பா.ஜ.,வுக்கு திரும்புகிறாரா எடியூரப்பா? நிபந்தனை விதிக்கிறார் மாநில தலைவர்| Dinamalar

பா.ஜ.,வுக்கு திரும்புகிறாரா எடியூரப்பா? நிபந்தனை விதிக்கிறார் மாநில தலைவர்

Added : ஜூன் 29, 2013 | கருத்துகள் (1)
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement
பா.ஜ.,வுக்கு திரும்புகிறாரா எடியூரப்பா? நிபந்தனை விதிக்கிறார் மாநில தலைவர்

பெங்களூரு: ""முன்னாள் முதல்வர், எடியூரப்பா, மீண்டும் பா.ஜ.,வில் இணைய விரும்பினால், அதுகுறித்து, கட்சி மேலிடத்துக்கு அவர், முறைப்படி தகவல் தெரிவிக்க வேண்டும்,'' என, கர்நாடகா மாநில பா.ஜ., மேலிட பொறுப்பாளர், தவார் சந்த் கெலாட் கூறினார்.
கர்நாடகா மாநிலத்துக்கான, பா.ஜ., மேலிட பொறுப்பாளர், தவார் சந்த் கெலாட் கூறியதாவது: கர்நாடகா முன்னாள் முதல்வர், எடியூரப்பா, பா.ஜ.,வுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக, கட்சியிலிருந்து விலகி, கே.ஜே.பி., என்ற புதிய கட்சியை துவக்கினார். சமீபத்தில் நடந்த சட்டசபை தேர்தலில், அவரின் கட்சிக்கு, எதிர்பார்த்த வெற்றி கிடைக்கவில்லை. இதனால், அவர், மீண்டும் பா.ஜ.,வில் இணையப் போவதாக, தகவல் வெளியாகியுள்ளது. எடியூரப்பா, மீண்டும் பா.ஜ.,வில் இணைவதை வரவேற்கிறோம். ஆனால், அந்த எண்ணம் அவருக்கு இருந்தால், அதுகுறித்து, கட்சி மேலிடத்துக்கு, முறைப்படி, அவர், தகவல் தெரிவிக்க வேண்டும். கட்சியின் உயர்மட்ட குழு, அதை பரிசீலித்து முடிவு எடுக்கும். கர்நாடகா மாநில பா.ஜ., தலைவர்கள், இதை முடிவு செய்ய முடியாது. தனிப்பட்ட நபர்கள் எடுக்கும் முடிவுக்கு முக்கியத்துவம் அளிக்க முடியாது. இவ்வாறு, தவார் சந்த் கெலாட் கூறினார்.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Krish - delhi,இந்தியா
30-ஜூன்-201308:15:43 IST Report Abuse
Krish சாக்கடைக்கு ஏது போக்கிடம்?
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை