உத்தரகண்டில் சிக்கிய தமிழகத்தை சேர்ந்த 14 பேரின் கதி என்ன? தகவல் கிடைக்காமல் தமிழக அரசு குழுவினர் திணறல்
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement
எழுத்தின் அளவு:
Advertisement

""உத்தரகண்டில், மழை, வெள்ள பாதிப்பு பகுதிகளில் சிக்கிய, தமிழர்களில், 413 பேர் மீட்கப்பட்டு, சென்னைக்கு அனுப்பி வைக்கப்பட்டு உள்ளனர். இருந்தாலும், புதுச்சேரி கல்லூரி உதவிப் பேராசிரியர் உட்பட, 14 பேரின் நிலைமை என்னவானதென்று தெரியவில்லை,'' என, தமிழக அரசின் டில்லி பிரதிநிதி ஜக்கையன் தெரிவித்து உள்ளார்.
உத்தரகண்டில் உள்ள, கேதார்நாத் மற்றும் பத்ரிநாத் போன்ற புனித தலங்களுக்கு யாத்திரை சென்றிருந்த, தமிழகத்தைச் சேர்ந்த பலரும், இந்த மழை வெள்ள பாதிப்புக்கு ஆளாகினர். அவர்களை மீட்டு, பத்திரமாக, சொந்த ஊருக்கு அனுப்பி வைக்க, தமிழக அரசின் சார்பில் அமைக்கப்பட்ட குழு, கடந்த, 20ம் தேதி, உத்தரகண்ட் தலைநகர் டேராடூன் சென்றது. இதுவரை, 413 பேரை, தமிழக அரசு குழுவினர் மீட்டு, சென்னைக்கு அனுப்பி வைத்து உள்ளது.


குழு தலைவர், ஜக்கையன் நிருபர்களிடம் கூறியதாவது: உத்தரகண்டில், மழை, வெள்ள பாதிப்பு பகுதிகளில் சிக்கியிருந்த, பெரும்பாலான தமிழர்களை மீட்டு விட்டோம். மீதமுள்ளவர்களையும், மீட்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு உள்ளன. எந்தெந்த வழிகளில் எல்லாம் தகவல்கள் பெற முடியுமோ, அத்தனை வழிகளிலும் தகவல்களைப் பெற்று, சிக்கியவர்களை மீட்டு வருகிறோம். ஆனாலும், தமிழகத்தைச் சேர்ந்த இன்னும், 14 பேரின் நிலைமை என்னவானது என, தெரியவில்லை. அவர்களில், ஒருவரின் பெயர் பாபு. உத்தரகண்டில், வெள்ளம் திடீரென பெருக்கெடுத்து ஓடியபோது, அதில் சிக்கி, வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டு உள்ளார். அவர் தண்ணீரில் அடித்துச் செல்லப்படுவதை, அவருடன் சென்ற சக பயணிகள் சிலர் பார்த்து உள்ளனர். அவரின் நிலைமை என்னவென்று தெரியவில்லை. அதேபோல், விஜயாபாஸ்கர் என்ற மற்றொருவர், கேதர்நாத்தில் இருந்து திரும்பும்போது, வெள்ளத்தில் சிக்கியுள்ளார். அவர், அமலாடாப் என்ற இடத்தில், உயிருக்கு பயந்த நிலையில் தங்கியிருந்தாகவும், அதன் பின் பலியாகி விட்டதாகவும் கூறப்படுகிறது. இருந்தாலும், இந்த தகவலை உறுதி செய்ய முடியவில்லை.


சென்னையைச் சேர்ந்த ரமா - சந்திரமவுலி தம்பதியும், கேதார்நாத்தில் ஏற்பட்ட வெள்ளத்தில் பிரிந்துள்ளனர். இவர்களில், ரமா மட்டும் ஒரு பெரிய பள்ளத்திற்குள் சிக்கியுள்ளார். பின், ராணுவ ஹெலிகாப்டர் மூலம் கண்டறியப்பட்டு, காப்பாற்றப்பட்டு, டில்லிக்கு அழைத்து வரப்பட்டு, சென்னைக்கு அனுப்பி வைக்கப்பட்டு உள்ளார். சந்திரமவுலி பற்றி இதுவரை எந்தத் தகவலும் கிடைக்கவில்லை. டேராடூன் கல்லூரியில் நடைபெற்ற கருத்தரங்கில் பங்கேற்க, புதுச்சேரியில் இருந்து வந்த, கல்லூரி உதவிப் பேராசிரியர் குமரேசன், கடந்த, 16ம் தேதி, டேராடூன் வந்து சேர்ந்து விட்டதாக, வீட்டிற்கு தகவல் தெரிவித்து உள்ளார். அவரைப் பற்றியும், தகவல் இல்லை. கருத்தரங்கு நடைபெற்றதாக கூறப்படும், கல்லூரியைத் தொடர்பு கொண்டபோது, அவர், கருத்தரங்கில் பங்கேற்கவே இல்லை என, கூறுகின்றனர். தமிழகத்திலிருந்து, புனித பயணமாக வந்து, மழை, வெள்ளத்தில் சிக்கி, இதுவரை கண்டு பிடிக்கப்படாமல் உள்ள, 14 பேரில், 12 பேர், விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள். இவர்களைப் பற்றிய தகவல்கள், உறவினர்கள் மூலம் எங்களுக்கு கிடைத்தாலும், இவர்கள் தற்போது உத்தரகண்டில் எங்கே சிக்கியுள்ளனர் என்பதை கண்டுபிடிக்க முடியவில்லை. இவ்வாறு, ஜக்கையன் கூறினார்.


- நமது டில்லி நிருபர் -


AdvertisementAdvertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (2)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
s.maria alphonse pandian - CHENNAI-88,இந்தியா
30-ஜூன்-201306:30:41 IST Report Abuse
s.maria alphonse pandian தமிழகத்தை சேர்ந்த 14 பேர் மட்டுமே காணவில்லை என்பது ஏற்க தக்கதல்ல.....இது அதிகாரபூர்வமாக பெயரை பதிவுசெய்து கட்டணம் செலுத்தி சுற்றுலா நிறுவனங்களின் மூலம் சென்றவர்களின் எண்ணிக்கை மட்டுமே..தனிப்பட்ட முறையில் எவ்வளவோ பேர் சென்று இருக்கலாம்........
Rate this:
Share this comment
Cancel
யதார்தவாதி வெகுஜன விரோதி - சிராப்பள்ளி,இந்தியா
30-ஜூன்-201305:45:42 IST Report Abuse
யதார்தவாதி வெகுஜன விரோதி தினமும் கலையில் முதல்வர் விஜய் பஹுகுண இன்னும் 1000 பேர்கள் மட்டும் மீட்க பட வேண்டும் என்று அறிக்கை விடுகிறார். ஆனால் மதியம் செய்திகளில் இன்னும் 10 ஆயிரம் பேர் மீட்க பட வேண்டும், அல்லது 8000 மீட்கப்படவேண்டும் என்று மாறுபட்ட செய்திகள் வெளியாகிறது. மக்களின் கோபத்திற்கு பயந்து அரசு உண்மை நிலையை மறைகிறது என்பது உறுதியாக தெரிகிறது.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.
மேலும் செய்திகள்