E-paper| Mobile Apps

iPad

iPad E-paper

iPhone

Android

Android Tablet

Windows

Windows 8

Blackberry

bbicon OS 10

Mobile Election

| Get Font | Site Map |  RSS Feed
Advertisement
"ஆபரேஷன் அம்லா' - கற்றுக்கொடுத்தது என்ன?
Advertisement
 
 
Advertisement
 
 
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

29 ஜூன்
2013
23:32

கடந்த மூன்று ஆண்டுகளாக, ஆண்டுக்கு இருமுறை, "ஆபரேஷன் அம்லா' என்ற, பாதுகாப்பு ஒத்திகை நடத்தப்பட்டு வரும் நிலையில், அதன் மூலம், தமிழக காவல் துறை கற்றுக்கொண்டது என்ன என்பது குறித்த கேள்வி எழுந்துள்ளது.மும்பையில், 2008, செப்., 26ம் தேதி, கடல் வழியாக, பயங்கரவாதிகள் ஊடுருவி, தாக்குதல் நடத்தி, கடும் சேதம் விளைவித்ததை தொடர்ந்து, அனைத்து மாநிலங்களிலும், பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது.

பாதுகாப்பு ஒத்திகை:



தமிழகத்தில், 2011ம் ஆண்டு முதல், கடல், தரை, ஆகாய வழி ஊடுருவல் மற்றும் பயங்கரவாத நடவடிக்கையை தடுக்க, தமிழகம் முழுவதும், "ஆபரேஷன் அம்லா' என்ற பெயரில், பாதுகாப்பு ஒத்திகை நடத்தப்படுகிறது.இந்த ஒத்திகையின் போது, பயங்கரவாதி போர்வையில், தரை, கடல் வழியாக, கையில், "டம்மி' குண்டு, துப்பாக்கி உள்ளிட்ட ஆயுதங்களுடன் போலீசார் ஊடுருவுவர். பாதுகாப்பு பணியில் இருக்கும் போலீசார், அவர்களை கண்டறிந்து, பிடிக்க வேண்டும். இது தான், ஒத்திகையின் நோக்கம்.ஆண்டுக்கு, இரண்டு முறை, அதாவது, ஜனவரி மற்றும் ஜூன் அல்லது ஜூலை மாதத்தில், இந்த ஒத்திகை நடத்தப்படும். ஒவ்வொரு முறையும், ஒத்திகை நடத்தப்படும் போது, போலீஸ் பாதுகாப்பில் சில குறைபாடு கண்டறியப்படும்; இதனை அடுத்து வரும் காலத்தில் சீரமைப்பர்.கடந்த, 2011ம் ஆண்டில், முதன் முதலாக ஒத்திகை நடத்தப்பட்ட போது, தமிழகத்தில் 100க்கும் மேற்பட்ட போலீசார், பயங்கரவாதி போர்வையில் ஊடுருவினர்.

சென்னையில், ஆயுதங்களுடன், காசிமேடு, பட்டினப்பாக்கத்தில் ஊடுருவியவர்கள் போலீசாரால் பிடிக்கப்பட்டனர்.அதே நேரத்தில், சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில், ஆயுதங்களுடன் ஊடுருவியவர்களை பிடிக்கவில்லை. அதே போல், தமிழகத்தின் சில பகுதிகளிலும், ஊடுருவல் நிகழ்ந்தது. அப்போது, அப்பகுதியில் இருந்த போலீசார், எச்சரிக்கப்பட்டனர். அதே போல், இந்தாண்டு, ஜனவரி, 3, 4ம் தேதிகளில் நடத்தப்பட்ட, ஒத்திகையில், 22 பேர், பயங்கரவாதி போர்வையில் ஊடுருவினர். தலைமைச் செயலகம் உள்ள, புனித ஜார்ஜ் கோட்டையின் அகழி வழியாக ஊடுருவியவர்கள், உள்ளே சென்று, ஒரு இடத்தில் அவர்கள் பெயரை எழுதி வைத்து சென்றனர். அதன் பின், அகழி உள்ள பகுதிகளில், பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது. அதே போல், கடந்த சில தினங்களுக்கு முன் நடத்தப்பட்ட, "ஆபரேஷன் அம்லா'வில், கடலூரில், தேவாலயத்திற்குள் நுழைந்து, "டம்மி' வெடிகுண்டுகளை வைத்த இருவர், "கன்ட்ரோல் ரூமிற்கு' தகவல் கூறினர்.இவ்வாறு, தமிழகம் முழுவதும் நடத்தப்படும், ஒத்திகையில், எங்காவது ஒரு இடத்தில், போலீசார் பாதுகாப்பை கோட்டை விடுகின்றனர்.அதன் பின், அங்கிருப்பவர்கள் அறிவுறுத்தலுக்கு உள்ளாகின்றனர். இது, ஆண்டுதோறும் நடக்கும் சம்பவம். இந்த ஒத்திகையை பொறுத்த வரை, துவங்கும் முன்பே, அறிவிக்கப்பட்டு, நடத்தப்படுகிறது. பத்திரிகைகளில், "ஆபரேஷன் அம்லா இன்று துவங்குகிறது' என்ற தகவலும் வெளியாகி விடுகிறது.

போலீஸ் "அலர்ட்':



இதனால், அன்றைய தினம் மட்டும் போலீசார், "அலர்ட்'டாக உள்ளனர். ஊடுருவல்காரர்களும் பிடிக்கப்படுகின்றனர். ஆனால், போலீசார், எப்போதும், "அலர்ட்'டாக இருக்க, உயர் அதிகாரிகளுக்கு மட்டும் தெரிந்து, போலீசாருக்கு தெரியாமல், திடீரென இந்த ஒத்திகை நடத்தப்பட வேண்டும் என்று அனைத்து தரப்பினரும் கருதுகின்றனர்.அவ்வாறு நடத்தப்படும் போது தான், உண்மையான பாதுகாப்பு குறைபாடு என்ன என்பதை அறிய முடியும்; பாதுகாப்பையும் பலப்படுத்த முடியும்.தமிழகத்தில், உளவுப் பிரிவு, பலமாக இருந்தாலும், பயணி, பணியாளர் போர்வையில் தமிழகத்திற்குள் நுழையும், உண்மையான பயங்கரவாதி, நக்சலைட், மாவோயிஸ்ட்கள் பிடிபடுவதில், காலதாமதம் ஏற்பட்டு வருகிறது.எனவே, அடுத்த முறையாவது, மாறுபட்ட கோணத்தில், "ஆபரேஷன் அம்லா' ஒத்திகை நடத்தப்படுமா?

- நமது நிருபர் -


தொடர்புடைய செய்திகள்:


Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (1)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
K.Sugavanam - Salem,இந்தியா
30-ஜூன்-201306:52:25 IST Report Abuse
K.Sugavanam ரெண்டு போலீஸ் காரங்க செத்தது தான் மிச்சம்...
Rate this:
1 members
0 members
9 members
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
( OR )Login with
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.