E-paper| Mobile Apps

iPad

iPad E-paper

iPhone

Android

Android Tablet

Windows

Windows 8

Blackberry

bbicon OS 10

Mobile Election

| Get Font | Site Map |  RSS Feed
Advertisement
அதிருப்தி தே.மு.தி.க., எம்.எல்.ஏ.,க்கள் 7 பேர் சஸ்பெண்ட்
Advertisement
 
 
Advertisement
 
 
எழுத்தின் அளவு:
Advertisement

மாற்றம் செய்த நாள்

29 ஜூன்
2013
19:07
பதிவு செய்த நாள்
ஜூன் 29,2013 18:50

சென்னை: ராஜ்யசபா தேர்தலில் கட்சி உத்தரவை மீறி ஓட்டுப்போட்ட அதிருப்தி 7 தே.மு.தி.க., எம்.எல்.ஏ.,க்களை சஸ்பெண்ட் செய்து, கட்சி தலைவர் விஜயகாந்த் அறிவித்துள்ளார்.

கடந்த சட்டசபை தேர்தலில் அ.தி.மு.க., தே.மு.தி.க., கூட்டணி அமைத்து போட்டியிட்டன. இதில் தே.மு.தி.க.,வுக்கு 29 எம்.எல்.ஏ.,க்கள் கிடைத்தனர். அவர்களில் மதுரை மத்திய தொகுதி எம்.எல்.ஏ., சுந்தர்ராஜன், பேராவூரணி எம்.எல்.ஏ., அருண்பாண்டியன், திட்டக்குழு எம்.எல்.ஏ., தமிழழகன், ராதாபுரம் எம்.எல்.ஏ., மைக்கேல் ராயப்பன், செங்கம் தொகுதி எம்.எல்.ஏ., சுரேஷ் குமார், சேந்தமங்கலம் தொகுதி எம்.எல்.ஏ., சாந்தி, விருதுநகர் தொகுதி எம்.எல்.ஏ., மாபா பாண்டியராஜன் ஆகியோர் முதல்வரை சந்தித்து மனு கொடுத்தனர். அதன் பின்னர் அவர்கள் அதிருப்தி எம்.எல்.ஏ.,க்களாக செயல்பட துவங்கினர்.

இந்நிலையில், ராஜ்யசபா தேர்தலில் தே.மு.தி.க., சார்பில் இளங்கோவன் போட்டியிட்டார். இவருக்கு ஆதரவு கேட்டு தே.மு.தி..க., தலைவர் விஜயகாந்த், கட்சி கொறடா ஆகியோர் அதிருப்தி எம்.எல்.ஏ.,க்களுக்கு கடிதம் எழுதினர். மேலும் அவர்களிடம் தொலைபேசி மூலமும் ஆதரவு கேட்கப்பட்டது. ஆனால் அவர்கள் ராஜ்யசபா தேர்தலில் தே.மு.தி.க., வேட்பாளர்களுக்கு ஓட்டுப்போடாமல், அ.தி.மு.க., வேட்பாளர்களுக்கு ஆதரவாக ஓட்டுப்போட்டனர். ராஜ்யசபா தேர்தலில் இளங்கோவன் 22 ஓட்டுக்கள் மட்டுமே பெற்று தோல்வியடைந்தார்.

இந்நிலையில், கட்சி உத்தரவை மீறி ஓட்டுப்போட்ட 7 அதிருப்தி எம்.எல்.ஏ.,க்களையும் சஸ்பெண்ட் செய்து கட்சி தலைவர் விஜயகாந்த் உத்தரவிட்டுள்ளார். மேலும், கட்சி மாறி ஓட்டுப்போட்டது தொடர்பாக விளக்கமளிக்கவும் அவர்களுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.
சஸ்பெண்ட் செய்யப்பட்டது குறித்து கருத்து தெரிவித்துள்ள மைக்கேல் ராயப்பன், எங்களை தே.மு.தி.க.,விலிருந்து நிரந்தரமாக நீக்கினால் மகிழ்ச்சியடைவோம். உள்நோக்கத்துடன் ராஜ்யசபா தேர்தலில் தே.மு.தி.க.,வேட்பாளர் நிறுத்தப்பட்டுள்ளார். கட்சி கொறடா எங்களை நேரடியாக சந்தித்து பேசவில்லை என கூறினார்.

சேந்தமங்கலம் எம்.எல்.ஏ., சாந்தி கூறுகையில், எங்களை கட்சியிலிருந்து நீக்கினாலும் மக்கள் பணி தொடரும். வேட்பாளர் நிறுத்துவது பற்றி எங்களிடம் ஆலோசனை செய்யவில்லை என கூறினார்.




Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (4)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Vijayan S, Mumbai - mumbai,இந்தியா
30-ஜூன்-201315:02:38 IST Report Abuse
Vijayan S, Mumbai யானை தன் தலையிலேயே மண்ணை அள்ளி போட்டது போல் விஜயகாந்தின் செயல் உள்ளது. பாவம் வேறுவழி இல்லை. அரசியலில் தலைமை தாங்குவது என்பது சாதாரண விஷயமா. எல்லோரும் எம்.ஜி.ஆர். ஆகமுடியுமா.
Rate this:
4 members
0 members
1 members
Share this comment
Cancel
JALRA JAYRAMAN - chennai,இந்தியா
30-ஜூன்-201310:01:52 IST Report Abuse
JALRA JAYRAMAN அரசியலே துரோகம், சூழ்ச்சி, வஞ்சகம், ஏமாற்று வேலை, நிறைந்தது தான் இது விஜயகாந்த் அவர்களுக்கு தெரியாதா?
Rate this:
0 members
0 members
12 members
Share this comment
Cancel
sarasaran - pudugai  ( Posted via: Dinamalar Android App )
30-ஜூன்-201307:21:24 IST Report Abuse
sarasaran துரோகிகள்
Rate this:
4 members
0 members
30 members
Share this comment
DUBAKKUR RAVI - chennai,இந்தியா
30-ஜூன்-201316:14:27 IST Report Abuse
DUBAKKUR RAVIபச்சை துரோகிகள் என்று சொல்லுங்கள்..........
Rate this:
0 members
0 members
2 members
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
( OR )Login with
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.