பதிவு செய்த நாள் :
கருத்துகள்  கருத்தை பதிவு செய்ய
எழுத்தின் அளவு:

டெல்டா மாவட்டங்களில், குறுவை பயிர் சாகுபடி துவங்கியுள்ளதால், புதிய கடன் திட்டங்களையும், சலுகைகளையும் அரசு அறிவிக்க வேண்டும் என, விவசாயிகள் எதிர்பார்க்கின்றனர்.


திருவாரூர், நாகை, தஞ்சை உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில், காவிரி நீர், போதிய அளவு வராததால், கடந்த ஆண்டு, குறுவை சாகுபடி பாதிக்கப்பட்டது. தஞ்சையில் மட்டும், நான்கரை லட்சம் ஏக்கர் கருகியது. இதைத்தொடர்ந்து, கடந்த, 2012 செப்டம்பர், 17ம் தேதி, டெல்டா மாவட்டங்களில், சாகுபடிக்காக, மேட்டூர் அணை திறக்கப்பட்டது. 55 நாட்கள் மட்டுமே, இந்த நீர், டெல்டா மாவட்டங்களை வந்தடைந்தது. பின், தண்ணீரின்றி, 12 லட்சம் ஏக்கர் பயிர், அடியோடு கருகியது. பின், தாளடி, கோடை விவசாயமும் பாதிக்கப்பட்டது. மின்தடையால், கிணறுகளை நம்பியிருந்த சாகுபடியும் முழுமையாக, பாதிக்கப்பட்டது. விவசாய பணிகளுக்காக, கூட்டுறவு மற்றும் தேசிய வங்கிகளில், பயிர்க்கடன் மற்றும் நகைக்கடன் வாங்கியிருந்த விவசாயிகள், கடனை திருப்பி செலுத்த முடியாமல், "ஜப்தி நோட்டீஸ்' பெறும் நிலைக்கு, உள்ளாகியுள்ளனர்.
இந்நிலையில், தஞ்சை மாவட்டத்தில், இந்த ஆண்டு,

குறுவை பருவத்தில், 4,150 ஹெக்டேர் பரப்பில், நெல் சாகுபடியை, விவசாயிகள் துவக்கி உள்ளதாக, வேளாண் அதிகாரிகள், கணக்கு போட்டுள்ளனர். தஞ்சை - பட்டுக்கோட்டை வழி நெடுகிலும், குறுவை நடவு பணியில், விவசாயிகள், தற்போது ஈடுபட்டுள்ளனர். விவசாயிகளுக்கு, 100 சதவீத மானியத்தில் குழாய், சலுகையில் மும்முனை மின்சார இணைப்பு போன்ற திட்டங்களை, முதல்வர் ஜெயலலிதா, அறிவித்துள்ளார்.

சலுகைகள் போதாது:


இந்த சலுகைகள் போதாது; மேலும் சிறப்பு சலுகைகளை பலவற்றை அறிவித்து, விவசாயிகளை, அரசு கைதூக்கி விட வேண்டும் என, டெல்டா விவசாயிகள் எதிர்பார்க்கின்றனர். இதுகுறித்து, தமிழக விவசாயிகள் சங்க, தஞ்சை மாவட்டத் தலைவர் சுகுமாறன் கூறியதாவது: கடந்தாண்டு, நான்கு போக சாகுபடியும், பொய்த்து போனது. இந்நிலையில், டெல்டா மாவட்டங்களில், சமுதாய நாற்றங்கால், மானியத்தில் குழாய் வழங்கும் திட்டம் போன்றவற்றை செயல்படுத்த, 70 கோடி ரூபாயை அரசு ஒதுக்கியுள்ளது. இந்த, 70 கோடி ரூபாய் மதிப்பிலான திட்டத்தின் பலன், எள்ளளவும் விவசாயிகளுக்கு வந்து சேரவில்லை. அனைத்தும்,

Advertisement

அதிகாரிகள் மற்றும் ஆளுங்கட்சியினருமே கூட்டாக, கொள்ளையடித்தனர். தற்போது, குறுவை நடவு பணி துவங்கி உள்ளது. இந்த நிலையில், வங்கிகள், விவசாயிகள் பெற்ற கடனை வசூலிக்க, "ஜப்தி நோட்டீஸ்' அனுப்பி வருகின்றன. இந்த நடவடிக்கையை, அரசு நிறுத்த வேண்டும். கூட்டுறவு வங்கிகளில், பழைய கடன்களை, தள்ளுபடி செய்து விட்டு, புதியகடன்களை வழங்கினால் மட்டுமே, குறுவை சாகுபடி செலவை, விவசாயிகளால் ஈடுகட்ட முடியும். இல்லாவிட்டால், ஐந்தாவது போகமான, குறுவையும் அடியோடு பாதித்து, கந்துவட்டிக்காரர்களிடம் விவசாயிகள் கையேந்தும் அவலம் ஏற்படும். இவ்வாறு, அவர் கூறினார்.

ஆடு, மாடுகளை விற்கும் அவலம்:

டெல்டா மாவட்டங்களில், கடந்தாண்டு குறுவை, சம்பா, தாளடி, கோடை பருவ விவசாயம் அடியோடு காவிரி நீரின்றி பாதிக்கப்பட்டது. இதையடுத்து, நடப்பாண்டு குறுவையும் காவிரி நீர், மழை நீரின்றி கேள்விக்குறியாகியுள்ளது. இதனால் விவசாயிகள் ஆடு, மாடுகளையும், வயலோர மரங்களையும், குறைந்த விலைக்கு விற்று, வாழும் நிலைக்கு, தள்ளப்பட்டுள்ளனர்.
- நமது நிருபர் -
Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.