - mumbai,இந்தியா
29-ஜூன்-201310:49:00 IST Report Abuse
R.Saminathan இந்தமாரி {திரு.பரிதி இளம்வழுதி} ஆட்கள் வெறும் வெத்து வெட்டு பணம் சம்பாதிக்க பொய் சொல்லுகிறார்,. அ.தி.மு.க., வில் பிரச்சனை வந்தால் என்ன செய்வார் திரு. பரிதி இளம்வழுதி அவர்கள்..,.தூக்குப்போட்டுக்குவின்களா,.,
Rate this:
Share this comment
Cancel
Shridhar Ragav - chennai,இந்தியா
29-ஜூன்-201310:46:27 IST Report Abuse
Shridhar Ragav எல்லோருக்கும் தெரிந்த உண்மை உமக்கு தெரிய இவ்வளவு வருடங்கள் என்றால் அப்பாவி தொண்டர்களின் கதி ..வழிகாட்டுங்கள்
Rate this:
Share this comment
Cancel
vandu murugan - chennai,இந்தியா
29-ஜூன்-201310:39:01 IST Report Abuse
vandu murugan ஐயோ பாவம்
Rate this:
Share this comment
Cancel
mirudan - kailaayam,இந்தியா
29-ஜூன்-201310:37:22 IST Report Abuse
mirudan பதவியில் இருக்கும் வரை கருணா செயல்பட்ட தலைவராக இருந்தாரா ?
Rate this:
Share this comment
Cancel
KUMUKKI - male,மாலத்தீவு
29-ஜூன்-201310:09:50 IST Report Abuse
KUMUKKI பரிதி சார் உங்களுக்கு கவிதை எழுதத்தெரிந்திருந்தால் தி.மு.காவில் முன்னுரிமை கொடுக்கப்பட்டிருக்கும், உங்களுக்கு அரசியல் மட்டும்தானே தெரியும் .
Rate this:
Share this comment
Cancel
appu - madurai,இந்தியா
29-ஜூன்-201310:07:39 IST Report Abuse
appu யாரு சொன்னது செயல்படாத தலைவருன்னு....அவரு செயல்பட்டு தான் நீர் இப்போ அதிமுகல இருக்கீர்....ஸ்டாலின்,,,அழகிரி இவர்களின் அரசியல் வாழ்க்கைக்காக உங்களை போன்ற பலரை டம்மிகளாக வைக்க செயல்படவில்லையா???இலங்கை தமிழர் விசயத்தில் தங்களது மாபெரும் டூ ஜி ஊழலில் நிழல் தேடவும்,,குளிர் காயவும் காங்கிரஸ் அரசுடன் செயல்படவில்லையா?கனிமொழியை திகார் சிறையில் இருந்து வெளியே கொண்டு வர செயல்படவில்லையா?இல்லை ராஜ்யசபா எம் பி தேர்தலில் கனிமொழியை வெற்றி பெற செய்ய செயல்படவில்லையா???இப்படி அவரின் செயல்பாடுகள் நிறைய இருக்க நீர் செயல்படாத தலைவர் என்று சொல்லிவிடீரே????(என்னிடம் அவரது குடும்பத்திற்காக செயல்பட்ட லிஸ்டுக்கள் மட்டும் தான் உண்டு,,மக்களுக்காக உருப்படியாக செயல்பட்ட லிஸ்டு பெரிதாக எதுவும் இல்லை..மன்னிக்கவும்)
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை