J&K Article 370 row: Advani hits back at Omar | தகாத வார்த்தைகளை பயன்படுத்த வேண்டாம்: காஷ்மீர் முதல்வருக்கு அத்வானி "அட்வைஸ்'| Dinamalar

தகாத வார்த்தைகளை பயன்படுத்த வேண்டாம்: காஷ்மீர் முதல்வருக்கு அத்வானி "அட்வைஸ்'

Added : ஜூன் 28, 2013 | கருத்துகள் (12)
Advertisement
J&K Article 370 row: Advani hits back at Omar

புதுடில்லி: ""மோசடி, ஏமாற்றுதல் போன்ற வார்த்தைகளை பயன்படுத்தி, மற்றவர்களை விமர்சிப்பதை, காஷ்மீர் முதல்வர் ஒமர் அப்துல்லா, தவிர்ப்பது, அவரின் அரசியல் வளர்ச்சிக்கு நல்லது,'' என, பா.ஜ., மூத்த தலைவர், அத்வானி கூறினார்.
காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து அளிக்கும் அரசியல் சட்டத்தின், 370வது பிரிவு, ஜவகர்லால் நேரு, பிரதமராக இருந்த போது, கொண்டு வரப்பட்டது. "இந்தியாவின் மற்ற பகுதிகளை சேர்ந்தவர்கள், காஷ்மீரில் நிலம் வாங்க முடியாது' என்பது உள்ளிட்ட, பல வித்தியாசமான விதிமுறைகள், இந்தப் பிரிவில் இடம் பெற்றுள்ளன. அப்போது, உள்துறை அமைச்சராக இருந்த, சர்தார் வல்லபாய் படேல் உள்ளிட்ட, காங்., மூத்த தலைவர்கள் சிலர், காஷ்மீரில், இந்த சட்டத்தை அமல்படுத்துவதற்கு, கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். அவர்களின் எதிர்ப்பை மீறி, சட்டம் கொண்டு வரப்பட்டது. பா.ஜ., மூத்த தலைவர், அத்வானி, சமீபத்தில் அளித்த ஒரு பேட்டியில்,"காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து அளிக்கும் சட்டத்தை வாபஸ் பெற வேண்டும்' என, கூறியிருந்தார். இதை, காஷ்மீர் முதல்வரும், தேசிய மாநாட்டு கட்சியின் தலைவர்களில் ஒருவருமான, ஒமர் அப்துல்லா, கடுமையாக விமர்சித்திருந்தார்.

இந்நிலையில், அத்வானி, இணையதளத்தில், இதுகுறித்து கூறியுள்ளதாவது: காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து அளிக்கும் அரசியல் சட்டப் பிரிவை, நேரு உள்ளிட்ட, ஒரு சில காங்., தலைவர்கள் தான், ஆதரித்தனர். அப்போது, காங்கிரசில் உள்ள பெரும்பாலான தலைவர்கள், எதிர்த்தனர். இந்த சட்டப் பிரிவை வாபஸ் பெற வேண்டும் என்பது, பா.ஜ.,வின் அடிப்படை கொள்கைகளில் ஒன்று. இன்று, நேற்றல்ல... ஜனசங்கம் (பா.ஜ., என பெயரிடுவதற்கு முன், அக்கட்சிக்கு இருந்த பெயர்) துவங்கப்பட்ட காலத்திலிருந்தே, இதை எதிர்த்து வருகிறோம். காஷ்மீர் முதல்வர் ஒமர் அப்துல்லா, இதை உணர வேண்டும். மோசடி, ஏமாற்றுதல் போன்ற வார்த்தைகளை பயன்படுத்தி, மற்றவர்களை விமர்சிப்பதை தவிர்ப்பது, அவரின் அரசியல் வளர்ச்சிக்கு நல்லது. இவ்வாறு, அத்வானி கூறினார்.

Advertisement


இதையும் தவறாமல் படிங்க ...Advertisement

வாசகர் கருத்து (12)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
vandu murugan - chennai,இந்தியா
29-ஜூன்-201317:05:31 IST Report Abuse
vandu murugan யாரும் தகாத வார்த்தைகள் பயன் படுத்த வேண்டாம் ப்ளீஸ்
Rate this:
Share this comment
Cancel
Tamilnesan - Muscat,ஓமன்
29-ஜூன்-201310:01:52 IST Report Abuse
Tamilnesan மொத்தத்தில் நேரு குடும்பம் இந்தியாவின் நிரந்தர தலைவலி........ஜெய் ஹிந்த்
Rate this:
Share this comment
Sivramkrishnan Gk - Dubai,ஐக்கிய அரபு நாடுகள்
29-ஜூன்-201312:33:49 IST Report Abuse
Sivramkrishnan Gkநேரு குடும்பம் நேர்மையற்ற குடும்பம் என நறுக்கென்று சொல்லுங்களேன்....
Rate this:
Share this comment
Cancel
Krish Sami - Trivandrum,இந்தியா
29-ஜூன்-201303:03:03 IST Report Abuse
Krish Sami எல்லா கட்சிகளும், கம்யூனிஸ்ட் இயக்கங்களை தவிர, இங்கு 'vote polarization' என்ற அநியாயத்தை தொடர்ந்து செய்கின்றன. காங்கிரஸ், பா ஜ க, முஸ்லிம் இயக்கங்கள் மத அடிப்படையில் என்றால், லாலு, முலாயம், ராமதாஸ் போன்றவர்கள் ஜாதி அடிப்படையில், கருணாநிதி போன்றவர்கள் ஜாதி / மொழி / மத அடிப்படையில். இதில் ஜெயலலிதா போன்றவர்கள் பரவாயில்லை என்றே தோன்றுகிறது, எம் ஜி ஆர் அளவு இல்லையென்றாலும். "காற்றும் நீரும் காணும் நெருப்பும் பொதுவில் இருக்குது, மனிதன் காலில் பட்ட பூமி மட்டும் பிரிந்து கெடக்குது பிரித்து வைத்துப் பார்ப்பதெல்லாம் மனிதன் இதயமே, உலகில் பிரிவு மாறி ஒருமை வந்தால் அமைதி நிலவுமே".
Rate this:
Share this comment
Cancel
தமிழ்நிலா - வந்தவாசி,இந்தியா
29-ஜூன்-201302:56:08 IST Report Abuse
தமிழ்நிலா மதவெறியர்கள் மரியாதையுடன் பேசினாலும் மக்கள் நிராகரிப்பார்கள். உலக அளவில் சிறுபான்மையின மக்கள் அமைதியாக வாழ்வதற்கு வழிவகுத்த தலைவர் கலைஞர், அன்னை சோனியாவின் ஆசியுடன் நல்லாட்சி நடாத்தும் முதல்வர் ஓமர் உங்களைவிட எல்லாவிதத்திலும் சிறந்தவர்.
Rate this:
Share this comment
Cancel
Sekar Sekaran - Jurong-West,சிங்கப்பூர்
29-ஜூன்-201302:54:59 IST Report Abuse
Sekar Sekaran பா ஜ கவின் பழுதில்லா நோக்கம் இந்த காஷ்மீரில் ஏற்பட வேண்டிய மாற்றங்கள். காங்கிரஸ் இப்படித்தான் தன்னை மைனாரிட்டி சமூகத்தின் காவலன் என்று சொல்லி தவறான முடிவுகளை எடுப்பார்கள்.நேருவாக இருந்தாலும் சரி இப்போதுள்ள அன்னிய சக்தியின் தலைமையின் கீழ் இருந்தாலும் சரி. காஷ்மீர் உமர் கூட அன்னிய மண்ணில் இருந்து பிறந்தவர்தானோ? சரியாக தெரியவில்லை. ஏனென்றால் அப்படிப்பட்ட பேச்சினை பேசுகின்றார். பிரிவினை பேசுகின்ற அவருக்கு காங்கிரசில் ஆதரவு என்பது வெட்ககேடான விஷயம். அத்வானியின் அறிவுரை ஏற்ப்பாரா என்று தெரியாது..அப்படி அவர் ஏற்கவில்லை என்றால் இன்னமும் சிறிது காலத்தில் அரசியலில் இருந்தே காணாமல் போவார். முள்மேல் பட்ட சேலையை போல மெல்ல மெல்ல கிழியாமல் எடுக்கவேண்டும்..அந்த சிறப்பு அதிகாரம் வாபஸ் பெறுதலே சிறந்த ஒன்று. அதனை செய்ய நினைப்பதும்..செய்ய முடிவதும் பா ஜ காவால் மட்டுமே.
Rate this:
Share this comment
Cancel
தமிழ் சிங்கம் - chennai,இந்தியா
29-ஜூன்-201301:43:29 IST Report Abuse
தமிழ் சிங்கம் முதலில் அத்வானி ஒன்றை புரிந்துகொள்ளவேண்டும். 370 விதியின் படியே காஷ்மீர் இந்தியாவில் இணைந்தது. அந்த அடிப்படை விதியையே அத்வானி மாற்ற சொன்னால், காஷ்மீர்காரர்கள் எப்படி இந்தியாவுடன் இருக்க சம்மத்திப்பார்கள்? ஏற்கனவே காஷ்மீரில் பிரச்சனை வலுத்து கொண்டு போகிறது. மேலும் அதை சீண்டி விட்டால், மேற்கொண்டு பிரச்சனை ஏற்படும். இந்தியாவை சுமுகமாக ஆட்சி செய்து வளர செய்ய வேண்டும். அதை விட்டு பாகிஸ்தானுடன் சண்டை போடவும், தீவிரவாதிகளுடன் சண்டை போடவும் பிஜேபி ஆட்சிக்கு வரவேண்டாம். காங்கிரஸ் ஊழல் திலகம் பெயர் பெற்றுள்ளது. பிஜேபி மதமுத்திரை குத்தப்பட்டுள்ளது. மூன்றாம் அணியே இப்போதைக்கு சிறந்தது. அதற்கு தலைவர் கலைஞர் பிரதமர் ஆனால் மட்டுமே, காங்கிரஸ் வெளியில் இருந்து ஆதரவு கொடுக்கும். காங்கிரஸ் இன் ஆதரவு, குதிரை சவாரி அல்ல. முதலை சவாரி. எந்த நேரத்திலும் கவிழ்த்து விடுவார்கள். இதற்கு எத்தனையோ உதாரணங்களை காட்டலாம். கலைஞர் மட்டுமே போன ஐந்து ஆண்டுகளை காங்கிரஸ் தோள்களில் வெற்றிகரமாக முதலை சவாரி செய்தார். சிறந்த சானக்கியவாதி அவரால் மட்டுமே இந்தியாவை சுமுகமாக அமைதியாக வளர்ச்சி பாதைக்கு அழைத்து செல்ல முடியும்.
Rate this:
Share this comment
Sivramkrishnan Gk - Dubai,ஐக்கிய அரபு நாடுகள்
29-ஜூன்-201310:29:01 IST Report Abuse
Sivramkrishnan Gkகாஷ்மீர் பாகிஸ்தான் தீவிரவாதிகளின் கூடாரம். இந்தியர்களின் வரி பணத்தில் அவர்கள் அனுபவிக்க வேண்டுமா. குறைந்தது அவர்களுக்கு மனித நேயம் இருந்தாலும் பரவாயில்லை. காட்டுமிராண்டிகள் அவர்கள்....
Rate this:
Share this comment
Cancel
NavaMayam - New Delhi,இந்தியா
29-ஜூன்-201301:15:41 IST Report Abuse
NavaMayam முஸ்லிம் அதிகப்படி உள்ள காஸ்மீர், ஹரி சிங் என்ற ஹிந்து ராஜாவால் ஆளப்பட்டது ... இந்திய சுதந்திரம் அடைந்த பொது இந்த அரசர் இதை இந்தியாவுடன் இணைக்க விரும்ப வில்லை ...அப்போதைய முஸ்லிம் தலைவர் அப்துல்லா தான் முதலில் இந்தியாவுடன் சேர விருப்பம் தெரிவித்து , நேருவுடன் பேச்சு நடத்தினார்...அவர்கள் நினைத்திருந்தால் தங்களின் இஸ்லாமிய நாடான பாகிஸ்தானுடன் சேர விருப்பம் தெரிவித்திருக்கலாம்... பின் அந்நியர்களின் ஆயுத கிளர்சியாலதான் இந்து ராஜா இந்தியாவுடன் சேர முன் வந்தார்... எனவே தான் இஸ்லாமியரின் அந்த விசுவாசத்திற்கு , நேரு , அதற்க்கு தனி அந்தஸ்து கொடுத்தார்....
Rate this:
Share this comment
Cancel
NavaMayam - New Delhi,இந்தியா
29-ஜூன்-201300:34:12 IST Report Abuse
NavaMayam நாம் சுதந்திரம் அடைந்த போது ஆங்கிலேயர்களால் பாகிஸ்தான் பிரிக்க பட்டது ...அப்போது காஸ்மீரை பாகிஸ்தானுடன் சேர்க்க வில்லை ...அதை அந்த காஸ்மீர் ராஜாவே முடிவு செய்து கொள்ளட்டும் என்று விட்டு விட்டார்கள் ...அப்போது பாகிஸ்தானில் இருந்து காஸ்மீருக்குள் ஆயுதம் ஏந்திய முஸ்லீம் தீவிரவாதிகள் புகுந்தார்கள் ...அப்போ இருந்த இந்த உமர் தாத்தா சேய்க் அப்துல்லா எங்கே காஸ்மீரை பாகிஸ்தான் பறித்து கொள்ளுமோ என்று அவர் நேருவின் உதவியை நாடி இந்தியாவுடன் சேர விரும்புவதை கூறினார் ...உடனே இந்திய படைகளை அனுப்பி ஊடுரவல்காரர்களை விரட்டியது... அப்படியும் அவர்கள் ஆக்கிரமிப்பு காஸ்மீரில் இருந்து விரட்ட முடியவில்லை.... காஸ்மீர் மக்களின் இந்தியாவின் மீது வைத்த நம்பிக்கையை மனதில் கொண்டு நேரு அவர்கள் அதற்க்கு சில சிறப்பு அந்தஸ்து கொடுத்தார்...நம்மை நம்பி வந்தவர்களுக்கு கொடுத்த அந்தஸ்தை கட்டி காப்பது நம் கடமை....காஸ்மீர் போக ஆதிவாசிகள் நிறைந்த நாகலாந்து , அந்தமான் , ஹிமாச்சல் பிரதேஷ் , முதலியவைகளுக்கும் கொடுக்க பட்டுள்ளது...தேர்தல் வருவதற்கு முன் ரத யாத்திரை , மசூதி இடிப்பு , கரசேவை என்று ஆர்பாட்டம் பண்ணி பல உயிர்களை பலி வாங்கி விட்டு , ஆட்சிக்கு வந்தவுடன் , ராமர் கோவிலை கட்டினீர்களா ...உங்களை உமர் அப்படி சொல்லுவதில் என்ன தப்பிருக்கிறது அத்வானி ஜி ...
Rate this:
Share this comment
Cancel
NavaMayam - New Delhi,இந்தியா
29-ஜூன்-201300:21:57 IST Report Abuse
NavaMayam அத்வானி ஜி உமர் உங்களை பார்த்து ஒரு நல்ல கேள்வி கேட்டார் ... இப்போ பார்லிமென்ட் தேர்தல் வருகிறது என்றவுடன் 370 விதி பற்றி பேசுகிறீர்களே , நீங்கள் ஆறு வருஷம் ஆட்சி செய்தீர்களே , அப்போ இதை மாற்ற ஒரு செங்கலையாவது எடுத்து வைத்தீர்களா என்று...அதற்கு முதலில் பதில் சொல்லுங்கள் அத்வானி ஜி.....
Rate this:
Share this comment
saravanakumar - aruppukottai,இந்தியா
29-ஜூன்-201310:41:10 IST Report Abuse
saravanakumarநவமயம் ஜால்ரா முதலில் காங்கிரஸ் கட்சியை ஊழல் செய்வதை நிறுத்த சொல்லுங்கள் ...
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை