பா.ஜ., மூத்த தலைவர் கோபிநாத் முண்டேயின் பதவியை பறிங்க: தேர்தல் ஆணையத்திடம் காங்கிரஸ் கோரிக்கை| Dinamalar

பா.ஜ., மூத்த தலைவர் கோபிநாத் முண்டேயின் பதவியை பறிங்க: தேர்தல் ஆணையத்திடம் காங்கிரஸ் கோரிக்கை

Added : ஜூன் 29, 2013
Advertisement
பா.ஜ., மூத்த தலைவர் கோபிநாத் முண்டேயின் பதவியை பறிங்க: தேர்தல் ஆணையத்திடம் காங்கிரஸ் கோரிக்கை

புதுடில்லி: "கடந்த லோக்சபா தேர்தலின் போது, தேர்தல் பிரசாரத்திற்கு, எட்டு கோடி ரூபாய் செலவிட்டதாக தெரிவித்துள்ள, பா.ஜ., மூத்த தலைவர், கோபிநாத் முண்டேயின் பதவியை பறிக்க வேண்டும்' என, காங்கிரஸ் கோரிக்கை விடுத்துள்ளது. அதே நேரத்தில், இந்த விவகாரம் தொடர்பாக, முண்டேக்கு நோட்டீஸ் அனுப்புவது குறித்து, தேர்தல் ஆணையம் பரிசீலித்து வருகிறது.


ரூ.8 கோடி:

பா.ஜ., மூத்த தலைவர் கோபிநாத் முண்டே; லோக்சபா எதிர்க்கட்சி துணைத் தலைவராக உள்ள இவர், இரு நாட்களுக்கு முன், மும்பையில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசுகையில், "தேர்தலுக்கு தேர்தல் பிரசார செலவுகள் அதிகரிக் கின்றன. 1980ல், சட்டசபை தேர்தல் பிரசாரத்திற்கு, 29 ஆயிரம் ரூபாய் செலவிட்ட நான், 2009 லோக்சபா தேர்தலின் போது, எட்டு கோடி ரூபாய் செலவிட்டேன். அதனால், தேர்தல் செலவுகளுக்கு அரசே நிதி அளிப்பது பற்றி பரிசீலிக்க வேண்டும்' என்றார். லோக்சபா தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர், 25 லட்சம் ரூபாய் மட்டுமே செலவழிக்க வேண்டும் என்பது விதி. அதை மீறி, எட்டு கோடி ரூபாய் செலவிட்டதாக, முண்டே தெரிவித்துள்ளது, சர்ச்சையை கிளப்பியுள்ளது. வரையறுக்கப்பட்ட தொகைக்கு மேலாக, 7.75 கோடி ரூபாய் செலவிட்ட, கோபிநாத் முண்டேயின், எம்.பி., பதவியை பறிக்க வேண்டும் என, தேர்தல் ஆணையத்திற்கு காங்கிரஸ் கோரிக்கை விடுத்து உள்ளது.

இது தொடர்பாக, காங்கிரஸ் தலைவர்கள், சத்தியபிரதா சதுர்தேவி மற்றும் சஞ்சய் நிருபம் கூறியதாவது: மகாராஷ்டிரா மாநிலம், பீட் லோக்சபா தொகுதியிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட, முண்டேயின், எம்.பி., பதவியை பறிக்க வேண்டும். தேர்தல் விதிகளை மீறி செயல்பட்டதே, அவரே ஒப்புக் கொண்டுள்ளார். தேர்தல் ஆணையம், முண்டே மீது, உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். அவரை அழைத்து விசாரிக்க வேண்டும். இவ்வாறு சதுர்வேதி மற்றும் நிருபம் கூறினர்.


நோட்டீஸ்:

இதற்கிடையில், லோக்சபா தேர்தல் பிரசாரத்திற்கு, எட்டு கோடி ரூபாய் செலவிட்டதாக தெரிவித்துள்ள, முண்டேக்கு நோட்டீஸ் அனுப்பி விளக்கம் கேட்பது குறித்து, தேர்தல் ஆணையம் பரிசீலித்து வருகிறது. இதற்காக, முண்டேயின் பேச்சுக்கள் அடங்கிய, "சிடி'யை பெறும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது. இந்நிலையில், முண்டேயை பாதுகாக்கும் வகையில், பா.ஜ., தகவல் தொடர்பாளர் பிரகாஷ் ஜாவடேகர் கூறியதாவது: தேர்தல்களுக்கு அரசே நிதியுதவி அளிப்பது குறித்த, முக்கிய பிரச்னை பற்றி முண்டே பேசியுள்ளார். தேர்தல் செலவுகள் அதிகரிப்பது குறித்தும், கவலை தெரிவித்துள்ளார். இதன்மூலம், ஒரு முக்கிய பிரச்னை பற்றி, நாடே விவாதிக்கும் நிலைமையை உருவாக்கியுள்ளார். ஆனால், முண்டேயின் பேச்சை, சிலர் தவறாக திரித்துக் கூறி, அதன்மூலம் ஆதாயம் தேட முற்பட்டுள்ளனர். இவ்வாறு ஜாவடேகர் கூறினார்.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை