E-paper| Mobile Apps

iPad

iPad E-paper

iPhone

Android

Android Tablet

Windows

Windows 8

Blackberry

bbicon OS 10

Mobile Election

| Get Font | Site Map |  RSS Feed
Advertisement
தே.மு.தி.க., - எம்.எல்.ஏ.,க்கள் ஏழு பேர் "சஸ்பெண்ட்': விஜயகாந்த்
Advertisement
 
 
Advertisement
 
 
எழுத்தின் அளவு:
Advertisement

மாற்றம் செய்த நாள்

30 ஜூன்
2013
06:05
பதிவு செய்த நாள்
ஜூன் 29,2013 23:38

ராஜ்யசபா தேர்தலில், தே.மு.தி.க., கொறடா உத்தரவை மீறி, அ.தி.மு.க.,விற்கு ஓட்டளித்த, ஏழு எம்.எல்.ஏ.,க்களை, கட்சியில் இருந்து, "சஸ்பெண்ட்' செய்து, அக்கட்சி தலைவர் விஜயகாந்த் கடிதம் எழுதியுள்ளார்.

தே.மு.தி.க., தலைமை மீது ஏற்பட்ட அதிருப்தியால், கடந்தாண்டு, அக்., 26ம் தேதி, எம்.எல்.ஏ.,க்கள் சுந்தர்ராஜன் (மதுரை மத்தி), தமிழழகன் (திட்டக்குடி) ஆகியோர், தலைமை செயலகத்தில், முதல்வரை சந்தித்தனர். அதற்கடுத்த நாள், எம்.எல்.ஏ.,க்கள் மைக்கேல் ராயப்பன் (ராதாபுரம்), நடிகர் அருண்பாண்டியன் (பேராவூரணி) ஆகியோர் முதல்வரை சந்தித்தனர். இவர்களை தொடர்ந்து, எம்.எல்.ஏ.,க்கள் சுரேஷ்குமார் (செங்கம்), சாந்தி (சேந்தமங்கலம்), பாண்டியராஜன் (விருதுநகர்) ஆகியோரும், முதல்வரை சந்தித்தனர்.தொகுதி மேம்பாடு தொடர்பாக, முதல்வரை சந்தித்ததாக கூறினர். ஆனால், அதன் பிறகு, இவர்கள் கட்சி நடவடிக்கைகளில் பங்கேற்காமல், அதிருப்தி எம்.எல்.ஏ.,க்களாக வலம் வந்தனர்.

கடந்த, 27ம் தேதி நடந்த ராஜ்யசபா தேர்தலில், தே.மு.தி.க., வேட்பாளராக அக்கட்சி பொருளாளர் இளங்கோவன் நிறுத்தப்பட்டார். அவருக்கு ஓட்டு போடும்படி, ஏழு எம்.எல்.ஏ.,க்களுக்கும், கட்சி தலைவர் விஜயகாந்த், மூன்று முறை கடிதம் எழுதினார். மொபைல் போன் மூலமும், தே.மு.தி.க., நிர்வாகிகள், ஏழு பேரிடம் பேசினர். ஆனால், ஏழு பேரும், அ.தி.மு.க., வேட்பாளர்களுக்கு ஓட்டு போட்டனர்.

ஏழு எம்.எல்.ஏ.,க்களின் இச்செயல், தே.மு.தி.க., தலைமைக்கு கடும் கோபத்தை ஏற்படுத்தியது. இதுகுறித்து, நேற்று முன்தினம் அறிக்கை வெளியிட்ட விஜயகாந்த், "எம்.எல்.ஏ.,க்கள், முதல்வரை சந்தித்த நாடகம் முடிவுக்கு வந்துள்ளது. அரசியல் வரலாற்றில், மன்னிக்க முடியாத துரோகிகள் இவர்கள்' என, கடும் கண்டனம் தெரிவித்தார்.

இந்நிலையில், தே.மு.தி.க., கொறடா உத்தரவை மீறி செயல்பட்ட, ஏழு எம்.எல்.ஏ.,க்களையும் கட்சியில் இருந்து, "சஸ்பெண்ட்' செய்து, விஜயகாந்த் கடிதம் எழுதியுள்ளதாக, நேற்று மாலை, தகவல் வெளியானது. விரைவு தபாலில் அனுப்பப்பட்ட கடிதம், வெளியூரில் உள்ள, ஆறு எம்.எல்.ஏ.,க்களுக்கும், நேற்று மாலை வரை கிடைக்கவில்லை. தே.மு.தி.க., தரப்பில் இருந்தும், இது குறித்த தகவல் தெரிவிக்கப்படவில்லை.பாண்டியராஜன் சென்னையில் வசிப்பதால், அவருக்கு உடனடியாக கடிதம் கிடைத்து, அவர் தரப்பில் இருந்து இத்தகவல் வெளியில் பரவியுள்ளது. மற்ற எம்.எல்.ஏ.,க்களுக்கு, விஜயகாந்த் அனுப்பிய கடிதம் இன்று சென்றடையும்.விஜயகாந்தின் இந்த அதிரடி நடவடிக்கை, அக்கட்சியில் மட்டுமின்றி அரசியல் வட்டாரத்திலும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஏழு எம்.எல்.ஏ.,க்களை, கட்சியில் இருந்து நீக்கினால், சட்டசபையில், தே.மு.தி.க.,வின் பலம், 22 ஆக குறையும். தி.மு.க.,விடம், 23 எம்.எல்.ஏ.,க்கள் உள்ளதால், அக்கட்சிக்கு எதிர்க்கட்சி அந்தஸ்து கிடைத்து, விஜயகாந்தின் எதிர்க்கட்சி தலைவர் பதவிக்கும் பாதிப்பு வர வாய்ப்புள்ளது.

"நிரந்தரமாக நீக்கினால் மகிழ்ச்சியடைவோம்' : தே.மு.தி.க., - எம்.எல்.ஏ.,க்கள் பேட்டி : "கட்சியை விட்டு, தற்காலிகமாக நீக்குவதற்கு பதில், நிரந்தரமாக நீக்கினால் மகிழ்ச்சி அடைவோம்' என, தே.மு.தி.க., அதிருப்தி எம்.எல்.ஏ.,க்கள் கூறினர்.

ராஜ்யசபா தேர்தலில், அ.தி.மு.க., வேட்பாளர்களுக்கு ஓட்டு போட்ட, தே.மு.தி.க.,வின் அதிருப்தி எம்.எல்.ஏ.,க்கள், ஏழு பேரையும், "சஸ்பெண்ட்' செய்து, கட்சி தலைவர் விஜயகாந்த் கடிதம் அனுப்பியுள்ளார். வரும், 10ம் தேதிக்குள், ஏழு பேரும் விளக்கம் அளிக்க வேண்டும் என்று அந்த கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.

இதுகுறித்து தே.மு.தி.க., அதிருப்தி எம்.எல்.ஏ.,க்கள் அளித்த பேட்டி:
தமிழழகன்: எந்த கடிதமும் வரவில்லை. தற்காலிக நீக்கம் என்பது, ஒரு வேளை சாப்பாடு; நிரந்தர நீக்கம் தான், மூன்று வேளை சாப்பாடு. எனக்கு விஜயகாந்த், மூன்று வேளை சாப்பாடு வழங்கினால், சந்தோஷப்படுவேன்.

சுந்தர்ராஜன்: கடிதம் இதுவரை வரவில்லை. எதிர்க்கட்சி தலைவர் பதவியை காப்பாற்றவே, இந்த ஏற்பாடு. சட்டசபையில் இருந்து கட்சி கொறடா சந்திரகுமாரை, சஸ்பெண்ட் செய்த பின், அவருக்கு மாற்று ஏற்பாடு செய்யவில்லை. இந்த நிலையில், கொறடா உத்தரவை நாங்கள் மீறியதாக கூறுவது வேடிக்கையாக உள்ளது.

மைக்கேல் ராயப்பன்: இதுவரை எந்த கடிதமும் வரவில்லை. தோல்வி அடைவோம் என்று தெரிந்தே, இளங்கோவனை உள்நோக்கத்திற்காக வேட்பாளராக நிறுத்தினர். இதை நாங்கள் புரிந்துக் கொண்டோம். கட்சியை விட்டு நிரந்தரமாக நீக்கினால், சந்தோஷப்படுவோம். நாங்கள் துவங்கிய நாடகத்தை, 15 நாளில் முடித்து வைப்பதாக விஜயகாந்த் கூறினார்; அதற்காக காத்திருக்கிறோம்.

சாந்தி: கட்சியை விட்டு நீக்கியதாக தகவல் மட்டுமே கிடைத்துள்ளது. கட்சிக்காக செலவு செய்த, மாவட்ட செயலர்கள், மாநில நிர்வாகிகள் பலர் உள்ளனர். அவர்களுக்கு பதில், தன் ஜாதியை சேர்ந்த இளங்கோவனை வேட்பாளராக விஜயகாந்த் நிறுத்தினார். அது எங்களுக்கு பிடிக்கவில்லை. என்னை கட்சியை விட்டு நிரந்தரமாக நீக்கினாலும் கவலை இல்லை.

எம்.எல்.ஏ.,க்கள் பாண்டியராஜன், சுரேஷ்குமார், நடிகர் அருண்பாண்டியன் ஆகியோரை, மொபைல் போன் மூலம் தொடர்பு கொண்ட போது, பதில் அளிப்பதை தவிர்த்து விட்டனர்.

-நமது நிருபர்-


தொடர்புடைய செய்திகள்:


Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (25)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
PALANI - Madurai,இந்தியா
01-ஜூலை-201309:58:37 IST Report Abuse
PALANI 5 கோடி 5 கோடி 5 கோடி மாமா மாமா மாமா காரங்க தான் இவங்க 7 பெரும் குனிஞ்சு கும்புடு போடா பழகி கொங்க 5 கோடி வாங்குன 7 கேடி கல
Rate this:
0 members
0 members
0 members
Share this comment
Cancel
samraj - ulaanbaatar ,மங்கோலியா
01-ஜூலை-201301:19:28 IST Report Abuse
samraj அல்லகைகள் ஆட்சிக்குவந்தால் தமிழ்நாடுக்கு சாபகேடுதான். சூரிய வெப்பத்தைவிட கொடுமையான கடந்த ஆட்சியின் தீய எண்ணங்களால் துவண்டுபோன மக்கள் ஒவொருவரும் தம் வாழ்நாளில் 5 ஆண்டுகளை தொலைத்துவிட்டார்கள். சூரியனுக்கு ஒட்டுபோடுபவர்கள் தனக்குதானே சூடுவைத்து சொரணை இருக்கிறதா என சோதித்து பார்த்துக்கொள்ளவேண்டும்.
Rate this:
0 members
0 members
1 members
Share this comment
Cancel
Ab Cd - Dammam,சவுதி அரேபியா
30-ஜூன்-201311:04:01 IST Report Abuse
Ab Cd இனி எதிர் கட்சி என்ற இடத்தில் திமுக இருக்கும்....
Rate this:
12 members
1 members
64 members
Share this comment
Cancel
Ab Cd - Dammam,சவுதி அரேபியா
30-ஜூன்-201311:01:31 IST Report Abuse
Ab Cd இனி இவர்கள் நாங்கள் தான் உண்மையான தேதிமுக என கூற வைத்து , இவர்களை பயன்படுத்தி ஜெயலலிதா முரசு சின்னத்தை முடக்க முயற்ச்சிக்கலாம். அல்லது இவர்கள் அனைவரையும் அதிமுகவில் இணைத்து கொள்ளலாம். இனி கட்சி தாவல் தடை சட்டம் ஒன்றும் செய்யாது.
Rate this:
2 members
0 members
59 members
Share this comment
Cancel
Pandian Reddiar - Chennai,இந்தியா
30-ஜூன்-201310:20:49 IST Report Abuse
Pandian Reddiar இதற்க்கெல்லாம் கருத்து சொல்லி நேரத்தை வீணாக்கவேண்டாம். விடுங்கப்பா
Rate this:
2 members
0 members
27 members
Share this comment
Cancel
saravanan.R - Trivandrum-Karamana.,இந்தியா
30-ஜூன்-201309:41:26 IST Report Abuse
saravanan.R இவர்களின் சுயரூபம் election சமயத்தில ADMK சீட் கொடுக்க வில்லை என்றல் தெரிய வரும்.
Rate this:
1 members
0 members
81 members
Share this comment
Cancel
s.maria alphonse pandian - CHENNAI-88,இந்தியா
30-ஜூன்-201306:19:04 IST Report Abuse
s.maria alphonse pandian கட்சி தலைமை பிடிக்கவில்லை என்றால், அந்த தலைமை மூலம் அக்கட்சியின் சின்னத்திலே நின்று வெற்றி பெற்ற பதவியை ராஜினாமா செய்துவிட்டு மீண்டும் விரும்பும் கட்சியில் சேர்ந்து அதன் சின்னத்தில் போட்டியிடுவதுதானே நாகரீகம்? அதைதானே மதிமுகவிலிருந்து விலகிய கண்ணப்பன்..அண்ணா திமுகவிலிருந்து விலகிய அனிதா ராதாக்ருஷ்ணன் ஆகியோர் செய்தார்கள்?
Rate this:
25 members
1 members
147 members
Share this comment
ஆ.தவமணி, - சேந்தமங்கலம், நாமக்கல்.,இந்தியா
30-ஜூன்-201316:31:51 IST Report Abuse
ஆ.தவமணி,   சின்னம் மட்டும்தான் தே.தி.மு.க. வுடையது. ஆனால், அவர்கள் பெற்ற மொத்த ஓட்டுகளில் 99.99 சதவீத ஓட்டுகள் அ.இ.அ.தி.மு.க. வின் ஓட்டுகள்தான். இது mariya alphonse உள்ளிட்ட தமிழ் மக்கள் அனைவருக்கும் தெரிந்த இரகசியமாகும். ஆதலால், அந்த எம்.எல்.ஏ. க்கள் செய்தது ஏற்புடையது தானே? கண்ணப்பன், அனிதா ஆகியோர் தேர்தலின் போதே எதிர் அணியாக இருந்த கட்சியில் சேர்ந்ததால் பதவியை ராஜினாமா செய்தார்கள். ஆனால், இந்த எம்.எல்.ஏ. க்கள் தேர்தலின்போது கூட்டணியாக / ஆதரவாளராக இருந்த கட்சிக்கெதிராக, தங்களை எம்.எல்.ஏ க்களாக ஆக்கிய கட்சிக்கெதிராக விஜயகாந்த் செயல்படுவதைத்தானே எதிர்க்கிறார்கள். இதிலென்ன அநாகரீகம் உள்ளது? அ.தி.மு.க. வாழ் எம்.எல்.ஏ. பதவியடைந்த விஜயகாந்த் உள்ளிட்ட 22 எம்.எல்.ஏ. க்கள் தம் பதவியை ராஜினாமா செய்துவிட்டு, தங்கள் சொந்த பலத்தில் எம்.எல்.ஏ ஆக முயற்சிக்காமல் இன்னும் தாமதம் செய்து வருவதுதான் உண்மையில் அநாகரீகம், பண்பாடற்ற செயல். ஆ.தவமணி,செயலாளர், சேந்தமங்கலம் பயனீட்டாளர் சங்கம், நாமக்கல். ...
Rate this:
99 members
0 members
11 members
Share this comment
meekannan - Chennai,இந்தியா
01-ஜூலை-201313:49:16 IST Report Abuse
meekannanஅய்யா செயலர் அவர்களே, அதிமுகவின் வாக்கு விகிதத்தில் தான் விஜயகாந்திற்கு 29 சீட்டுக்கள் உண்மையே அதே போல் ஏன் அவரின் 10% வாக்கால் கிட்டிய அதிமுகவின் 151 சீட்டை பற்றி பேசபயப்படுகிரீர்கள். விஜயகாந்தின் கூட்டணிக்கு காவடி தூக்கியது மறந்தது நாகரீகமா? ஆட்சிக்கு வந்தவுடன் உதைத்தெறிந்தது நாகரீகமா? நாகரீகத்தை பற்றி யார்பேசுவது? வளர்த்துவிட்டவர்களை நன்றி மறந்து துரோகம் செய்வது அதிமுகவிற்கு ஒன்றும் புதிதல்ல இது எம்ஜியார் தொடங்கிய கலாச்சாரம் ஜெயலலிதா செய்வதில் தவரொறன்றும் இல்லை..........
Rate this:
99 members
0 members
24 members
Share this comment
Cancel
யதார்தவாதி வெகுஜன விரோதி - சிராப்பள்ளி,இந்தியா
30-ஜூன்-201306:04:47 IST Report Abuse
யதார்தவாதி வெகுஜன விரோதி அப்படி என்றால் இனி கட்சித்தாவல் தடை சட்டம் இவர்கள் மீது இனி பாயாது என்று நம்பலாமா?
Rate this:
2 members
1 members
16 members
Share this comment
Cancel
T.Indran - Pudukottai,இந்தியா
30-ஜூன்-201305:54:07 IST Report Abuse
T.Indran நந்த வனத்தில் ஓர் ஆண்டி , நாலாறு மாதமாய் குயவனை வேண்டி,கொண்டு வந்தான் ஓர் தோண்டி, அதை கூத்தாடி கூத்தாடி போட்டுடைததாண்டி. விஜயகாந்தின் அரசியல் நடவடிக்கைகள் அனைத்தும் இந்த பாடலை நினைவு படுத்துகிறது.
Rate this:
18 members
0 members
47 members
Share this comment
Cancel
NavaMayam - New Delhi,இந்தியா
30-ஜூன்-201305:16:48 IST Report Abuse
NavaMayam கூவத்தில் கரைத்த பெருங்காயங்கள்.........
Rate this:
1 members
0 members
103 members
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
( OR )Login with
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.