E-paper| Mobile Apps

iPad

iPad E-paper

iPhone

Android

Android Tablet

Windows

Windows 8

Blackberry

bbicon OS 10

Mobile Election

| Get Font | Site Map |  RSS Feed
Advertisement
பல்கலைக்கு இடம் வழங்கியவர்களுக்கு இழப்பீடு: 20 வழக்குகளுக்கு ரூ. 38.25 கோடி ஒதுக்கீடு
Advertisement
 
 
Advertisement
 
 
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

29 ஜூன்
2013
22:32

கோவை: பல்கலைக்கழகத்துக்கு இடம் வழங்கியவர்கள் கூடுதலாக இழப்பீடு கேட்டு தொடர்ந்த வழக்குகளில், 20 வழக்குகளுக்கு 38.25 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.


கோவை பாரதியார் பல்கலைக்கழகம் அமைப்பதற்கு, 1983ம் ஆண்டு வடவள்ளி, சோமையம்பாளையம், மருதாபுரம் பகுதியில் 845 ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்பட்டது. நில உரிமையாளர்களான விவசாயிகள், 1168 பேருக்கு குறைந்த மதிப்பீடு செய்த தொகையே, இழப்பீடாக வழங்கப்பட்டது. "பாரதியார் பல்கலை நிர்வாகம் வழங்கிய குறைந்த இழப்பீடு தொகை போதாது; கூடுதலாக தர வேண்டும்' எனக் கேட்டு, கோவை கோர்ட்டில் விவசாயிகள் வழக்கு தொடர்ந்தனர். இவ்வழக்கு, 30 ஆண்டுகளாக விசாரிக்கப்பட்டது. "நிலத்தின் தன்மைக்கு ஏற்ப, சென்டுக்கு 3300, 2800,2500 மற்றும் 2200 ரூபாயுடன் 12 சதவீத கூடுதல் இழப்பீடும், காலதாமதத்துக்கு 30 சதவீத தொகையும் வழங்க வேண்டும்' என, வேண்டுகோள் விடுக்கப்பட்டது. கடந்த 2007ல் அளிக்கப்பட்ட தீர்ப்பின்படி, வழக்கு தொடர்ந்த நாளில் இருந்து ஒன்பது சதவீத வட்டி, தாமதத்துக்கு 15 சதவீத இழப்பீடும் சேர்த்து வழங்க தீர்ப்பு கூறப்பட்டது. இத்தீர்ப்புக்கு தடையோ, எதிர்ப்போ இல்லாத நிலையில், கடந்த ஆண்டு டிச.,31ல், ஐகோர்ட் உத்தரவுப்படி 20 வழக்குகளுக்கு 42.50 கோடி ரூபாய் இழப்பீடு வழங்க உத்தரவிட்டது. இத்தொகையில், 10 சதவீத வரிப்பிடித்தம் போக, 38.25 கோடி ரூபாய் 20 காசோலைகளாக மாவட்ட முதன்மை சார்பு நீதிமன்றத்தில் செலுத்தப்பட்டது. பாரதியார் பல்கலைக்கழகத்துக்கு நிலம் வழங்கியோர் சங்க தலைவர் வக்கீல் சிவஞானசுந்தரம்,செயலாளர் கணேசன் கூறுகையில்,"" பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு இவ்வழக்கின் தீர்ப்பு படி மேலும் 202 கோடி ரூபாய் வழங்க வேண்டும். தற்போது 20 வழக்குகளுக்கு 38.25 கோடி ரூபாய் வழங்க ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதன்படி சென்ட் ஒன்றுக்கு 4500 ரூபாய் கிடைக்கிறது. தீர்ப்பின்படி வழக்கு தொடர்ந்தவர்களுக்கு இனியும் 160 கோடி ரூபாய் வழங்க வேண்டும்,'' என்றார்.




Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.