Court issued summon to Nalini | ராஜீவ் கொலையாளி நளினிக்கு சம்மன் | Dinamalar
Advertisement
ராஜீவ் கொலையாளி நளினிக்கு சம்மன்
Advertisement
 
 
Advertisement
 
 
 
எழுத்தின் அளவு:
Advertisement

வேலூர்: ராஜீவ் கொலையாளி நளினிக்கு கோர்ட் சம்மன் அனுப்பியுள்ளது. ராஜிவ் கொலை செய்யப்பட்ட வழக்கில் ஆயுள் தண்டனை அனுபவித்து வரும் முருகன் மனைவி நளினி, வரும் 29ம் தேதி கோர்ட்டில் ஆஜராக வேண்டும் என வேலூர் மாஜிஸ்திரேட் கோர்ட் சம்மன் அநுப்பியுள்ளது. இது வரை வெளி உலகிற்கு வராமல் சிறையில் இருந்து வரும் நளினி முதன்முறையாக கோர்ட்டுக்கு கொண்டு வரப்படுவார் என்பதால் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலமாக செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது. கடந்த 1991 ல் ஸ்ரீபெரும்புதூரில் ராஜிவ் மனித வெடிகுண்டு வைத்து கொல்லப்பட்டார். இந்த வழக்கு விசாரிக்கப்பட்டு முருகன், சாந்தன், பேரறிவாளன், நளினி ஆகியோருக்கு தூக்கு தண்டனை அளிக்கப்பட்டது. கர்ப்பிணியாக இருந்த காரணத்தை காட்டி நளினி தூக்கு தண்டனை ஆயுளாக குறைக்கப்பட்டது.

சுப்ரீம் கோர்ட்டில் நிலுவை:


இந்நிலையில் முருகன், சாந்தன், பேரறிவாளன், ஆகியோர் தரப்பில் தங்களின் தூக்கை ரத்து செய்ய வேண்டும் என கோரிய வழக்கு தற்போது சுப்ரீம் கோர்ட்டில் நிலுவையில் இருந்து வருகிறது. இந்த வழக்கு மீண்டும் ஜூலை மாதத்தில் விசாரணைக்கு வருகிறது. கருணை மனு காலம் தாழ்த்தியதை காரணமாக கொண்டு தங்களின் தூக்கை நிறுத்த வேண்டும் என கோருகின்றனர். இந்த குற்றவாளிகளுக்கு ஆதரவாக பிரபல வழக்கறிஞர் ராம் ஜெத்மலானி வாதாடி வருகிறார்.இதற்கிடையில் கடந்த 2010 ஏப்ரல் ஏப்ரல் 29ம் தேதி வேலூர் பெண்கள் சிறையில் போலீசார் சோதனை நடத்தினர், இந்த சோதனையில் நளினியிடம் இருந்து 4 சிம்கார்டுகள், 2 மொபைல் போன் இருந்தது. இது தொடர்பாக பாகாயம் போலீசார் வழக்கு பதிவு செய்தனர். இந்த வழக்கு இன்று வேலூர் மாஜிஸ்திரேட் கோர்ட் மும்மூர்த்தி முன்பு விசாரணைக்கு வந்தது. நளினி வரும் 29ம் தேதி கோர்ட்டில் ஆஜராக வேண்டும் என மாஜிஸ்திரேட் உத்தரவிட்டார். இதற்கான சம்மன் இன்று மதியம் நளினியிடம் வழங்கப்பட்டது.இது வரை வெளியே வந்தது இல்லை:


நளினியை பொறுத்தவரை போலீசார் வெளியே எந்த ஒரு காரணத்திற்கும் அழைத்து வருவதில்லை. கடந்த முறை தன்னை விடுவிக்க கோரி இவர் தாக்கல் செய்த மனு மட்டுமே விசாரிக்கப்பட்டது. இதற்கு அரசு எவ்வித பதிலும் அளிக்காததால் இவரது சிறைவாசம் நீடிக்கிறது. இப்போது நளினியை வெளியே அழைத்து வரவேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. கோர்ட்டுக்கு அழைத்து வரும் போது ஆயிரக்கணக்கான போலீசார் குவிக்கப்பட வேண்டும் என பாதுகாப்பு வட்டாரம் அறிவுறுத்தியுள்ளது. இதனால் சிறைத்துறை அதிகாரிகள் போலீசாருடன் பாதுகாப்பு விஷயம் குறித்து ஆலோசித்து வருகின்றனர்.
ராஜிவ் மகள் பிரியங்கா: நளினியை கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்னர் ராஜிவ் மகள் பிரியங்கா ராஜிவை கொன்றது ஏன் என நேரில் கேட்டறிந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement
Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (6)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
villupuram jeevithan - villupuram,இந்தியா
29-ஜூன்-201317:50:26 IST Report Abuse
villupuram jeevithan எல்லா கைதிகளும் செல் போன் சிறைக்குள் உபயோகிக்கிறார்கள் என்பது வெளிப்படையாக எல்லோருக்கும் தெரியும். இவரை மட்டும் குறி வைக்க காரணம் என்னவோ?
Rate this:
15 members
0 members
37 members
Share this comment
Cancel
K.Sugavanam - Sengkang,சிங்கப்பூர்
29-ஜூன்-201317:49:45 IST Report Abuse
K.Sugavanam தேவையில்லாத பப்ளிசிட்டி...தெனம் எத்தனை கைதிங்க கோர்டுக்கு கூட்டி வாரப்படறாங்க....
Rate this:
1 members
0 members
19 members
Share this comment
Cancel
Sivagangai K - puducherry,இந்தியா
29-ஜூன்-201317:25:21 IST Report Abuse
Sivagangai K ராஜிவை கொலை செய்த நளினிக்கு கண்டிப்பாக தூக்கு தண்டனை தான் தரவேண்டும்.
Rate this:
86 members
1 members
27 members
Share this comment
Cancel
Kader C - Chennai,இந்தியா
29-ஜூன்-201316:46:32 IST Report Abuse
Kader C வெளியே வர அனுமதிக்கக்கூடாது. ஆயுள் முழுக்க சிறைவாசம்தான் இவருக்கு சிறந்த மருந்து.
Rate this:
56 members
0 members
22 members
Share this comment
Cancel
appu - madurai,இந்தியா
29-ஜூன்-201316:37:24 IST Report Abuse
appu நீதியும் நியாயமும் ஜெயிக்கட்டும்....நளினி மட்டும் அல்ல யாராக இருப்பினும் விஷயம் எதுவாக இருப்பினும்....குற்றவாளி தப்பாமலும்,,,,நிரபராதி(அப்பாவி) தண்டிக்கப்படாமலும் இருக்கவேண்டியது அவசியம்....லாக் அப்பில் சிம் கார்டு நளினி உபயோகித்திருப்பின் அது தவறே...அதே போல வேறு யார் யார் உபயோகித்தார்களோ அவர்களும் விசாரிக்கப்பட்டு தண்டிக்கப்படவேண்டும்...
Rate this:
8 members
1 members
30 members
Share this comment
Cancel
காளி. சந்திர மௌலி - Kuala Lumpur,மலேஷியா
29-ஜூன்-201316:35:22 IST Report Abuse
காளி. சந்திர மௌலி ஆயிரக் கணக்கான போலீசாரை கொண்டு ஒரு கொலையாளிக்கு பாதுகாப்பு கொடுப்பதை விட நடப்பது நடக்கட்டும் என்று விட்டு விடலாமே.
Rate this:
67 members
0 members
20 members
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.
மேலும் செய்திகள்