Uratha sindanai | உரத்த சிந்தனை: நரேந்திர மோடியை நிராகரிப்பது நியாயமா?- வி.சண்முகநாதன் | Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

உரத்த சிந்தனை: நரேந்திர மோடியை நிராகரிப்பது நியாயமா?- வி.சண்முகநாதன்

Added : ஜூன் 29, 2013 | கருத்துகள் (15)
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
உரத்த சிந்தனை: நரேந்திர மோடியை நிராகரிப்பது நியாயமா?- வி.சண்முகநாதன்

இன்றைய தினம் சாதாரண மக்களை, விலைவாசி பிரச்னை பெரிதும் வாட்டி எடுக்கிறது. மத்திய அமைச்சர்களின் ஊழலால் மக்கள் கொந்தளித்துக் கொண்டிருக்கின்றனர்.

மத்திய அரசின் நிதி நிர்வாகக் கோளாறினால், ரூபாயின் மதிப்பு நாள்தோறும் குறைந்து வருகிறது. ஜி.டி.பி., எனப்படும், நாட்டின் ஒட்டுமொத்த வளர்ச்சி விகிதமும், வெகுவாகச் சரிந்து வருகிறது. ஒரு காலத்தில் லாபகரமாக இயங்கி வந்த தனியார் துறைகள், இன்று பொருளாதார நெருக்கடியால் தத்தளிக்கின்றன.சி.பி.ஐ., மூலமாக, எதிர்க்கட்சிகளை, மத்தியில் ஆளும் காங்கிரஸ், மிரட்டி வருகிறது. பாகிஸ்தான் ராணுவத்தினர், நமது வீரர்களை கடத்திச் சென்று, அவர்களது தலைகளைத் துண்டித்து, இந்தியாவையே கேவலப்படுத்துகின்றனர். அண்டை நாட்டார் நம் மீனவர்களுக்குக் கொடுக்கும் தொல்லைகளுக்கும் எல்லையே இல்லை. மாவோயிஸ்ட் அட்டூழியங்களை அடக்க முடியாமல் திணறுகிறது மத்திய அரசு.இந்த அவல நிலை மாற வேண்டும், இந்தியாவின் சரிவைச் சீர்படுத்த வேண்டும் என்ற உணர்வு, பெருகி வருகிறது. விவசாயத்தையும் தொழிற்சாலைகளையும் லாபகரமாக வளர்க்க வேண்டும். பொருளாதாரம் சிறக்க வேண்டும். உள்நாட்டில் அமைதி நிலவ வேண்டும். எல்லையோர பாதுகாப்பு உறுதி செய்யப்பட வேண்டும். வட மாநில வெள்ளத்தையும், தென் மாநில வறட்சியையும் போக்க வேண்டும். அதற்குத் தேசிய நதிகளை இணைக்க வேண்டும். இந்தியா கம்பீரமாக உலக அளவில் நிமிர்ந்து நிற்க வேண்டும். இத்தகைய வருங்கால கனவுகளை எல்லாம் நிறைவேற்றக் கூடிய ஒரு தலைவன் தேவை என, இந்த நாடே எதிர்பார்க்கிறது.

இளைஞர்களின் மனதில் நரேந்திர மோடி, ஒரு சாதனை வீரராக, நம்பிக்கை நட்சத்திரமாக உருவாகி வருகிறார். அவர், குஜராத் மாநிலத்தில் படைத்துள்ள சாதனைகளைக் கண்டு, நாட்டு மக்கள் வியந்து பாராட்டுகின்றனர்.குஜராத், எப்போதுமே தண்ணீர் பற்றாக்குறையுள்ள மாநிலம். அங்கு மழை குறைவு. மழை நீரும் வேகமாகக் கடலுக்குச் சென்றுவிடும். ஜீவ நதிகளோ மிகவும் குறைவு. நிலத்தடி நீரோ வெகு ஆழத்தில். எனவே, நீர்வளத்தைப் பெருக்கும் பணி
முக்கியத்துவம் பெற்றது.பல்வேறு எதிர்பார்ப்புகளை மீறி, சர்தார் சரோவர் நர்மதா திட்டத்திற்கு முன்னுரிமை கொடுக்கப்பட்டது. அதே நேரத்தில் வெள்ளப் பெருக்கால் ஏற்படும் உபரி நீரை மடைமாற்றி, வறண்ட பகுதிகளில், மறு நீரேற்றத்திற்கு வகை செய்யும் விதமாக, 400 கி.மீ., தூரமுள்ள கால்வாய் அமைக்கும் மிகப் பெரிய திட்டமும் மேற்கொள்ளப்பட்டது.இந்தக் கடின முயற்சிக்கு கை மேல் பலன் கிட்டியது. நிலத்தடி நீரின் அளவு ஆண்டுதோறும் உயர்ந்து கொண்டே வருகிறது. இப்போதெல்லாம் யாரும் லாரிகளிலும், டேங்கர்களிலும் குடிநீர் வினியோகிப்பது இல்லை. இந்தியாவிலேயே நதிகள் அனைத்தும் இணைக்கப்பட்ட ஒரே மாநிலம், குஜராத் தான்.

கிராமந்தோறும், கிசான் சபா கூட்டப்பட்டு, விவசாயப் பல்கலைக்கழக விஞ்ஞானிகள் விவசாயிகளுக்குப் பயிற்சி அளிக்கின்றனர். பிற மாநில விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டது போன்ற துயரக் காட்சிகளை, குஜராத்தில் காண முடியவில்லை.மாநில அரசு இயந்திரம், கிராமத்தை நோக்கிச் செல்ல பணிக்கப்பட்டு உள்ளது. விவசாயிகளை அதிகாரிகள் நேரில் சந்தித்து, அவர்களது பிரச்னைகளைப் புரிந்து கொண்டு, அரசு உதவிகளை அளிக்கின்றனர்.குஜராத் அரசு, மின்சக்தி துறையில் முழுக் கவனத்தைச் செலுத்தி உள்ளது. மின் உற்பத்தி, மின்சாரத்தை அனைத்துப் பகுதிகளுக்கும் கொண்டு செல்லுதல், வினியோகம் ஆகிய துறைகளில் புதிய முதலீடுகளை அரசு செய்துள்ளது. மாநிலத்தில் உள்ள, 18 ஆயிரம் கிராமங்களிலும் அதில் உள்ள அனைத்து வீடுகளுக்கும், 24 மணி நேரமும் தடையற்ற, மும்முனை மின்சாரம் கிடைக்கிறது. இது, நரேந்திர மோடியின் மிகப் பெரிய சாதனை.

இதன் விளைவு அபரிமிதமானதாக உள்ளது. ஊரக உற்பத்தித் திறன் உயர்ந்துள்ளது. வேலை தேடி நகரங்களை நோக்கி குடி பெயர்வதும் வெகுவாகக் குறைந்து விட்டது. மின் உற்பத்தியில், இந்தியாவிலேயே முதலிடத்தில், குஜராத் உள்ளது. இங்கு, காற்றாலைகள் மற்றும் சூரிய வெப்பத்தைப் பயன்படுத்தி மின்சாரம் தயாரிக்கும், மரபு சாரா மின் சக்தி தயாரிப்பிலும் முன்னேற்றம் ஏற்பட்டு வருகிறது.துடிப்புள்ள குஜராத் என்ற சிறப்பு இயக்கத்தின் மூலம் அரசு, தொழிற்துறை, அடிப்படை கட்டமைப்பு போன்ற துறைகளுக்கு, உள்நாட்டில் இருந்தும் வெளிநாட்டில் இருந்தும் லட்சக்கணக்கான கோடி ரூபாய் முதலீட்டை ஈர்த்து வருகிறது. மாநிலத்தில் சட்டம் - ஒழுங்கு சூழ்நிலை நன்றாக இருக்கிறது. தேசிய குற்றப்பதிவுத் துறையின் ஆண்டறிக்கையில், பல மாநிலங்களை ஒப்பிடும்போது, குஜராத்தில் குற்றங்கள் நிகழ்வதும் அதன் விகிதமும் குறைவு, என்று குறிப்பிடப்படுகிறது.

நரேந்திர மோடியின் அரசு, தாஜா செய்வதை அடிப்படையாகக் கொண்டது அல்ல. அது திறமையான செயல்பாட்டை அடிப்படையாகக் கொண்டது. தேர்தல் காலத்தில் இலவசங்களை அறிவிப்பது இல்லை. "நான் மக்களுக்கு வேலை வாய்ப்பை ஏற்பாடு செய்கிறேன். கடுமையாக உழையுங்கள், உற்பத்தியைப் பெருக்குங்கள்; அதன் மூலமாக நிறைய வருமானத்தோடும், தன்மானத்தோடும், மன மகிழ்வுடனும் வாழுங்கள்' என்று, சொல்கிறார்.ஆங்கிலேயர் வெளியேறும் தறுவாயில், 600க்கும் மேற்பட்ட சமஸ்தானங்களை இணைத்தவர் சர்தார் வல்லபாய் படேல். அமெரிக்காவின் பிரமாண்டமான, சுதந்திர தேவி சிலையைப் போல, இரண்டு மடங்கு உயரம் கொண்ட இந்திய ஒருமைப்பாட்டுச் சிலையை அவருக்கு நிறுவும் பணியை துவக்கி உள்ளார். குஜராத்தில் இஸ்லாமியர்கள் தாக்கப்படுகின்றனர், ஒடுக்கப்படுகின்றனர் என்ற தவறான பிரசாரம், இந்தியாவிலும் உலகின் பல நாடுகளிலும் திட்டமிட்டுப் பரப்பப்படுகிறது. நரேந்திர மோடியின் நல்லாட்சி, அவர் தலைமையில் குஜராத்தின் வளர்ச்சி ஆகியவற்றை சகிக்க முடியாத அரசியல் எதிரிகள், இந்த குஜராத் விரோதப் பிரசாரத்தைச் செய்து வருகின்றனர்.

கடந்த, 2006ம் ஆண்டு நீதிபதி ராஜேந்திர சச்சார் தலைமையில், பிரதமர் ஒரு கமிட்டியை அமைத்தார். அந்தக் கமிட்டி நாடு முழுவதும் உள்ள இஸ்லாமியர்களின் சமூகப் பொருளாதார, கல்வி நிலையைப் பற்றி விரிவாக ஆய்வு செய்தது. அந்த அறிக்கை, குஜராத்தில், இஸ்லாமியர்கள் மிகவும் மகிழ்ச்சியாக இருப்பதாகக் கூறுகிறது.மேற்கு வங்கம், உத்தர பிரதேசம் ஆகிய மாநிலங்களுடன் ஒப்பிடும்போது, குஜராத் அரசுப் பணியில், இஸ்லாமியர்கள் விகிதம் அதிகமாக உள்ளது. இஸ்லாமியர்களின் சராசரி வருமானம், நாட்டிலேயே குஜராத்தில் தான் மிக அதிகம். குஜராத்தில் உள்ள இஸ்லாமியர்களின் சமூகப் பொருளாதார நிலை மிக உறுதியாக வளர்ச்சி பெற்று வருகிறது என்று, நீதிபதி ராஜேந்திர சச்சார் கமிட்டியே அங்கீகாரம் அளித்துள்ளது.புதிய இந்தியாவை நிர்மாணிக்கத் துடிக்கும் நரேந்திர மோடியை, எக்காரணத்தைச் சுட்டிக்காட்டியும் எவரும் நிராகரிப்பது நியாயம் இல்லை. அவர் தன் கொள்கைக்கு ஏற்றவாறு எளிமையான வாழ்க்கையை வாழ்கின்ற தலைவராக விளங்குகிறார். எந்நேரமும் பொதுப் பணியில் ஈடுபட்டு வருகிறார். அற்புதமான மேடைப் பேச்சாளர். சீரிய நிர்வாகியாகவும் நிரூபித்துக் காட்டி உள்ளார்.

நாட்டின் நிலைமையை சீர்படுத்த, நரேந்திர மோடி மீது நம்பிக்கை வைக்க வேண்டும். தேசிய ஜனநாயகக் கூட்டணியை விரிவுபடுத்தி பலப்படுத்த வேண்டும். விவசாயத்தை முன்னேற்றி, தொழில் வளத்தைப் பெருக்கி, பசியைப் போக்கி, வேலை வாய்ப்புகளை ஏற்படுத்தி நாட்டின் பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டும். இந்தியா, உலக அரங்கில் பெருமைப்படும் நிலையை அத்வானியின் ஆசியுடன், நரேந்திர மோடி நிச்சயம் ஏற்படுத்துவார் என்பது உறுதி.
email: vsnathan7666@gmail.com

- வி.சண்முகநாதன் -சமூக சிந்தனையாளர்

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...Advertisement

வாசகர் கருத்து (15)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Venkatesan Deekshithar - Chidambaram,இந்தியா
30-ஜூன்-201318:23:39 IST Report Abuse
Venkatesan Deekshithar கடந்த, 2006ம் ஆண்டு நீதிபதி ராஜேந்திர சச்சார் தலைமையில், பிரதமர் ஒரு கமிட்டியை அமைத்தார். அந்தக் கமிட்டி நாடு முழுவதும் உள்ள இஸ்லாமியர்களின் சமூகப் பொருளாதார, கல்வி நிலையைப் பற்றி விரிவாக ஆய்வு செய்தது. அந்த அறிக்கை, குஜராத்தில், இஸ்லாமியர்கள் மிகவும் மகிழ்ச்சியாக இருப்பதாகக் கூறுகிறது.மேற்கு வங்கம், உத்தர பிரதேசம் ஆகிய மாநிலங்களுடன் ஒப்பிடும்போது, குஜராத் அரசுப் பணியில், இஸ்லாமியர்கள் விகிதம் அதிகமாக உள்ளது. இஸ்லாமியர்களின் சராசரி வருமானம், நாட்டிலேயே குஜராத்தில் தான் மிக அதிகம். குஜராத்தில் உள்ள இஸ்லாமியர்களின் சமூகப் பொருளாதார நிலை மிக உறுதியாக வளர்ச்சி பெற்று வருகிறது என்று, நீதிபதி ராஜேந்திர சச்சார் கமிட்டியே அங்கீகாரம் அளித்துள்ளது.புதிய இந்தியாவை நிர்மாணிக்கத் துடிக்கும் நரேந்திர மோடியை, எக்காரணத்தைச் சுட்டிக்காட்டியும் எவரும் நிராகரிப்பது நியாயம் இல்லை.
Rate this:
Share this comment
Cancel
Venkatesan Deekshithar - Chidambaram,இந்தியா
30-ஜூன்-201318:22:24 IST Report Abuse
Venkatesan Deekshithar முற்றிலும் உண்மையான செய்தி. மோடி போன்ற திறமையான தலைவர் இந்தியாவில் இல்லை. ஆடம்பரம் இல்லாத அதே நேரத்தில் செய்ய வேண்டிய விஷயங்களை தெளிவாகவும் திறமையாகவும் செய்து முடிக்கும் வல்லமை உள்ள தலைவர் மோடி மட்டுமே. மோடி ஆட்சிக்கு வந்தால் மட்டுமே இந்திய வல்லரசாகவும் நல்லரசாகவும் மாறும், இல்லையேல் ஊழல் மலிந்த நாடுகளில் இந்திய முதன்மை நாடக மாறிவிடும் என்பதில் ஐயமில்லை.
Rate this:
Share this comment
Cancel
JALRA JAYRAMAN - chennai,இந்தியா
30-ஜூன்-201310:46:57 IST Report Abuse
JALRA JAYRAMAN யார் வந்தாலும் அம்பானி காட்டில் எப்போதும் மழை தான்
Rate this:
Share this comment
Cancel
Parameshwaran - Karaikudi,இந்தியா
30-ஜூன்-201310:19:56 IST Report Abuse
Parameshwaran முற்றிலும் உண்மையான செய்தி. மோடி போன்ற திறமையான தலைவர் இந்தியாவில் இல்லை. ஆடம்பரம் இல்லாத அதே நேரத்தில் செய்ய வேண்டிய விஷயங்களை தெளிவாகவும் திறமையாகவும் செய்து முடிக்கும் வல்லமை உள்ள தலைவர் மோடி மட்டுமே. மோடி ஆட்சிக்கு வந்தால் மட்டுமே இந்திய வல்லரசாகவும் நல்லரசாகவும் மாறும், இல்லையேல் ஊழல் மலிந்த நாடுகளில் இந்திய முதன்மை நாடக மாறிவிடும் என்பதில் ஐயமில்லை.
Rate this:
Share this comment
Cancel
Veeravel Selvaraj - Chennai,இந்தியா
30-ஜூன்-201308:52:40 IST Report Abuse
Veeravel Selvaraj மோடியை போன்று நிர்வாக திறமை மற்றும் தைரியம் உள்ள ஒருவரால் மட்டுமே இந்தியாவை ஆல முடியும் .
Rate this:
Share this comment
Cancel
Sivramkrishnan Gk - Dubai,ஐக்கிய அரபு நாடுகள்
30-ஜூன்-201308:28:59 IST Report Abuse
Sivramkrishnan Gk மோடி வரவேண்டும் என்ற நல்ல எண்ணம் உண்மையான இந்தியர்கள் எல்லோருக்கும் உண்டு. ஆனால் பாஜக நிர்வாகிகளுக்கு இல்லையே. மோடி வர கூடாது என நினைப்பவர்கள் காங்கிரசிற்கு விலை போய்விட்டனர்.
Rate this:
Share this comment
Cancel
Hari - Chennai ,இந்தியா
30-ஜூன்-201305:45:50 IST Report Abuse
Hari Gujarat has always been a front runner state in terms of industries and infrastructure even before Modi became the CM. Gujaratis have always been business minded. Most of the big business houses , starting from ambani to adani are all gujaratis. Modi is just a toy in their hands. they see a chance to have their puppet as Prime minister. It is wrong to say Modi is responsible for Gujarat's development. Remember, not just Gujarat but whole of India has developed in the past 10 years. The author of this news item is clearly doesn't know the fact all the billions of dollars which were pledged for Gujarat never actually came. The author also states that there are no farmer suicides in Modi. On the contrary, In its reply to an application filed under Right to Information (RTI) by activist Bharatsinh Jhala, the state government had revealed that between January 1, 2008 and August 20, 2012, a total of 115 farmers had committed suicide in Gujarat. And most of them had ed their lives because of growing debts caused by crop failure. மோடி uses an American PR firm called APCO worldwide at a cost of about 10 lakhs every month, to advertise himself. Many of the news items are ed into newspapers by his PR agency in order to promote Modi. It is actually very sad that many newspaper editors themselves are unaware of this fact. A recent example being Media reporting falsely that modi went to Uttaranchal and saved 15000 people in 2 days. Later, even Times of India acknowledged the fact the news item came from his PR agency. You can verify all the facts by googling them. Just know the truth. I am in no way a congress supporter. I used to be a modi fan but not anymore. Please don't support the same politicians who will use your vote to loot our country. Think about Aam Aadmi Party. It gives me a hope that even a common man like me can be part of transparent politics and change our country. Jai Hind I am a tamilian too. The only reason I choose English was because Tamil toggle wasn't working when I typed this comment.
Rate this:
Share this comment
Ramanathan Pillai - Tirunelveli,இந்தியா
01-ஜூலை-201300:05:54 IST Report Abuse
Ramanathan Pillai1.In Indian electoral politics, one has to choose. the best among the available leaders. As on date we have no proven better leader than Modi. 2. Even though Gujarat was already a developed state compared to Maharashtra, Haryana etc., to Modi's credit, he ed Electricity and drinking water problem to a great extent whereas the states like Tamilnadu are way behind and are fumbling for last many years without a viable solution. Therefore instead of trying to keepout Modi, let us elect him and give ourself an oppurtunity for change....
Rate this:
Share this comment
Cancel
Dr.Subbanarasu Divakaran - Bangalore,இந்தியா
30-ஜூன்-201304:35:37 IST Report Abuse
Dr.Subbanarasu Divakaran இந்த படு மோசமான உபைரண்டு கட்சிகளை முரியடிட்டலன்ரி முன்னேற்றம் வர முடியாது. இந்த காரியம் மோடியால் முடியும்.
Rate this:
Share this comment
Cancel
g.s,rajan - chennai ,இந்தியா
30-ஜூன்-201303:54:30 IST Report Abuse
g.s,rajan நியாயமில்லை ,நியாயமில்லைஇந்தியாவில் இந்த உலக மகா ஊழல் கேடிகளை ஒழித்துக்கட்ட மோடியால் மட்டுமே முடியும் . ஜி.எஸ்.ராஜன் சென்னை .
Rate this:
Share this comment
Cancel
Sekar Sekaran - Jurong-West,சிங்கப்பூர்
30-ஜூன்-201303:09:30 IST Report Abuse
Sekar Sekaran மோடி மிக திறமையானவர் என்பதிலே மாற்று கருத்து கிடையாது. அன்னிய சக்தி எப்பாடு பட்டேனும் ராகுலை முன்னிறுத்த பார்கின்றது. ஒன்றை நாம் மனதில் நிறுத்திக்கொள்ளவேண்டும். இனியாவது பிற மண்ணில் பிறந்தவர்கள் யாராயினும் அவர்கள் இந்தியாவில் எந்த கட்சியிலும் அல்லது எந்த அரசு பொறுப்பிலும் முக்கிய பதவிகளில் அமர்த்தப்பட கூடாது. நாளையே இதே ராகுல் ஓர் பாகிஸ்தான் பெண்ணை திருமணம் செய்துவந்தால்..இதே காங்கிரசார் எப்படியெல்லாம் புகழ் பாட முடியுமோ அதனை நிச்சயம் செய்வார்கள்..நாட்டின் பாதுகாப்பு மிக முக்கியம். நாளையே ராகுலின் பாகிஸ்தான் மனைவி பிரதமர் பொறுப்பிற்கு அமர்த்தப்பட்டால்..ஒரே ஓர் கணம் சிந்தியுங்கள்...நாட்டின் நிலை பற்றி..மோடி அவர்களால் மட்டுமே அதனை செய்து காட்டும் திறமை உள்ளவர். அம்மா அவர்கள் அல்லது மோடி அவர்கள்தான் நாட்டின் வருங்கால நம்பிக்கை நட்சத்திரம். நாட்டுப்பற்று உள்ளவர்களில் இவர்கள் இருவரும்தான் பிற காங்கிரசாரை விட பொருத்தமானவர்கள்..உங்களின் ஒவ்வோர் சொல்லும் உண்மையே..
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை