Drama has come to an end: Vijayakanth | நாடகம் முடிவுக்கு வந்தது: வெதும்புகிறார் விஜயகாந்த்| Dinamalar

அரசியல் செய்தி

தமிழ்நாடு

நாடகம் முடிவுக்கு வந்தது: வெதும்புகிறார் விஜயகாந்த்

Added : ஜூன் 28, 2013 | கருத்துகள் (83)
Advertisement
Drama has come to an end: Vijayakanth

சென்னை: ""தொகுதி மேம்பாடு மற்றும் தொகுதி மக்களின் நலன் கருதி, முதல்வரை சந்தித்ததாக கூறியவர்களின் நாடகம், ராஜ்யசபா தேர்தல் மூலம் முடிவுக்கு வந்துள்ளது. முதல்வரின் உள்நோக்கமும், மக்களுக்கு வெளிச்சம் போட்டு காட்டப்பட்டுள்ளது,'' என, தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.


அவரது அறிக்கை:

ராஜ்யசபா தேர்தலில், தே.மு.தி.க., பல வகைகளில் மாபெரும் வெற்றியை பெற்றுள்ளது. இந்த தேர்தலில், யார் வெற்றிப்பெற வேண்டும் என்பதை விட, யார் தோல்வி அடைய வேண்டும் என்பதில் தான் அ.தி.மு.க., ஆர்வம் காட்டியது. அ.தி.மு.க., முதலில், ஐந்து வேட்பாளர்களை அறிவித்தது; தி.மு.க., வேட்பாளரை நிறுத்தியதும், ஒரு வேட்பாளரை வாபஸ் பெற்று, இந்திய கம்யூ., கட்சிக்கு விட்டு கொடுத்தது. தி.மு.க.,வை வெற்றி பெற செய்வதற்கு, இதை, அ.தி.மு.க., மறைமுகமாக செய்ததோ என்ற சந்தேகம் மக்களிடம் எழுந்துள்ளது. " தி.மு.க.,வை வெற்றிபெற செய்வது தான், எம்.ஜி.ஆருக்கு இவர்கள் காட்டும் விசுவாசமா?' அ.தி.மு.க., நினைத்திருந்தால், தனது ஓட்டுக்கள் மற்றும் கூட்டணி கட்சியின் ஓட்டுக்கள் மூலம், வெகு சுலபமாக, தி.மு.க.,வை தோல்வியடைய செய்திருக்க முடியும். தி.மு.க., -அ.தி.மு.க., வெளியில் தங்களை எதிரி போல காட்டிக்கொண்டாலும், இரு கட்சிகளும் ரகசிய உடன்பாடு கொண்டுள்ளனவோ, என்ற சந்தேகம் வலுப்பெறவே செய்கிறது. "ஸ்பெக்டரம்' ஊழல் நடந்தபோது, கனிமொழியை கடுமையாக எதிர்த்த ஜெயலலிதா, அவருக்கு மறைமுகமாக ஆதரவு தெரிவித்தது ஏன்? இந்த தேர்தலின் மூலம் பலரது முகத்திரை கிழிக்கப்பட்டு சுயரூபம் வெளிப்பட்டுள்ளது. தொகுதி மேம்பாடு மற்றும் தொகுதி மக்களின் நலன் கருதி, முதல்வரை சந்தித்ததாக கூறியவர்களின் நாடகம் முடிவுக்கு வந்துள்ளது. முதல்வரின் உள்நோக்கமும், மக்களுக்கு வெளிச்சம்போட்டு காட்டப்பட்டுள்ளது. தங்களுக்கு அரசியலில் முகவரி கொடுத்து, அடையாளம் காட்டிய கட்சிக்கும், தலைமைக்கும் துரோகம் செய்து விட்டு, ஓட்டளித்ததன் மூலம், அரசியல் வரலாற்றில், மன்னிக்க முடியாத துரோகிகள் இவர்கள் என்பதை வரும் காலம் உணர்த்தும். ஏதோ சாதனை செய்து விட்டதாக இறுமாப்புடன் இருக்கும் இவர்களுக்கு," இது சாதனை அல்ல; சந்தி சிரிக்கும் செயல்' என, தொகுதி மக்கள் விரைவில் பாடம் புகட்டுவர். இவ்வாறு, விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.

Advertisement


இதையும் தவறாமல் படிங்க ...Advertisement

வாசகர் கருத்து (83)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
jayvishnu - madurai,இந்தியா
30-ஜூன்-201310:44:58 IST Report Abuse
jayvishnu ஐயோ ஐயோ இன்னும் பச்சை குழந்தை மாதிரியே இருக்காரே இந்த நாடகம் எல்லாருக்கும் தெரியுமே
Rate this:
Share this comment
Cancel
kumaresan.m - hochimin ,வியட்னாம்
29-ஜூன்-201317:57:17 IST Report Abuse
kumaresan.m " அமைதியான கடல் ஒரு திறைமையான மாலுமியை உருவாக்காது என்பதை நீங்கள் உணரவேண்டும் கேப்டன்.... வீணாக புலம்புவதை நிறுத்திவிட்டு ...மனம் தளராமல் மக்களுக்காக உழையுங்கள் ...மக்கள் வெற்றி என்னும் பரிசு கொடுப்பார்கள் "
Rate this:
Share this comment
amukkusaamy - chennai,இந்தியா
30-ஜூன்-201301:04:16 IST Report Abuse
amukkusaamy கேப்டனுக்கு பொருத்தமான அருமையான அறிவுரை....மிகச்சரியான கருத்து...Experience Makes A Man Perfect ...Rough Seas Make A Good Sailor ........
Rate this:
Share this comment
Cancel
kumaresan.m - hochimin ,வியட்னாம்
29-ஜூன்-201317:54:28 IST Report Abuse
kumaresan.m " கருணாவும் ,ஜெயாவும் .அரசியல் பாடம் கற்றுக்கொடுக்கிறார்கள் ....விஜயகாந்த் பாடம் படித்து தேர்வில் வெற்றி பெறுவது தான் புத்தி சாலித்தனம் ....தேர்வு கடினமாக இருப்பதாக என்று பரீட்சை எழுதாமல் எழுந்து ஓடினால் வெற்றி பெற முடியாது கேப்டன் "
Rate this:
Share this comment
Cancel
B.J.P. MADHAVAN - chennai ,இந்தியா
29-ஜூன்-201317:21:38 IST Report Abuse
B.J.P. MADHAVAN நிர்வாகத் திரமயில்லாததால் ஊழல் அரசியல் கட்சிகளோடு இருந்து நல்ல பாடத்தை தெரிந்துக் கொண்ட விஜயகாந்த் இப்போதாவது திறமையான ஊழலற்ற ஆட்சி செய்ய தகுந்த அகில இந்திய கட்சியான பா.ஜ.க. வுடன் கூட்டு சேர சிந்திப்பார் என்று நம்புகிறேன்.
Rate this:
Share this comment
Cancel
sumaithangi - chennai,இந்தியா
29-ஜூன்-201311:05:40 IST Report Abuse
sumaithangi எல்லாம் நடந்து முடிந்த பிறகு புலம்பி ஒரு பயனும் கிடையாது.....ஒன்று கட்ட்சியை கட்டு கோப்பாக வைத்திருக்க திறமை இருந்திருக்க வேண்டும்....இல்லை ஒரு நல்ல எதிர்கட்ட்சியாக செயல்பட தெரிந்திருக்க வேண்டும்...அரசியல் என்பது அவர் சினிமா சண்டை கட்சியில் இவர் ஒதைக்கும் ஒதைக்கு டம்மி அடி வாகும் சண்டை அல்ல...அதுவும் தமிழக அரசியலில் மகாபாரத சகுனியை மிஞ்ச வேண்டும்,,,ராமாயண குனிய தாண்ட வேண்டும்....இவர் இப்படி போலம்புவதை பார்த்தால் விஜி இன்னும் அரசியலில் free k g ....என்று தான் தோனுகிறது.....
Rate this:
Share this comment
Cancel
Raju Sundararajan - Bengaluru,இந்தியா
29-ஜூன்-201310:16:27 IST Report Abuse
Raju Sundararajan அன்று வைதேகி காத்திருந்தாள்...இன்று விசயகாந்த் காத்திருக்கிறார் ஆனால், கதையோ, காவல் காத்தவன் கனியை நேற்று வந்தவன் பறித்து சென்று விட்டானே காவல்காரன் கண்னயர்ந்ததுக்கு மற்றவரை குறை சொல்வது சுத்தமாக கையாலாகத்தனம் தவிர வேறு எதுவும் இல்லை
Rate this:
Share this comment
Pannadai Pandian - wuxi,சீனா
29-ஜூன்-201310:26:49 IST Report Abuse
Pannadai Pandian8 சீட்டு உள்ள வலது கம்யூனிஸ்டு கட்சி 33 வாக்குகள் வாங்கி ராஜ்யசபாவுக்கு சென்று விட்டது. 29 உறுப்பினர்களுடன் உள்ள தேமுதிக கோட்டை விட்டது. இது தான் அரசியலில் முதிர்ச்சி இன்மை என்று அர்த்தம்....
Rate this:
Share this comment
Cancel
mohamed ismail - tenkasi,இந்தியா
29-ஜூன்-201309:39:27 IST Report Abuse
mohamed ismail இன்றைய சந்தேகம் நாளைய உண்மை.கண்டிப்பாக அந்த ஏழு பேரும் தங்கள் தவறுகளை உணர்ந்து கேப்டனிடம் மன்னிப்பு கேட்கும் காலம் வரும்...........
Rate this:
Share this comment
PRAKASH - AHMEDABAD, GUJARAT,இந்தியா
29-ஜூன்-201313:33:56 IST Report Abuse
PRAKASHஅதுக்கு கேப்டன் ஆளுக்கு ரெண்டு ஆடி கார் குடுக்கணும் .. .குடுப்பாரா ?? ...
Rate this:
Share this comment
maheswarandarmalingam - KEELAIYUR,இந்தியா
29-ஜூன்-201318:30:58 IST Report Abuse
maheswarandarmalingamமன்னிப்பு. அவர் கேட்கவும் மாட்டார் கொடுக்கவும் மாட்டார்....
Rate this:
Share this comment
Cancel
Sha Navas Katherbatcha - madurai,இந்தியா
29-ஜூன்-201309:38:06 IST Report Abuse
Sha Navas Katherbatcha siranjeevi சிரஞ்சீவி மாதிரி சென்ட்ரல் மினிஸ்டர் பதவிக்கு முயற்சி செய்யுங்க . நிம்மதியா இருப்பிங்க
Rate this:
Share this comment
maheswarandarmalingam - KEELAIYUR,இந்தியா
29-ஜூன்-201318:29:07 IST Report Abuse
maheswarandarmalingamஅப்படினா ப.ஜ.க. தான் சேத்துக்கனும் ...
Rate this:
Share this comment
Cancel
PRAKASH - AHMEDABAD, GUJARAT,இந்தியா
29-ஜூன்-201309:25:52 IST Report Abuse
PRAKASH கேப்டன் .. பேசாம கட்சிய கலைச்சுட்டு சும்மா இருங்க .. இப்படி அவமானபடுரதுக்கு அது எவ்வளவோ மேல் ..
Rate this:
Share this comment
Cancel
PRAKASH - AHMEDABAD, GUJARAT,இந்தியா
29-ஜூன்-201308:51:31 IST Report Abuse
PRAKASH இப்படிலாம் பேசுறத விட்டுட்டு ஏன் அவங்களாம் ஓடி போனாங்கன்னு யோசிங்க .. இருக்குறவங்கள ஒழுங்கா வச்சுகோங்க.. இதெல்லாம் நாங்க உங்களுக்கு சொல்லி தர வேண்டியதாருக்கு .. எல்லாம் எங்க நேரம்,எ
Rate this:
Share this comment
சு கனகராஜ் - chennai -33,இந்தியா
29-ஜூன்-201310:07:04 IST Report Abuse
சு கனகராஜ் விஜயகாந்த் நிதானம் இல்லாமல் பேசுவது தவறு இதே விஜயகாந்த் வடிவேலுவுக்கு பதிலடி கொடுத்திருந்தால் பாராட்டலாம் அப்படியானால் வடிவேலு சொன்னதெல்லாம் உண்மையா ? நாவடக்கம் தேவை இப்படி பெட்டியளித்தால் ஓடியவர்கள் திரும்பவா போகிறார்கள் ? மேலும் பகையை வளர்க்கவே செய்கிறார் ...
Rate this:
Share this comment
Sivasakthi Pandian - Madurai,இந்தியா
29-ஜூன்-201317:11:19 IST Report Abuse
Sivasakthi Pandianவேற என்ன கனகராஜ் அண்ணன் செய்யலாம்? வடிவேளுகேல்லாம் பதில் சொல்ற அளவுக்கு கீல போகல. நீங்களும் உங்க ஐடியாவும். ...
Rate this:
Share this comment
PALANI - Madurai,இந்தியா
01-ஜூலை-201310:02:27 IST Report Abuse
PALANIகனகராஜ் வடிவேலு விட நல்ல காமெடி கமெண்ட் அடிப்பர்...
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை