Stalin put condition for photo | ""என்னுடன் போட்டோ எடுத்தால் ரூ.500 தரணும்'': ஸ்டாலின் கண்டிஷன்| Dinamalar

அரசியல் செய்தி

தமிழ்நாடு

""என்னுடன் போட்டோ எடுத்தால் ரூ.500 தரணும்'': ஸ்டாலின் கண்டிஷன்

Updated : ஜூன் 30, 2013 | Added : ஜூன் 29, 2013 | கருத்துகள் (38)
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
""என்னுடன் போட்டோ எடுத்தால் ரூ.500 தரணும்'': ஸ்டாலின் கண்டிஷன்

மதுரை : ""என்னுடன் போட்டோ எடுத்து கொள்பவர்கள் ரூ.500 நன்கொடை வழங்க வேண்டும்,'' என, தி.மு.க., இளைஞரணி அறக்கட்டளை சார்பில் மதுரையில் நடந்த கல்வி நிதியளிப்பு விழாவில், பங்கேற்ற அக்கட்சியின் பொருளாளர் ஸ்டாலின் கண்டிஷன் போட்டார்.

தி.மு.க., தலைவர் கருணாநிதியின் பிறந்த நாளை முன்னிட்டு, பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 தேர்வில் மாநில, மாவட்ட அளவில் முதல் மூன்று இடங்களில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு நிதியளிப்பு விழா, மதுரையில் நேற்று நடந்தது.

பொருளாளர் ஸ்டாலின் பேசியதாவது: தி.மு.க.,வில் பல துணை அமைப்புகள் இருக்கின்றன. எனினும் இளைஞரணி அறக்கட்டளை மூலம், மாணவர்களுக்கு வழங்கப்படும் கல்வி நிதியளிப்பு விழாவில் நான் பங்கேற்பது, மன நிம்மதியை தருகிறது. அறக்கட்டளை நிதியை, வங்கியில் டெபாசிட் செய்து, அதில் கிடைக்கும் வட்டி கல்விக்காக வழங்கப்படுகிறது. 2008 முதல் 2011 வரை, 1646 பேருக்கு, 97 லட்சத்து 60 ஆயிரம் ரூபாய் வழங்கப்பட்டது. 2012-13 ல், மட்டும் 1682 பேருக்கு, ஒரு கோடி 53 ஆயிரம் ரூபாய் வழங்கப்பட உள்ளது. இந்த ஆண்டில், மாணவர்கள் அதிக வெற்றிக்கு காரணம், சமச்சீர் கல்வி திட்டம் தான்.அடுத்தாண்டு, எண்ணிக்கை அதிகமாகும். எனவே, கல்வி நிதியளிப்புக்காக வட்டிப்பணம் போதாமல், டெபாசிட் தொகையை பெறும் நிலை உள்ளது. எனவே கல்வி நிதியை திரட்டும் வகையில், என்னுடன் போட்டோ எடுத்து கொள்பவர்கள், 500, 300, 100 ரூபாய் என வழங்க வேண்டும். இத்தொகை அறக்கட்டளை நிதியில் சேர்க்கப்படும், என்றார்.

பின், 1682 மாணவர்களுக்கு ஸ்டாலின், நிதி வழங்கினார். நன்கொடை கொடுத்த மாணவர்களுக்கு, ஸ்டாலினுடன் எடுத்துக் கொண்ட போட்டோ வழங்கப்பட்டது.


"புல்லட்' சிக்கியது:

மதுரை விமான நிலையத்தில், நேற்று முன்தினம், ஸ்டாலினை வரவேற்க தொண்டர்கள் திரண்டனர். இதில், ஏற்பட்ட தள்ளுமுள்ளு காரணமாக, ஸ்டாலின் பாதுகாப்புக்கு வந்த "இசட் பிரிவு' பாதுகாப்பு வீரர் ஜான்கென்னடியின் துப்பாக்கி "புல்லட்' கள் தொலைந்தன. அவர், பெருங்குடி போலீசாரிடம் புகார் கூறினார். இதற்கிடையே "புல்லட்' இருந்த பையை தொண்டர் ஒருவர், நேற்று, ஸ்டாலினிடம் வழங்கினார். அதில், தொலைந்த "புல்லட்' கள், லேப்-டாப் இருந்தது. பை, பெருங்குடி போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டது.


கட்டுக்கோப்பாக நிதியளிப்பு விழா:

பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 தேர்வில் மாநில அளவில் முதல் மூன்று இடங்களை பெற்ற மாணவர்களுக்கு, அரசு சார்பில் சென்னையில் விழா நடத்துவதாக அறிவிக்கப்பட்டது. இதில், குளறுபடி ஏற்பட்டதால் மாணவர்கள், பெற்றோர் அதிர்ச்சிக்குள்ளாயினர். இதனால் நிதியளிப்பு விழாவை கட்டுகோப்பாக நடத்த, ஸ்டாலின் தரப்பில், தொண்டர்களுக்கு உத்தரவிடப்பட்டது. மதுரையில் நடந்த கல்வி நிதியளிப்பு விழா பொறுப்பு முழுவதும், சென்னை நிர்வாகிகளிடம் ஒப்படைக்கப்பட்டது. நிதி பெறும் 1682 மாணவர்கள் பெற்றோருடன், ஒரு நாள் முன்பே, மதுரைக்கு வரவழைக்கப்பட்டனர். அவர்களுக்கு, 12 இடங்களில் தங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டன. போக்குவரத்து செலவு, உணவு என அனைத்து செலவுகளையும் அறக்கட்டளை ஏற்றது. விழா அரங்கில் மாணவர்களுடன் ஒருவர் மட்டும் அனுமதிக்கப்பட்டனர். கட்சியினர், வெளிவளாகத்தில் அமர வைக்கப்பட்டனர். விழா கட்டுக்கோப்பாக நடந்ததால், ஸ்டாலின் உற்சாகமாக காணப்பட்டார். அவரது மனைவி துர்கா, விழாவில் பங்கேற்றார். அழகிரியின் ஆதரவாளர்களும் பங்கேற்றனர்.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...Advertisement

வாசகர் கருத்து (38)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
mirudan - kailaayam,இந்தியா
01-ஜூலை-201310:57:58 IST Report Abuse
mirudan அப்பனுக்கு பிள்ளை தப்பாமல் இருக்கிறார்
Rate this:
Share this comment
Cancel
Chenduraan - kayalpattanam,இந்தியா
30-ஜூன்-201319:08:54 IST Report Abuse
Chenduraan நல்ல விஷயத்துக்குத்தானே வசூல் செய்கிறார்.. இதில் ஒன்றும் கொள்ளை இல்லையே.. இந்த வசூல் கட்சி அல்லக்கைகளிடம் இருந்து மட்டுமே மாணவர்களுக்கு அல்ல. வசூல் செய்கிற பணம் தான் மாணவர்களுக்கு செலவு செய்யப்படும் என்று சொல்லுகிறாள்.. நல்ல விஷயங்களை குறை சொல்லுவது நியாயமளல்ல.
Rate this:
Share this comment
Cancel
Ganesh G - Hyderabad,இந்தியா
30-ஜூன்-201316:26:52 IST Report Abuse
Ganesh G நாள பின்ன கணக்கு வழக்குன்னு ஏதாவது வந்துச்சுன்னா, அதுக்குத்தான் இப்பவே பிட் ஐ போட்டு வைக்கிறார். இவ்வளவு பணம் எங்கிருந்து வந்ததுன்னு கணக்கு கேட்டா, 10000 மாணவர்கள் போட்டோ எடுத்துக்கொண்டு நன்கொடை அளித்ததுன்னு சொல்லிக்கலாம் இல்ல.
Rate this:
Share this comment
Cancel
g.s,rajan - chennai ,இந்தியா
30-ஜூன்-201316:17:57 IST Report Abuse
g.s,rajan தாய் எட்டடி பாஞ்சா குட்டி பதினாறு அடி பாயும் ஜி.எஸ்.ராஜன் சென்னை .
Rate this:
Share this comment
Cancel
Vaduvooraan - Chennai ,இந்தியா
30-ஜூன்-201312:03:35 IST Report Abuse
Vaduvooraan 2G விவகாரத்துல அடிச்சதுல ஒரு சின்ன சதவிகிதத்தை இந்த மாதிரி உதவித்தொகை வழங்க ஒதுக்கினாலே போதுமே? எதுக்கு 500, 600 ன்னு ஜுஜுபி தொகையை வசூல் பண்ணணும், தளபதி? நம்ம ரேஞ்சுக்கு இதெல்லாம் அசிங்கமில்லையா?
Rate this:
Share this comment
Cancel
villupuram jeevithan - villupuram,இந்தியா
30-ஜூன்-201311:57:01 IST Report Abuse
villupuram jeevithan 500 ரூபாயக் இருக்கும்போதே போட்டோ எடுத்துக் கொள்ளுங்கள், பதவிக்கு வந்துவிட்டால் ரேட் எகிறிவிடும்? முந்திக் கொள்ளுங்கள்? என்ன?
Rate this:
Share this comment
Cancel
Sivamuthu - New York,யூ.எஸ்.ஏ
30-ஜூன்-201311:04:52 IST Report Abuse
Sivamuthu புலி இருந்த காட்டில் பூனை இருக்கவும், சிங்கத்தின் குகையில் நரி இருக்கவும், யானை ஏறியவன் ஆடு மேய்க்கவும் ஆச்சுதே.
Rate this:
Share this comment
Cancel
SivajiDhakshinamurthy - Guruvarajapettai, Arakkonam,இந்தியா
30-ஜூன்-201309:53:16 IST Report Abuse
SivajiDhakshinamurthy அமைதிப்படை 2 படத்தில் வரும் நகைச்சுவை காட்சியையே பொருத்து கொள்ள முடியாத இவர்களெல்லாம் பொது வாழ்க்கையில் அரசியல் தலைவர்களாக பல சோதனைகளை எப்படி தாங்குவார்கள்
Rate this:
Share this comment
Cancel
Pandian Reddiar - Chennai,இந்தியா
30-ஜூன்-201309:40:19 IST Report Abuse
Pandian Reddiar இந்த 500 ரூபாய் வீட்டுக்கா? நாட்டுக்கா? அல்லது கட்சிக்கா????? தெளிவு படுத்துங்கள்.
Rate this:
Share this comment
Vijayan S, Mumbai - mumbai,இந்தியா
30-ஜூன்-201314:57:24 IST Report Abuse
Vijayan S, Mumbaiதிரு. பாண்டியன் அவர்களே. உங்களை நினைத்து பரிதாப்படுகிறேன். நடப்பு தெரியாதவரைப் போல் கேள்வி கேட்டு உள்ளீர்கள். தி.மு.க. வின் சட்டமே கட்சிக்காக அல்லது நாட்டுக்காக என்று பாமரனோ அல்லது பணக்காரனோ கொடுக்கும் பணம் கடைசியில் சேருவது தலைமைக் குடும்பமே என்பது நாடறிந்த விஷயம்தான்....
Rate this:
Share this comment
Cancel
mrsethuraman - Bangalore,இந்தியா
30-ஜூன்-201309:03:41 IST Report Abuse
mrsethuraman  இனிமேல் நீங்கள் இப்படி சம்பாதித்தால் தான் உண்டு.கூடவே இரண்டு போட்டோ எடுத்தால் தாத்தாவுடன் ஒரு போட்டோ இலவசம் என்று அறிவிக்கலாம்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை