போலீஸ்காரரை வெட்டிய ரவுடி "குண்டாஸில்' கைது| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

போலீஸ்காரரை வெட்டிய ரவுடி "குண்டாஸில்' கைது

Added : ஜூன் 29, 2013
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

வேலூர்: போலீஸ்காரரை வெட்டிய ரவுடியை போலீஸார் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்தனர்.
வேலூர் அடுத்த அரியூரை சேர்ந்த ரவுடி ராஜ்குமார் 30. இவர் மீது பாகாயம், அரியூர் போலீஸ் ஸ்டேஷன்களில், 50க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளது. வேலூரில் டாக்டர் அரவிந்த் ரெட்டி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட ராஜ்குமார், சில தினங்களுக்கு முன்பு ஜாமினில் வெளியே வந்தார்.
கடந்த, 5ம் தேதிதொரப்பாடி ரயில்வே கேட் அருகே பங்க் கடை வைத்துள்ள அப்பாஸ் என்பவரை கத்தியை காட்டி வழிப்பறி செய்த போது அவரை பிடிக்க வந்த பாகாயம் போலீஸ்காரர் ராஜேந்திரனை கத்தியால் குத்தினார். இந்த வழக்கில் பாகாயம் போலீஸார் ராஜ்குமாரை கைது செய்து வேலூர் சிறையில் அடைத்தனர். தொடர்ந்து ரவுடித்தனம் செய்து வந்ததால், கலெக்டர் சங்கர் உத்தரவுபடி ராஜ்குமார் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை