E-paper| Mobile Apps

iPad

iPad E-paper

iPhone

Android

Android Tablet

Windows

Windows 8

Blackberry

bbicon OS 10

Mobile Election

| Get Font | Site Map |  RSS Feed
Advertisement
இந்திய தலைமை நீதிபதியாக தமிழகத்தின் சதாசிவம் நியமனம்
Advertisement
 
 
Advertisement
 
 
எழுத்தின் அளவு:
Advertisement

மாற்றம் செய்த நாள்

30 ஜூன்
2013
06:05
பதிவு செய்த நாள்
ஜூன் 29,2013 23:34

சென்னை : இந்திய தலைமை நீதிபதியாக, தமிழகத்தைச் சேர்ந்த, நீதிபதி சதாசிவம், ஜூலை, 19ம் தேதி, பதவியேற்கிறார். அவருக்கு, ஜனாதிபதி பதவிப் பிரமாணம் செய்து வைக்கிறார்.

சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதியாக, தற்போது, அல்டமாஸ் கபீர் உள்ளார். தலைமை நீதிபதி கபாடியா, ஓய்வு பெற்ற பின், கடந்த ஆண்டு, செப்டம்பர், 29ம் தேதி, தலைமை நீதிபதியாக அல்டமாஸ் கபீர் நியமிக்கப்பட்டார். இவர், ஜூலை, 18ம் தேதி ஓய்வு பெறுகிறார். கபீருக்கு அடுத்த நிலையில் உள்ள, நீதிபதி சதாசிவம், தலைமை நீதிபதியாக, 19ம் தேதி, பதவியேற்கிறார்.ஈரோடு மாவட்டம், பவானி தாலுகா, கடப்பாநல்லூர் கிராமத்தைச் சேர்ந்தவர், நீதிபதி சதாசிவம். 1949ம் ஆண்டு, ஏப்., 27ம் தேதி பிறந்தார். சிங்கம்பேட்டை, அரசு உயர்நிலைப் பள்ளியில், பள்ளிப் படிப்பு முடித்தார். சென்னை, சட்டக் கல்லூரியில், பி.எல்., பட்டம் பெற்றார். குடும்பத்தில், முதல் பட்டதாரியான இவர், கிராமத்தில், முதலாவதாக, சட்டப் படிப்பு முடித்தவர். விவசாய குடும்பத்தைச் சேர்ந்தவர்.

சென்னை ஐகோர்ட்டில், அரசு வழக்கறிஞர், கூடுதல் அரசு பிளீடர், சிறப்பு அரசு பிளீடராக, பதவி வகித்தார். சிவில், கிரிமினல், கம்பெனி வழக்குகளில் ஆஜராகி வந்தார். சென்னை ஐகோர்ட் நீதிபதியாக, 1996ம் ஆண்டு, ஜனவரி, 8ம் தேதி, நியமிக்கப்பட்டார். 11, ஆண்டுகளுக்குப் பின், பஞ்சாப் - அரியானா ஐகோர்ட்டுக்கு, 2007ம் ஆண்டு, ஏப்ரலில், இடமாற்றம் செய்யப்பட்டார்.சுப்ரீம் கோர்ட் நீதிபதியாக, 2007ம் ஆண்டு, ஆகஸ்ட்டில் நியமிக்கப்பட்டார். தற்போது, சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதியாக, ஜூலை, 19ம் தேதி, பதவியேற்கிறார். 40வது, தலைமை நீதிபதியாக, இவர் பதவியேற்கிறார். ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி, பதவிப் பிரமாணம் செய்து வைப்பார். 2014ம் ஆண்டு, ஏப்., 26ம் தேதி வரை, தலைமை நீதிபதியாக பதவி வகிப்பார்.

பல்வேறு முக்கிய வழக்குகளில், நீதிபதி சதாசிவம் தீர்ப்பளித்துள்ளார். டில்லியில் நடந்த, ஜெசிகலால் கொலை வழக்கில், மனுசர்மாவுக்கு விதிக்கப்பட்ட ஆயுள் தண்டனையை, உறுதி செய்தார். பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதிக்கு எதிரான, சொத்துக் குவிப்பு வழக்கில், சி.பி.ஐ.,யின், முதல் தகவல் அறிக்கையை, ரத்து செய்தார்.ரிலையன்ஸ் வழக்கில், "ஜனநாயகத்தில், நமது நாட்டின் சொத்துக்கள், மக்களுடையது. மக்களின் நலன்களுக்காக, அந்தச் சொத்துக்களை, அரசு பேணுகிறது' என, தீர்ப்பளித்தார். மும்பை குண்டு வெடிப்பு வழக்கில், ஒருவருக்கு தூக்கு தண்டனையை உறுதி செய்தும், 10 பேருக்கு, ஆயுள் தண்டனையாக குறைத்தும், தீர்ப்பளித்தார்.மும்பை குண்டு வெடிப்பு வழக்கில் தான், ஆயுத சட்டத்தின் கீழ், பாலிவுட் நடிகர் சஞ்சய்தத்துக்கு, விதிக்கப்பட்ட தண்டனையை, ஐந்து ஆண்டுகளாக, குறைத்து தீர்ப்பளித்தார். பெண்கள், குழந்தைகள் தொடர்பான வழக்குகளுக்கு, முன்னுரிமை வழங்க வேண்டும் என, நீதிபதி சதாசிவம் வலியுறுத்தியுள்ளார்.தேசிய சட்டப் பணிகள் ஆணைக் குழுவின், நிர்வாகத் தலைவர் என்கிற முறையில், பல மாநிலங்களுக்கும் சென்று, சட்டக் கல்வியறிவு முகாம்களை, கிராமப்புறப் பகுதிகளிலும், பள்ளி, கல்லூரிகளிலும் துவங்கியுள்ளார்.

அரை நூற்றாண்டுக்கு பிறகு தமிழர் : சென்னைப் பல்கலைக்கழகம், சென்னை சட்டக் கல்லூரியில் படித்த, நீதிபதி பதஞ்சலி சாஸ்திரி, சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதியாக, 1951- 54ல் பதவி வகித்துள்ளார். சுப்ரீம் கோர்ட்டின், இரண்டாவது தலைமை நீதிபதியாக, பதவி வகித்தார். நீதிபதி பதஞ்சலி சாஸ்திரிக்குப் பின், தமிழகத்தைச் சேர்ந்த, நீதிபதி சதாசிவம், தலைமை நீதிபதியாக பொறுப்பேற்கிறார்.சென்னை ஐகோர்ட்டில் தலைமை நீதிபதியாக பதவி வகித்த ஆனந்த், கே.ஜி.பாலகிருஷ்ணன் ஆகியோர், சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதியாக பதவி வகித்துள்ளனர். இவர்கள், தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் அல்ல.

அரசு பள்ளியில் படித்து பெரும் சாதனை நீதிபதி சதாசிவத்தின் தாய் பெருமிதம்:



"கான்வென்டில் படித்தால் தான் சாதிக்க முடியும் என, நினைத்திருந்த எங்களுக்கு, அரசுப் பள்ளியில் படித்தாலும் சாதிக்க முடியும் என, என் மகன் நிரூபித்துள்ளார்,' என, அவரது தாய், நாச்சாயி அம்மாள் பெருமிதம் தெரிவித்தார்.

இந்திய முதன்மை நீதிபதியாக சதாசிவம் தேர்வு செய்யப்பட்டது குறித்து, அவரது தாய், நாச்சாயி அம்மாள் கூறியதாவது:என் மகன் சதாசிவம், சிறுவயதில் இருந்தே படிப்பில் அதிக ஆர்வம் உடையவர். பள்ளிக்கூடத்துக்கு லீவு எடுக்காமல் செல்வார். அதையே, இன்று வரை தொடர்கிறார். விவசாய குடும்பம் என்பதால், குடும்ப சூழல் காரணமாக, ஊரில் உள்ள அரசு பள்ளிக்கூடத்தில் சேர்த்தோம். நாங்கள் படிக்காதவர்கள்.படிப்பின் மேல் உள்ள ஆர்வத்தால், ஆசிரியரின் மீது பெரிதும் மரியாதை கொண்டவர். மேல்நிலைப் பள்ளியின், கணித ஆசிரியர் விஸ்வநாதன் மேல் பக்தி கொண்டவர். அவர், படிப்பின் மேல் வைத்த மரியாதை, இன்று, பெரிய பதவிகளை கொடுத்துள்ளது. கான்வென்டில் படித்தவர்கள் தான் பெரிய பதவிக்கு வரமுடியும் என, நினைத்த எங்களுக்கு, அரசு பள்ளியில் படித்தாலும், வாழ்வில் உயரலாம் என, நிரூபித்துள்ளார்.சென்னை சட்டக் கல்லூரியில் படிக்கும்போது, திருமணம் செய்து வைத்தோம். லீவு எடுக்காமல் பணியாற்றுவதால், என்னை பார்க்க மட்டும் சொந்த கிராமத்துக்கு வருவார். தற்போது சண்டிகரில் பணியாற்றுகிறார். 19ம் தேதி, பதவியேற்பு விழாவுக்கு, 17ம் தேதியே நாங்கள் கிளம்பி, குடும்பத்துடன் டில்லிக்கு செல்கிறோம். சுயமுயற்சியால், என் மகன் வெற்றி பெற்றார்.என் மகனை பள்ளியில் சேர்த்ததுடன், அவராகவே ஒவ்வொன்றாக தேர்வு செய்து படித்தார். என் மகன், இந்தியாவின் முதன்மை நீதிபதியாக தேர்வு செய்யப்பட்டது, எங்கள் அனைவருக்கும் பெருமிதமாக உள்ளது.இவ்வாறு, அவர் கூறினார்.சகோதரர்கள் சுப்ரமணியம், வேலுச்சாமி ஆகியோர் உடனிருந்தனர்.


தொடர்புடைய செய்திகள்:


Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (16)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
mahadevijayakumar - cliffwood nj,யூ.எஸ்.ஏ
20-ஜூலை-201301:48:32 IST Report Abuse
mahadevijayakumar மனசு நிறைவாக பகிர்ந்து கொள்ள வார்த்தை இன்றி சந்தோஷமாக இருக்கின்றது திறமையால் மட்டுமே உயர்ந்த இடத்தை அடைந்துள்ள திரு சதாசிவம் அய்யா அவர்களுக்கு வாழுத்துக்கள். இன்று நாங்கள் எப்படி பெருமைப்படுகின்றோமோ அதைப்போல பல வரலாற்று சிறப்பு மிக்க தீர்ப்புக்களை வழங்கி தமிழகத்திற்கு பெருமை சேர்க்க கடவுள் உங்களுக்கு துணை புரியட்டும்.
Rate this:
0 members
0 members
0 members
Share this comment
Cancel
DRAVIDAMANI - Villupuram,இந்தியா
19-ஜூலை-201318:53:05 IST Report Abuse
DRAVIDAMANI வாழ்த்துக்கள் தலைமை நீதியரசர் அவர்களே, மேலும் தங்கள் பணிசிறக்க வாழ்த்துகிறோம்...
Rate this:
0 members
0 members
0 members
Share this comment
Cancel
mirudan - kailaayam,இந்தியா
01-ஜூலை-201311:01:19 IST Report Abuse
mirudan நாட்டின் தலைமை நீதிபதி என்பதற்கு தான் ஒரு எடுத்து காட்டாக விளங்க வேண்டும்
Rate this:
0 members
0 members
0 members
Share this comment
Cancel
மதுரை விருமாண்டி - சான் ஹோஸே, கலிபோர்னியா ,யூ.எஸ்.ஏ
01-ஜூலை-201300:00:38 IST Report Abuse
மதுரை விருமாண்டி அரசு வழக்கறிஞர், கூடுதல் அரசு பிளீடர், சிறப்பு அரசு பிளீடராக, ஐகோர்ட் நீதிபதியாக, சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதியாக, அரசு சம்பளத்தில் மட்டுமே வாழ்ந்திருந்தால் வீட்டில் இவ்வளவு ஆடம்பரமாக திருமண விழா நடத்தி இருக்க முடியுமா ??
Rate this:
1 members
0 members
4 members
Share this comment
Cancel
K.Sugavanam - Salem,இந்தியா
30-ஜூன்-201318:55:40 IST Report Abuse
K.Sugavanam முதலில் இந்தியர்,அப்புறம் தமிழர்,வாழ்த்துக்கள்...
Rate this:
2 members
0 members
2 members
Share this comment
Cancel
Sham - Ct muththur,இந்தியா
30-ஜூன்-201311:47:18 IST Report Abuse
Sham மரியாதைக்குரிய தலைமைநீதியரசர் அவர்களுக்கு., வணக்கங்கள்... மென்மேலும் தங்கள் பணிசிறக்க வாழ்த்துகிறோம்....
Rate this:
0 members
0 members
19 members
Share this comment
Cancel
muthu Rajendran - chennai,இந்தியா
30-ஜூன்-201311:40:29 IST Report Abuse
muthu Rajendran ஒரு தமிழர் உச்ச நீதிமன்ற தலைமை நீதியரசராவது குறித்து தமிழகம் மகிழ்வடைகிறது. நீதியும் நேர்மையும் இன்னும் உயர்வடையட்டும் .நீதியரசர் சதாசிவம் அவர்களுக்கு போற்றுதலுடன் வாழ்த்துக்கள்
Rate this:
0 members
0 members
10 members
Share this comment
Cancel
g.s,rajan - chennai ,இந்தியா
30-ஜூன்-201310:31:10 IST Report Abuse
g.s,rajan இந்த கேடு கேட்ட அரசியல்வாதிகளுக்கு எல்லாம் கிலி எடுக்கிற மாதிரி சும்மா "நச்" னு துணிச்சலா உச்ச நீதிமன்ற நீதிபதியாகிய நீங்க தீர்ப்பு குடுங்க ,அவங்க கொட்டத்தை மொதல்ல ஒடுக்குங்க ஜி.எஸ்.ராஜன் சென்னை .
Rate this:
0 members
0 members
18 members
Share this comment
Cancel
Pandian Reddiar - Chennai,இந்தியா
30-ஜூன்-201309:43:27 IST Report Abuse
Pandian Reddiar நீதியரசரே வாழ்த்துக்கள்.....
Rate this:
0 members
1 members
8 members
Share this comment
Cancel
villupuram jeevithan - villupuram,இந்தியா
30-ஜூன்-201305:59:22 IST Report Abuse
villupuram jeevithan அப்போதெல்லாம் அரசு பள்ளியில் பணியாற்றியவர்கள் யார் என்று பாருங்கள், உண்மை தெரியும். இப்போது கடமை உணர்ச்சியும், மாணவன் நலன் பேணும் ஆசிரியர்களை பார்ப்பது மிகவும் அரிது அரசு பள்ளிகளில். கலாமும் அரசு பள்ளியில் படித்தவர் தான், அவரது ஆசிரியரும் நேர்மையான ஆசிரியர் தான். அம்மாதிரியான ஆசிரியர்களிடம் உருவாகும் மாணவர்கள் சோடை போகமாட்டார்கள். .
Rate this:
1 members
0 members
20 members
Share this comment
meekannan - Chennai,இந்தியா
30-ஜூன்-201316:36:20 IST Report Abuse
meekannanதமிழில் படித்தால் கூட முன்னுக்குவரமுடியும் என்று உண்மையை நாட்டிற்கு உரைத்தவர் இவர். படிகிறவன் படிகாரத ஒழுங்கா படிச்சா நம் ஜனாதிபதி கலாம் அல்லது திரு.சதாசிவம் போல் முன்னேறலாம், தான் முன்னேற வேண்டும் என நினைக்கவேண்டும் அப்பா தான் முன்னேற முடியும், சும்மா அரசாங்க உத்தரவாக போடா எவனும் எவனும் முன்னேரமாட்டான். இது எங்கே சில ஜென்மங்களுக்கு தெரியபோகுது. ...
Rate this:
0 members
0 members
5 members
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.