E-paper| Mobile Apps

iPad

iPad E-paper

iPhone

Android

Android Tablet

Windows

Windows 8

Blackberry

bbicon OS 10

Mobile Election

| Get Font | Site Map |  RSS Feed
Advertisement
திருநங்கைகளை "ஒன்பது' என சொல்வதா: கருணாநிதி கண்டனம்
Advertisement
 
 
Advertisement
 
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

29 ஜூன்
2013
22:46

சென்னை: ""பொருளாதார கணக்கெடுப்பில், திருநங்கைகளைக் குறிக்க எண் ஒன்பதை பயன்படுத்துவது, அப்பிரிவினரை அவமானப்படுத்தும் செயல்,'' என, தி.மு.க., தலைவர் கருணாநிதி கூறியுள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: நாடு முழுவதும், ஆறாவது பொருளாதார கணக்கெடுப்பு நடந்து வருகிறது. இதில், குடும்ப உறுப்பினர் விவரம் சேகரிக்கப்படுகிறது. இதற்கான படிவத்தில், ஆணுக்கு எண் ஒன்றும், பெண்ணுக்கு எண் இரண்டும் குறிக்கப்படுகிறது. மூன்றாம் பாலினமான திருநங்கைகளுக்கு, "எண் ஒன்பது' என, குறிப்பிடுகின்றனர். திருநங்கைகளை, "ஒன்பது' என, அழைக்கும் வழக்கம், சில ஆண்டுகளாக இருந்தது. இதன்மூலம், அவர்களுக்கு பெரும் அவமானம் ஏற்படுவதைக் கருத்தில் கொண்டு, திருநங்கைகளுக்கு, "டி' என, குறிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. அவர்களுக்கு வழங்கப்பட்ட ரேஷன் கார்டுகளிலும், "டி' என, குறிக்கப்பட்டது. இந்நிலையில், பொருளாதார கணக்கெடுப்பில், "ஒன்பது' என, குறிப்பிடுவது, திருநங்கைகளை அவமானப்படுத்தும் செயலாக உள்ளது. எனவே, இத்தவறை மத்திய, மாநில அரசுகள் உடனடியாகக் களைய வேண்டும். இவ்வாறு, கருணாநிதி கூறியுள்ளார்.




Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (4)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Prakash - Singapore  ( Posted via: Dinamalar Android App )
30-ஜூன்-201313:00:06 IST Report Abuse
Prakash காரணம் இல்லாமல் கரிசனம் காட்டமாட்டார் இந்த கருணா.
Rate this:
3 members
0 members
6 members
Share this comment
Cancel
b.narayanakumar - erode,ஈக்வடார்
30-ஜூன்-201310:42:35 IST Report Abuse
b.narayanakumar இவருக்கு வேற வேலை இல்லையா? நாட்டு வளர்சிக்கு சிந்திக்க வேண்டியது நிறைய இருக்கு.
Rate this:
13 members
0 members
9 members
Share this comment
Cancel
s.maria alphonse pandian - CHENNAI-88,இந்தியா
30-ஜூன்-201306:34:24 IST Report Abuse
s.maria alphonse pandian நியாயமான கோரிக்கை...வெந்த புண்ணில் வேல் பாச்சுவது போல உள்ள இந்த 9 என்னும் எண்ணை மாற்றி வேறு எண் வழங்கப்பட வேண்டும்....பாதிக்கப்படும் எல்லோருக்குமாக குரல் கொடுக்கும் கலைஞருக்கு வாழ்த்துக்கள்..பாராட்டுக்கள்..நன்றிகள்....
Rate this:
51 members
1 members
105 members
Share this comment
Cancel
g.s,rajan - chennai ,இந்தியா
30-ஜூன்-201303:58:36 IST Report Abuse
g.s,rajan நாட்டில் எவ்வளவோ பிரச்சனைகள் இருக்க இவர் கவலை இப்படி ஜி.எஸ்.ராஜன் சென்னை .
Rate this:
3 members
0 members
7 members
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.