மதுரையில் பைலட் பிரவின் உடல் தகனம்

Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement
எழுத்தின் அளவு:
Advertisement

மதுரை: உத்தரகண்ட் மாநிலத்தில், மீட்பு பணியின் போது, ராணுவ ஹெலிகாப்டர் விழுந்து நொறுங்கியதில், இறந்த பைலட் பிரவின் உடல், சொந்த ஊரான மதுரைக்கு, தனி விமானம் மூலம், நேற்று கொண்டு வரப்பட்டு,தகனம் செய்யப்பட்டது. ஏராளமானோர் திரண்டு அவருக்கு கண்ணீர் அஞ்சலி செலுத்தினர். 33 குண்டுகள் முழங்க விமானப்படை வீரர்களின் மரியாதையுடன் அவரது உடல் தகனம் செய்யப்பட்டது.
டேராடூனில் இருந்து, தனிவிமானத்தில் மதுரை விமான நிலையம் வந்த பிரவின் உடலை, பாலகிருஷ்ணன் எஸ்.பி., மற்றும் ஆர்.டி.ஓ., ஆறுமுகம், தாசில்தார்கள் கங்காதரன், வீரராகவன் பெற்றனர். விமானப் படை வீரர்களின் வாகனத்தில், டி.வி.எஸ்., நகரில் உள்ள அவரது வீட்டுக்கு, உடல் கொண்டு செல்லப்பட்டது.

மகனே...மகனே: வீட்டின் முன் அவரது உறவினர்கள், அரசு அலுவலர்கள் உட்பட ஏராளமானோர் திரண்டு இருந்தனர். தெரு முழுவதும் அமைதி நிலவியது. பிரவின் உடலை விமான படை வீரர்கள் இறக்கியதும், அவரது தாய் மஞ்சுளா, படத்தை அணைத்தபடி கதறி அழுதது, அனைவரையும் கண்கலங்கச் செய்தது. பிரவினின் தாத்தா சின்னச்சாமி, பாட்டி சீதாலட்சுமி, உறவினர்கள், நண்பர்கள் கதறி அழுதது, கல் நெஞ்சையும் கரைப்பதாக இருந்தது.

அரசின் அஞ்சலி: தமிழக அரசு சார்பில் அமைச்சர் செல்லூர் ராஜூ, கலெக்டர் அன்சுல் மிஸ்ரா, மேயர் ராஜன்செல்லப்பா, மாநகராட்சி கமிஷனர் நந்தகோபால் ஆகியோர் மலர் வளையம் வைத்து, அஞ்சலி செலுத்தினர். அவரது தாயாருக்கு ஆறுதல் கூறிய அவர்கள், முதல்வர் ஜெயலலிதா கொடுத்து அனுப்பிய இரங்கல் கடிதம் மற்றும் 10 லட்ச ரூபாய்க்கான "செக்' வழங்கினர். குடியிருப்போர் நலச்சங்க நிர்வாகிகள், "பழங்காநத்தத்தில் கட்டப்படும் மேம்பாலத்திற்கு, "பிரவின்' பெயரை சூட்ட வேண்டும்,' என மனு கொடுத்தனர். இதுகுறித்து முதல்வரின் கவனத்திற்கு கொண்டு செல்வதாக, அமைச்சர் கூறினார்.

விமான படையினர் இரங்கல்: விமானப்படை குரூப் கமாண்டர் கே.எஸ்.என்.மூர்த்தி, என்.சி.சி.,கர்னல்கள் சஞ்சய்பாண்டே, ராஜேஷ்சின்கா, முத்து, ரயில்வே கோட்ட மேலாளர் ரஸ்தோகி, கூடுதல் மேலாளர் அஜீத்குமார் மற்றும் அதிகாரிகள் அஞ்சலி செலுத்தினர். அ.தி.மு.க.,- தி.மு.க.,- காங்கிரஸ், ம.தி.மு.க.,- மார்க்சிஸ்ட் கட்சியினர், செஞ்சிலுவை சங்கத்தினர், கெஜ்ரிவாலின் "ஆம்ஆத்மி', ஜனநாயக வாலிபர் சங்கம், தாம்ப்ராஸ் மற்றும் பல்வேறு குடியிருப்பு சங்கத்தினர், நீண்ட வரிசையில் நின்று பிரவின் உடலுக்கு அஞ்சலி செலுத்தினர். என்.சி.சி., மற்றும் விமானப்படை வீரர்கள், போலீசார் இணைந்து, கூட்டத்தினரை ஒழுங்குப்படுத்தினர்.

இறுதி ஊர்வலம்: பிரவின் உடல், ஒரு மணி நேரம் வீட்டில் வைக்கப்பட்டிருந்தது. பின், விமானப்படை வாகனத்தில் ஏற்றப்பட்டு, மூலக்கரை மின்மயானத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. வாகனத்தின் முன்னும், பின்னும் போலீஸ், வருவாய் அதிகாரிகளின் வாகனங்களுடன், ஏராளமான இளைஞர்கள் மோட்டார் சைக்கிளில் அணிவகுத்து சென்றனர். டி.வி.எஸ்., நகர், ஜெய்ஹிந்துபுரம், சோலையழகுபுரம், கீரைத்துறை வழி ஊர்வலமாக சென்ற வாகனங்கள், மதியம் 1.40 மணிக்கு, மயானத்தை அடைந்தன. விமானப்படை வீரர்கள், "சல்யூட்' அடித்து மரியாதை செய்து, பெட்டியை இறக்கினர்.

குண்டுகள் முழங்க இறுதி மரியாதை: மயானத்தில் அணிவகுத்து நின்ற விமானப்படை வீரர்கள் முன், பிரவின் உடல் எடுத்துச் செல்லப்பட்டது. பின், அஞ்சலி மண்டபத்தில் வைக்கப்பட்டது. உறவினர்கள் மட்டும் மண்டபத்திற்குள் அனுமதிக்கப்பட்டு, இறுதிச் சடங்குகள் நடந்தன. மதியம் 2 மணிக்கு, 11 விமானப்படை வீரர்கள், துப்பாக்கியை உயர்த்தி "3 ரவுண்டு' ஆகாயத்தை நோக்கி சுட்டு, இறுதி மரியாதை செலுத்தினர். பிரவின் உடல், மின்சார தகன அறைக்குள் கொண்டு செல்லப்பட்டு எரியூட்டப்பட்டது.

பிரவினுக்கு "சல்யூட்'

காலை 10.40 மணி- தனிவிமானத்தில் பிரவின் உடல் வந்தது.
மதியம் 12 மணி- பிரவின் உடல் வீடு வந்து சேர்ந்தது.
மதியம் 1 மணி- மின் மயானத்திற்கு இறுதி ஊர்வலம் புறப்பட்டது.
மதியம் 2 மணி- விமான படையினர் வானத்தை நோக்கி "3' ரவுண்டு சுட்டனர்.
மதியம் 2.05 மணி- தகன அறைக்குள் பிரவின் உடல் கொண்டு செல்லப்பட்டது.

துளிகள் :
பிரவின் உடல், வீட்டில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு இருந்தது. போலீஸ் உதவி கமிஷனர் கணேசன், மைக்கில் கூட்டத்தை கட்டுப்படுத்தினார். அஞ்சலி செலுத்திய அதிகாரிகள், அமைப்புகள், வீரரின் தாத்தா, பாட்டி உட்பட அனைத்து தரப்பினரையும் குறிப்பிட்டு "நேர்முக வர்ணனை' செய்தார்.
* அஞ்சலி நிகழ்ச்சியில் ஏராளமான இளைஞர்கள் பங்கேற்றனர். பிரவினுடன் படித்தவர்கள், நண்பர்கள் உட்பட அனைவரும் துயரத்துடன் காணப்பட்டனர்.
* விமானத்தில் இருந்து இறங்கியது முதல், மின்மயானத்தில் தகனம் செய்ய அனுப்பும் வரை, நிகழ்ச்சியில் பங்கேற்ற பலர், மொபைல் போன் மற்றும் கேமராக்களில் படம் பிடித்தனர்.
* டி.வி.எஸ்., நகரில் இருந்து மூலக்கரை மயானத்திற்கு சென்ற, இறுதி ஊர்வலத்தை, ரோட்டின் இருபுறமும் நின்ற ஏராளமானோர் பார்த்தனர்.
* இறுதி ஊர்வலப் பாதையில் பாதுகாப்பு பணியில் இருந்த ஜெய்ஹிந்துபுரம், கீரைத்துறை போலீசார், பிரவின் உடல் தாங்கிய வாகனம் கடந்து சென்ற போது, "சல்யூட்' அடித்து மரியாதை செய்தனர்.

AdvertisementAdvertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (2)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
HARIOM - PERTH,ஆஸ்திரேலியா
30-ஜூன்-201308:45:48 IST Report Abuse
HARIOM You are still living with us Flight squadron. Jai hind.
Rate this:
Share this comment
Cancel
மதுரை விருமாண்டி - சான் ஹோஸே, கலிபோர்னியா ,யூ.எஸ்.ஏ
30-ஜூன்-201304:17:10 IST Report Abuse
மதுரை விருமாண்டி பத்துத் திங்கள் சுமந்தாளே அவள் பெருமைப்பட வேண்டும் உன்னைப் பெற்றதனால் அவள், மற்றவராலே, போற்றப்பட வேண்டும்.. சோகத்தில் வார்த்தைகளை விட, கண்ணீர் தான் பெருகுகிறது.. இவரை இழந்து அல்லாடும் குடும்பத்தினருக்கு ஆறுதல் சொல்ல வழி தெரியவில்லை.. ஆயினும், காலம் கடந்தால், சோகம் கரையும் .. கடமை வீரனுக்கு கண்ணீர் அஞ்சலி..
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.
மேலும் செய்திகள்