Reason behind Anshul Mishra's transfer | மதுரை கலெக்டர் அன்சுல் மிஸ்ரா மாற்றம் ஏன்?| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

மதுரை கலெக்டர் அன்சுல் மிஸ்ரா மாற்றம் ஏன்?

Added : ஜூன் 28, 2013 | கருத்துகள் (29)
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
Reason behind Anshul Mishra's transfer

மதுரை: மதுரை கலெக்டர் அன்சுல் மிஸ்ரா திடீரென வணிகவரித்துறை இணை கமிஷனராக மாற்றப்பட்டுள்ளார். அவரது மாற்றத்தின் பின்னணியில் ஆளும் கட்சியினர் இருக்கலாம் என, கருதப்படுகிறது.
இங்கு கலெக்டராக இருந்த சகாயம் கடந்தாண்டு மே மாதம் கோ ஆப்டெக்ஸ் இயக்குனராக மாற்றப்பட்டார். திருவண்ணாமலை கலெக்டராக இருந்த அன்சுல் மிஸ்ரா மதுரைக்கு மாற்றப்பட்டார். அவர் மதுரையில் 28.5.2012ல் பொறுப்பேற்றார். பொறுப்பேற்றது முதல் கலெக்டர் மேற்கொண்ட அதிரடி நடவடிக்கைகள் மக்களிடம் வரவேற்பை பெற்றன. மேலூர் பகுதியில் 20 ஆண்டுகளாக முறைகேடாக நடந்த கிரானைட் குவாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுத்தார். குவாரிகள் மூலம் மாவட்டத்தில் தனிராஜ்யம் நடத்தியவர்களை கைது செய்ததுடன், நிலஅபகரிப்பு, கண்மாய், கால்வாய் ஆக்கிரமிப்புகள் குறித்தும் வருவாய்த் துறையினரை கொண்டு ஆய்வு நடத்தினார். பல ஆயிரம் கோடி ரூபாய் மதிப்புள்ள கிரானைட் கற்களை, அளந்து, மதிப்பீடு செய்து, ஏலமிட ஏற்பாடுகள் செய்தார். குறைதீர் நாள் கூட்ட நடவடிக்கைகள் மக்களிடம் வரவேற்பை பெற்றன. மாற்றுத் திறனாளிகள், முதியோரிடம் தனி அக்கறை செலுத்தினார். லஞ்சம், முறைகேடு புகாரிகளில் சிக்கிய 10க்கும் மேற்பட்டோர் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். இதனால் வருவாய்த் துறையினர் போராட்டமே நடத்தினர். சமீபத்தில் முறைகேடு செய்த துணை தாசில்தார் ஒருவரை கலெக்டர் பணி நீக்கமே செய்தார். நாள்தோறும் கலெக்டரிடன் பேஸ்புக்கில் பலர் புகார் அனுப்பினர். அவற்றின் மீது கலெக்டர் நடவடிக்கை மேற்கொண்டார். யூனியன்களிலும், பிர்க்கா அளவிலும், நகராட்சிகளிலும் நேரடியாகச் சென்று மக்கள் குறைகளை கேட்டார். 3 நாட்கள் பெண்களுக்கான முகாம் நடத்தி, மனுக்கள் பெற்றது, கவுன்சிலிங், மருத்துவ முகாம் நடத்தியதும் பெண்களிடம் வரவேற்பை பெற்றது. விதிகளை மீறிய பல கட்டடங்களுக்கு சீல் வைத்தார். இப்பிரச்னையில் மாநகராட்சியுடன் உரசல் ஏற்பட்டது. வளர்ச்சித் திட்டப் பணிகள் தரம் குறித்தும், "கட்டிங்' தொடர்பாகவும் பல்வேறு புகார்கள் எழுந்த நிலையில், விசாரணைக்கு உத்தரவிட்டார். அதிருப்தியான ஆளும் கட்சி எம்.எல்.ஏ.,க்கள் 4 பேர் முன்னிலையில் நடந்த உள்ளாட்சி பிரதிநிதிகள் ஆலோசனை கூட்டத்தில், "கலெக்டர், எஸ்.பி., திட்ட இயக்குனர் இருக்கும் வரை சம்பாதிக்க முடியாது. இவர்கள் மூவரையும் மாற்ற வேண்டும்,' என வெளிப்படையாக பேசினர். ரிங்ரோட்டில் முறைகேடாக கட்டணம் வசூலித்த ஊழியர்களை போலீசார் கைது செய்தனர். பணவசூலில் மாநகராட்சியில் சிலருக்கு தொடர்பிருக்கலாம் என கூறப்பட்டது. போலீசாரின் நடவடிக்கைக்கு, கலெக்டரின் பின்னணி இருக்கலாம் எனக் கருதிய மாநகராட்சி ஊழியர்கள் வேலை நிறுத்தம் செய்தனர். மேயர் ராஜன்செல்லப்பா, கலெக்டரிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். "கிரானைட்' கற்களை "இ-டெண்டர்' விட முயற்சியையும் அன்சுல் மிஸ்ரா மேற்கொண்டார். ஆளும் கட்சியினர் மேலிடத்தில் முட்டி மோதினர். மாநகராட்சி நிர்வாகத்திலும் தேவையில்லாமல் கலெக்டர் தலையிடுகிறார் என, 2 நாட்களுக்கு முன் தலைமை செயலாளருக்கு புகார் அனுப்பியுள்ளனர். நேற்று திடீரென சென்னை வணிகவரித்துறை இணை கமிஷனராக மாற்றப்பட்டார்.


"மதுரையில் பணிபுரிந்தது மகிழ்ச்சி':

அன்சுல்மிஸ்ரா கூறியதாவது: ஓராண்டாக மதுரையில் பணிபுரிந்ததை மகிழ்ச்சியாக கருதுகிறேன். மக்களுக்கு நல்ல நிர்வாகத்தை தந்த திருப்தியில் விடைபெறுகிறேன். மதுரையின் பண்பாட்டு பெருமையை காக்கும், "மாமதுரை போற்றுவோம்' நிகழ்ச்சியை நடத்த உதவியதில் பெருமைப்படுகிறேன். மதுரை மக்கள் மிக அன்பானவர்கள். எனது பணியில் அதிகாரிகள், மக்கள் ஒத்துழைப்பு தந்தனர். அதனால்தான் நன்றாக பணிபுரிய முடிந்தது. இடமாறுதல் என்பது வழக்கமானதுதான், என்றார்.

Advertisement


இதையும் தவறாமல் படிங்க ...Advertisement

வாசகர் கருத்து (29)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Nithyapriya - Madurai,இந்தியா
02-ஜூலை-201311:32:58 IST Report Abuse
Nithyapriya அரசியல் வியாதிகள் எப்போதும் நல்லவரை ஒரு இடத்தில பணி செய்ய அனுமதிப்பதில்லை. இனி மதுரையை நினைத்தால்தான் கவலையாக இருக்கிறது. அம்மா ஆட்சியிலே கூட சூட்கேசுக்கு இவ்வளவு மதிப்பு இருக்கிறதா எனக்கு ஆச்சரியமாய் இருக்கிறது. பணம் பத்தும் செய்யும். இனி கவலைப்பட்டு என்ன பிரயோஜனம்.....ஐயோ பாவம் மதுரை மக்கள்.
Rate this:
Share this comment
zakir hassan - doha,கத்தார்
02-ஜூலை-201315:34:52 IST Report Abuse
zakir hassanரெண்டுமே ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள்தான். பாவம் நீங்கள் வெள்ளந்தியா இருக்கிறீர்...
Rate this:
Share this comment
Cancel
yuvaraj - chennai,இந்தியா
02-ஜூலை-201311:03:36 IST Report Abuse
yuvaraj முதலில் சகாயம் அய்யா சென்றார் இப்போது உங்களையும் அனுப்பி விட்டார்கள் இப்படியே சென்றால் தமிழ்நாடு ரொம்ப கேவலமாக போக போகிறது
Rate this:
Share this comment
Cancel
காளி. சந்திர மௌலி - Kuala Lumpur,மலேஷியா
29-ஜூன்-201316:42:34 IST Report Abuse
காளி. சந்திர மௌலி நல்லவர்களுக்கு காலமில்லை.
Rate this:
Share this comment
Cancel
rajan - kerala,இந்தியா
29-ஜூன்-201312:25:18 IST Report Abuse
rajan நல்லது பண்ணுறவங்கள நம்ம அரசியல் தாதாக்களுக்கு புடிக்காதுல்ல. அவுக மேலூர் வித்தை தெரிஞ்சவங்கள்ள அதனால தான்.
Rate this:
Share this comment
Cancel
pandian - madurai,இந்தியா
29-ஜூன்-201312:25:15 IST Report Abuse
pandian நல்ல கலெக்டர், இனி கஷ்டமா இருக்கும் மதுரை மக்களுக்கு
Rate this:
Share this comment
Cancel
Mohamed Maideen - tamilnadu pkt,இந்தியா
29-ஜூன்-201311:35:58 IST Report Abuse
Mohamed Maideen மக்கள் மனதில் நீங்காத இடம் இவருக்கு என்றும் உள்ளது
Rate this:
Share this comment
Cancel
Ashok ,India - India,இந்தியா
29-ஜூன்-201310:43:27 IST Report Abuse
Ashok ,India இவருக்கு பணி இட மாறுதலே தவிர மக்கள் மனதில் நீங்காத இடம் இவருக்கு என்றும் உள்ளது. இந்த நாட்டிற்கு உங்கள் சேவை தொடர நல வாழ்த்துக்கள்
Rate this:
Share this comment
Cancel
சு கனகராஜ் - chennai -33,இந்தியா
29-ஜூன்-201310:38:30 IST Report Abuse
சு கனகராஜ் நல்ல கலக்டர்களை நீண்ட நாட்களுக்கு பதவியில் கட்சியினர் விட்டு வைக்க அனுமதிக்காதது ஏன் ?
Rate this:
Share this comment
maheswarandarmalingam - KEELAIYUR,இந்தியா
29-ஜூன்-201317:19:31 IST Report Abuse
maheswarandarmalingamஅடுத்து வருபவரும் நல்லவர என்ற நம்பிக்கையோடு இருப்போம் ...
Rate this:
Share this comment
Cancel
MJA Mayuram - chennai,இந்தியா
29-ஜூன்-201310:15:52 IST Report Abuse
MJA Mayuram மேலிடத்துக்கு போற கட்டிங்க தடுத்தா இதுதான் ..புரியுதா ???????
Rate this:
Share this comment
Cancel
PRAKASH - AHMEDABAD, GUJARAT,இந்தியா
29-ஜூன்-201308:41:16 IST Report Abuse
PRAKASH சார் வணிகவரிதுறையிலும் இது போன்ற முரைகெஉகல் இருக்கிறது ,... அதனை வெளிக்கொண்டு வாருங்கள்
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை