Judge detained for cheat S.I. | திருமண ஆசைகாட்டி பெண் எஸ்.ஐ., ஏமாற்றம் : குன்னூர் நீதிமன்ற நீதிபதி அதிரடி கைது| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

திருமண ஆசைகாட்டி பெண் எஸ்.ஐ., ஏமாற்றம் : குன்னூர் நீதிமன்ற நீதிபதி அதிரடி கைது

Added : ஜூன் 29, 2013 | கருத்துகள் (10)
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement
திருமண ஆசைகாட்டி பெண் எஸ்.ஐ., ஏமாற்றம் : குன்னூர் நீதிமன்ற நீதிபதி அதிரடி கைது

குமாரபாளையம்: திருமணம் செய்வதாக ஆசை வார்த்தை கூறி, பெண் எஸ்.ஐ.,யுடன் குடும்பம் நடத்தி ஏமாற்றிய, குன்னூர் நீதிமன்ற நீதிபதியை, பல்லடம் போலீசார், நேற்று கைது செய்தனர். ஈரோடு மாவட்டம், அம்மாபேட்டை ஊஞ்சப்பாளையத்தை சேர்ந்தவர் நீதிபதி, தங்கராஜ், 36. இவர், குன்னூர் நீதிமன்றத்தில், நீதிபதியாக பணிபுரிந்து வருகிறார். இவரும், திருப்பூர் மாவட்டம், பல்லடம் போலீஸ் ஸ்டேஷனில் எஸ்.ஐ.,யாக பணிபுரியும் உமா மகேஸ்வரி (எ) மகாலட்சுமி, 32, என்பவரும், இரண்டு ஆண்டுகளாக திருமணம் செய்யாமல், இல்லற வாழ்க்கையில் ஈடுபட்டு வந்தனர். திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறிய, நீதிபதி, தங்கராஜ், குடும்பத்தில் ஏற்பாடு செய்த வேறொரு பெண்ணை திருமணம் செய்தார். இதை, எஸ்.ஐ., மகாலட்சுமிக்கு தெரிவிக்காமல் மறைத்தார். ஒரு கட்டத்தில், நீதிபதி, தங்கராஜ் திருமணமான விவரம் வெளியே தெரிய ஆரம்பித்தது. இதுகுறித்து, நீதிபதி தங்கராஜிடம், எஸ்.ஐ., மகாலட்சுமி கேட்டார். இதற்கு, மழுப்பலான பதில் அளித்த நீதிபதி, தங்கராஜ், பின், திருமணம் செய்ததை ஒப்புக் கொண்டார். அதிர்ச்சியடைந்த, எஸ்.ஐ., மகாலட்சுமி, பல்லடம் போலீசில் புகார் செய்தார்.

இதையறிந்த, நீதிபதி, தங்கராஜ், போலீஸ் கைது நடவடிக்கையில் இருந்து தப்ப, நாமக்கல் மாவட்டம், குமாரபாளையம் தட்டாங்குட்டை அருந்ததியர் காலனியில் உள்ள அவரது சகோதரர் மாதேஷ் என்பவர் வீட்டில், நேற்று முன்தினம் தஞ்சம் புகுந்தார்.
தகவல் அறிந்த பல்லடம் போலீசார், நேற்று காலை, குமாரபாளையத்துக்கு விரைந்து சென்று, நீதிபதி, தங்கராஜை கைது செய்து, அழைத்துச் சென்றதாக கூறப்படுகிறது. நீதிபதி கைதான விவகாரம், பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...Advertisement

வாசகர் கருத்து (10)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
amukkusaamy - chennai,இந்தியா
30-ஜூன்-201314:33:08 IST Report Abuse
amukkusaamy இது மாதிரி சராசரி ஜோடி இருந்திருந்தா "விபச்சார வழக்குல" புடிச்சு உள்ள போட்டுருப்பாங்க...இவங்கள என்ன செய்ய?
Rate this:
Share this comment
Cancel
Ashok ,India - India,இந்தியா
30-ஜூன்-201310:41:24 IST Report Abuse
Ashok ,India அதெப்படி திருமணம் செய்யாமல் இல்லற வாழ்க்கை நடத்தினார் இந்த பெண் சப் இன்ஸ்பெக்டர்??. சட்டம் தெரிந்த நீதிபதி சட்டம் ஒழுங்கை பாதுகாக்கும் பெண் காவல் அதிகாரி இருவரும் எதோ சிறுபிள்ளைகள் விளையாடுவது போல நடந்து கொண்டது இந்த சமூகத்திற்கு அவமானம். சட்டம் தெரிந்தும் மதிக்காத நீதிபதி, திருமணம் செய்யாமல் இல்லற வாழ்க்கைக்கு போன பெண் காவல் அதிகாரி இருவரையும் டிஸ்மிஸ் செய்யுமா இவர்கள் படித்த சட்டம்??
Rate this:
Share this comment
Cancel
Tamilan - Chennai,இந்தியா
30-ஜூன்-201308:39:57 IST Report Abuse
Tamilan ஒரு நீதிபதியை இப்படியா............ சூப்பர்
Rate this:
Share this comment
Cancel
Vasu Murari - Chennai ,இந்தியா
30-ஜூன்-201304:00:58 IST Report Abuse
Vasu Murari நீதிபதி அவர்கள் தனக்கொரு தனியான நீதியை ஏற்படுத்திக்கொண்டு விட்டார் போலும்? நீதியும் இது போன்ற நீதியை மீறும் பதியும் இரட்டைக் குழல் துப்பாக்கியா? சீக்கிரம் அவருக்கு நிரந்தரமாக அரசின் இலவச களி விருந்து ஏற்பாடு செய்யுங்களேன்.
Rate this:
Share this comment
Cancel
Bala Subramani - Pittsburgh,யூ.எஸ்.ஏ
30-ஜூன்-201303:48:41 IST Report Abuse
Bala Subramani சபாஷ் நீதிபதியே இந்த மாதிரி செய்தால்?.
Rate this:
Share this comment
Cancel
Subramanian.S - Chennai,இந்தியா
30-ஜூன்-201303:11:05 IST Report Abuse
Subramanian.S No learned judge will indulge in such cheap behavior. Such people bring shame to the entire judicial community. We the common people hope judiciary in India is the institution protecting the rights of ordinary citizens. It is a long ping demand that the ion of judges is to be based on the competence, aptitude, qualities like moral values, concern for the society etc.The political pressure and e ism should not play in the ion of judges at any level. .
Rate this:
Share this comment
Karam chand Gandhi - Auroville,இந்தியா
30-ஜூன்-201319:20:53 IST Report Abuse
Karam chand Gandhi அப்பா சுப்பு நீங்க இந்தியாவில் தான் வாழ்கிறீர்கள். நீதிபதிகள்தான் அதிகமாக லஞ்சம் வாங்குவதாக பத்திரிகையில் வருகின்றன உங்களுக்கு தெரியாதா? . ...
Rate this:
Share this comment
Cancel
Mr y - thamizhnadu,இந்தியா
30-ஜூன்-201303:01:03 IST Report Abuse
Mr y நீதி கெட்ட... பதி
Rate this:
Share this comment
Cancel
Magi - Muscat,ஓமன்
30-ஜூன்-201301:58:31 IST Report Abuse
Magi நீதி (நீதிபதி) யின் மறுபக்கம்???
Rate this:
Share this comment
Abu Hameed - dammam,சவுதி அரேபியா
30-ஜூன்-201311:06:32 IST Report Abuse
Abu Hameedஇதுதான் இங்குள்ள நீதிபதிகளின் லட்சணம்...
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை