E-paper| Mobile Apps

iPad

iPad E-paper

iPhone

Android

Android Tablet

Windows

Windows 8

Blackberry

bbicon OS 10

Mobile Election

| Get Font | Site Map |  RSS Feed
Advertisement
அரைகுறையாக நடத்தப்படும் காளஹஸ்தி கோவில் அன்னதான திட்டம்
Advertisement
 
 
Advertisement
 
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

29 ஜூன்
2013
23:18

திருப்பதி: காளஹஸ்தி கோவிலில், அன்னதானத்திற்காக பெரும் தொகையை, பக்தர்கள் நன்கொடையாக அளிக்கின்றனர். ஆனால், கோவில் நிர்வாகமோ, அரைகுறையாகவே, அன்னதானம் அளிக்கிறது. இதனால், வெகு தொலைவில் இருந்து வரும் பக்தர்கள், மிகவும் சிரமப்படுகின்றனர்.


ஆந்திர மாநிலம், சித்தூர் மாவட்டத்தில் உள்ள திருமலை கோவிலும், காளஹஸ்தி கோவிலும், புகழ் பெற்றவை. இதில், காளஹஸ்தி கோவில், ராகு கேது தலமாகவும், சர்ப்ப தோஷ நிவாரண தலமாகவும் கருதப்படுகிறது. திருமலையில் இருந்து, 26 கி.மீ., தொலைவில், காளஹஸ்தி கோவில் அமைந்துள்ளது. திருமலைக்கு வரும் பக்தர்ககளில், 30 சதவீதம் பேர், காளஹஸ்தி கோவிலுக்கு செல்கின்றனர். தினசரி, 40 ஆயிரம் பேரும், வார இறுதி நாட்களில், 50 ஆயிரம் பேரும், காளஹஸ்தி கோவிலுக்கு செல்கின்றனர். இந்த கோவிலில், திங்கட்கிழமை அன்று, 800 பேருக்கும், மற்ற நாட்களில், 400 பேருக்கு மட்டுமே அன்னதானம் அளிக்கப்படுகிறது. தினசரி, 1,000 பேருக்கு அன்னதானம் வழங்க, மூன்று ஆண்டுக்கு முன், அறநிலையத் துறை அனுமதி அளித்தது. ஆனால், அந்த அனுமதி, இன்று வரை, காகித வடிவில் மட்டுமே உள்ளது. காளஹஸ்தி கோவிலுக்கு நன்கொடை அதிகளவில் வந்தாலும், கோவில் நிர்வாகிகள், அன்னதானத் திட்டத்தை முறையாகச் செயல்படுத்த நடவடிக்கை எடுக்கவில்லை. கடந்த, ஐந்து ஆண்டுகளில், அன்னதானத்திற்கு மட்டுமே, 3.84 கோடி ரூபாய் நன்கொடையாக கிடைத்துள்ளது. காளஹஸ்தி கோவிலில், அன்னதான மண்டபம் கட்டப்பட்டு, மூன்று மாதமாகியும், இன்னும் பயன்பாட்டிற்கு வரவில்லை. இந்த மண்டபத்தை, விரைவில் பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும்; தினசரி, 1,000 பேருக்கு அன்னதானம் வழங்க வேண்டும் என, பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.




Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
( OR )Login with
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.