உத்தரகண்ட் வெள்ளம், நிலச்சரிவில் 10 ஆயிரம் பேர் பலி?
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement
எழுத்தின் அளவு:
Advertisement

டேராடூன்: உத்தரகண்டில், மீட்பு பணிகள் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ள நிலையில், நேற்று அங்கு பெய்த பலத்த மழை காரணமாக, மீட்பு பணி தொய்வடைந்துள்ளது. அதேநேரத்தில், வெள்ளப் பெருக்கு மற்றும் நிலச்சரிவில் சிக்கி, 10 ஆயிரம் பேர் பலியாகியுள்ளதாக, உத்தரகண்ட் சட்டசபை சபாநாயகர் கூறியுள்ளார்.

இமயமலையின் அடிவாரத்தில் உள்ள, உத்தரகண்ட் மாநிலத்தை, கடந்த, 16 மற்றும் 17ம் தேதி பெய்த பேய் மழை, புரட்டிப் போட்டது. பலத்த மழையை தொடர்ந்து, வெள்ளப் பெருக்கும், அதன் தொடர்ச்சியாக, பல இடங்களில் நிலச் சரிவும் ஏற்பட்டதால், அம்மாநிலத்தின், ருத்ர ப்ரயாக், சமோலி, உத்தரகாசி ஆகிய மாவட்டங்கள், வரலாறு காணாத அளவுக்கு பாதிக்கப்பட்டன. அங்குள்ள, கேதார்நாத், பத்ரி நாத், கங்கோத்ரி, யமுனோத்ரி ஆகிய புண்ணிய தலங்கள், மிகப் பெரிய பாதிப்பை சந்தித்தன. அங்கு சென்றிருந்த பக்தர்களும், வெள்ளத்தில் சிக்கினர். இதுவரை, 1,000க்கும் மேற்பட்டோர் இறந்துள்ளதாக அரசு தரப்பு தெரிவிக்கிறது. அதேநேரத்தில், 10 ஆயிரம் பேர் இறந்துள்ளதாக, உத்தரகண்ட் சபாநாயகர், கோவிந்த்சிங் குஞ்ச்வாலா கூறியுள்ளார். 3,000 பேரை காணவில்லை என, தெரிவிக்கப்பட்டுள்ளது. பல இடங்களில், வீடுகள், சாலைகள், கட்டடங்கள், மின் கம்பங்கள் போன்றவை, இருந்த இடமே தெரியவில்லை. எங்கு பார்த்தாலும், இடிபாடுகளும், அவற்றில், புதையுண்டு போயுள்ள உடல்களுமாக காட்சி தருகின்றன. வெள்ளத்தில் சிக்கிய பெரும்பாலானவர்களை, ராணுவத்தினர் மீட்டு விட்டனர். மீதமுள்ளவர்களை மீட்கும் பணி, நடந்து வருகிறது. இந்நிலையில், மீட்பு பணி, இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளதாக, ராணுவ தளபதி, விக்ரம் சிங், நேற்று முன்தினம் தெரிவித்தார். இதையடுத்து, நேற்றுடன், மீட்பு பணிமுடிவடையும் என, எதிர் பார்க்கப்பட்டது.

ஆனால், நேற்று அதிகாலை முதல், உத்தரகண்டில், பலத்த மழை பெய்யத் துவங்கியது. இதனால், மீட்பு பணிகள் முடங்கின. மழை நின்ற பின், மீட்பு பணிகளை துவங்கப் போவதாக, ராணுவம் தரப்பில் அறிவிக்கப்பட்டது. கேதார்நாத்தில், நிலச்சரிவில் புதைந்திருந்த, 34 உடல்கள், நேற்று எரியூட்டப்பட்டன. இதற்கிடையே, கேதார்நாத்தில் மீட்பு பணிகள் முடிவடைந்துள்ள நிலையில், மற்றொரு புண்ணிய தலமான, சமோலி மாவட்டத்தில் உள்ள, பத்ரிநாத்தில், 1,000க்கும் மேற்பட்டோர் சிக்கியுள்ளதாகவும், அவர்களை மீட்பதற்கான முயற்சிகள் துவங்கப்பட்டுள்ளதாகவும், தகவல் வெளியாகியுள்ளது. அங்கு சிக்கியுள்ளவர்களில் பெரும்பாலானோர், பக்தர்கள். ஹெலிகாப்டர்கள் மூலம் மட்டுமே, அவர்களை மீட்க வேண்டியுள்ள நிலையில், அங்கு பெய்து வரும், பலத்த மழை, இதற்கு பெரும் சவாலாக உருவெடுத்துள்ளது.


பாதிப்பு:

உத்தரகண்டில், மொத்தம் உள்ள, 22 ஆயிரம் கிராமங்கள் உள்ளன. இவற்றில், 2,375 கிராமங்கள், வெள்ளப் பெருக்கில், உருக்குலைந்து விட்டன. நாட்டின் மற்ற பகுதிகளிலிருந்து, அந்த கிராமங்கள் துண்டிக்கப்பட்டிருந்தன. இங்கு, சாலை வசதிகளை அமைக்கும் பணி, போர்க்கால அடிப்படையில் துவங்கியுள்ளது. இன்னும், 739 கிராமங்களுக்கு, மீட்பு குழுவினரால் செல்ல முடியவில்லை.


மதிப்பீடு:

உத்தரகண்டில், வெள்ள பாதிப்பு ஏற்பட்டு, 15 நாட்களாகியும், இதுவரை, அங்கு எத்தனை பேர் உயிரிழந்துள்ளனர், எத்தனை பேர் மீட்கப்பட்டுள் ளனர், வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட வீடுகள், கட்டடங்கள் ஆகியவற்றின் எண்ணிக்கை எவ்வளவு, ஒட்டு மொத்தமாக ஏற்பட்ட சேதம் எவ்வளவு என்பது குறித்த விவரங்கள், இன்னும் துல்லியமாக தெரியவில்லை. இதுகுறித்து மதிப்பிடுவதற்காக, மத்திய தொல்பொருள் ஆராய்ச்சி துறையின் உதவியை, உத்தரகண்ட் அரசு நாடியுள்ளது. இதையடுத்து, ஐந்து நிபுணர்கள் அடங்கிய குழு, அங்கு விரைந்துள்ளது.

AdvertisementAdvertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.
மேலும் செய்திகள்