கோல்கட்டா:""பெண்களுக்கு எதிரான குற்றங்களை தடுக்க, மாநில அரசுகள், உறுதியான நடவடிக்கை எடுக்க வேண்டும்,'' என, சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி, அல்டாமஸ் கபீர் கூறினார்.டில்லியில் நடந்த விழாவில் பங்கேற்ற, சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி, அல்டாமஸ் கபீர் கூறியதாவது:பெண்களுக்கு எதிரான, பாலியல் குற்றங்கள் அதிகரித்துள்ளன. இதை, தடுத்து நிறுத்த வேண்டும். சம்பந்தபட்ட மாநில அரசுகள், பெண்களுக்கு எதிரான குற்றங்ககளை தடுக்க, உறுதியான, கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.நிர்வாகமும், விசாரணை நடத்தும் அமைப்புகளும், ஒருங்கிணைந்து செயல்பட்டால் மட்டுமே, இதுபோன்ற குற்றங்களை தடுக்க முடியும். பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான வழக்குகளை விசாரிக்க, விரைவு கோர்ட்டுகளை அதிக அளவில் அமைக்க வேண்டும்.இவ்வாறு, நீதிபதி, அல்டாமஸ் கபீர் கூறினார்.