Sri lanka tamils sad over dmk congress alliance | ஒரு எம்.பி., சீட்டுக்காக காங்.,வுடன் மீண்டும் கூட்டணியா?தி.மு.க., மீது அதிருப்தி| Dinamalar
Advertisement
ஒரு எம்.பி., சீட்டுக்காக காங்.,வுடன் மீண்டும் கூட்டணியா?தி.மு.க., மீது அதிருப்தி
Advertisement
 
 
Advertisement
 
 
 
எழுத்தின் அளவு:
Advertisement

இலங்கை தமிழர்கள் பிரச்னையை மையப்படுத்தி, காங்கிரஸ் கூட்டணியிலிருந்து வெளியேறிய தி.மு.க., ராஜ்யசபா எம்.பி.,யாக, கனிமொழி தேர்ந்தெடுக்கப்பட வேண்டும் என்பதற்காக, மீண்டும் காங்கிரசுடன் கூட்டணியை புதுப்பித்துக் கொண்டது, இலங்கை தமிழர்கள் மத்தியில் கடும் அதிருப்தியை உருவாக்கியுள்ளது.

நீண்ட இழுபறிக்கு பின், 31 எம்.எல்.ஏ.,க்களின் ஓட்டுக்களை பெற்ற தி.மு.க., வேட்பாளர் கனிமொழி, மீண்டும் ராஜ்யசபா எம்.பி., பதவிக்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். காங்கிரஸ் கட்சியிடம் ஆதரவு கேட்பதற்கு முன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், - தே.மு.தி.க., - பா.ம.க., ஆகிய மூன்று கட்சிகளின் ஆதரவை தி.மு.க., கேட்டது. ஆனால், இந்த மூன்று கட்சிகளும் தி.மு.க.,வுக்கு ஆதரவு தெரிவிக்கவில்லை என்றதும், காங்கிரஸ் ஆதரவை தி.மு.க., நாடியது.டில்லிக்கு தி.மு.க.,வினர் படையெடுத்தனர். டில்லி மேலிட தலைவர்களிடம், "இலங்கை தமிழர்கள் பிரச்னையில், மத்திய அரசுக்கு, எந்த அழுத்தமும் தரமாட்டோம்; உணவு பாதுகாப்பு சட்ட மசோதா உள்ளிட்ட முக்கிய மசோதாக்கள் நிறைவேற உறுதுணையாக இருப்போம். லோக்சபா தேர்தலில், தே.மு.தி.க.,வுக்கு இணையாக தொகுதிகளை ஒதுக்கீடு செய்வோம்; மெகா கூட்டணி அமைந்தால், குறைந்தபட்சம் காங்கிரசுக்கு, 10க்கும் மேற்பட்ட தொகுதிகளை ஒதுக்குவோம்' உள்ளிட்ட வாக்குறுதிகளை தி.மு.க., அளித்துள்ளது.இலங்கை தமிழர்கள் வாழ்வுரிமையில், மத்திய அரசு, அக்கறை காட்டவில்லை என்ற குற்றச் சாட்டை மையப்படுத்தி, ஐ.மு., கூட்டணியிலிருந்தும், மத்திய அமைச்சரவையிலிருந்தும் தி.மு.க., வெளியேறியது. ஆனால், ராஜ்யசபா தேர்தலில், கனிமொழி, மீண்டும் ராஜ்யசபா எம்.பி., பதவியை அடைவதற்காக, மீண்டும், காங்கிரசுடன் - தி.மு.க., கூட்டணியை புதுப்பித்துக் கொண்டது, இலங்கை தமிழர்கள் மத்தியில் அதிருப்தியை உருவாக்கியுள்ளது.

இதுகுறித்து கட்சி வட்டாரங்கள் கூறியதாவது:அமெரிக்கா கொண்டு வந்த தீர்மானத்தில், இலங்கை தமிழர்களுக்கு ஆதரவாக, இந்தியா அழுத்தம் தரவேண்டும் என்ற கோரிக்கையை மத்திய அரசிடம் தி.மு.க., வலியுறுத்தியது. இதை தொடர்ந்து, தமிழகம் முழுவதும் கல்லூரி மாணவர்கள் போராட்டம் நடத்தினர். அந்த போராட்டம் இந்தி எதிர்ப்பு போராட்டத்தை போல், பெரிய அளவில் தமிழகத்தில் பாதிப்பை ஏற்படுத்தும் என, அரசியல் கட்சிகள் கருதின.இலங்கை தமிழர்கள், தமிழக மீனவர்களின் நலனில் அக்கறை காட்டாத காங்கிரஸ் கூட்டணியில் இனி நீடிக்க மாட்டோம் எனக் கூறி, தி.மு.க., வெளியேறியது. காங்கிரஸ் கூட்டணியிலிருந்து, தி.மு.க., வெளியேறியதும், அறிவாலயத்தில் தி.மு.க.,வினர், சோனியா, ராகுல் உருவ பொம்மைகளை எரித்தனர். பதிலுக்கு சத்தியமூர்த்தி பவனில், கருணாநிதி, ஸ்டாலின் உருவ பொம்மைகளை காங்கிரசார் எரித்தனர். இந்த உருவ பொம்மைகளின் சாம்பல் உலர்வதற்குள், மீண்டும், தி.மு.க., - காங்கிரஸ் கட்சிகளின் கூட்டணி புதுப்பிக்கப்பட்டுள்ளது.அதேசமயம், ஒரு எம்.பி., சீட்டுக்காக, காங்கிரசிடம் ஆதரவு கேட்காமல் இருந்திருந்தால், தி.மு.க., கொள்கைக்காக, பாடுபடும் கட்சி என்ற பெயரை தக்க வைத்திருக்கும்.

தற்போது, ஒரு எம்.பி., சீட்டுக்காக, மீண்டும் காங்கிரசுடன், தி.மு.க., கூட்டணி அமைத்தது, இலங்கை தமிழர்கள் மத்தியில் கடும் அதிருப்தியை உருவாக்கியுள்ளது.இலங்கை தமிழர்கள் பிரச்னை, லோக்சபா தேர்தலில் எடுபடாது, என, தி.மு.க., கருதுகிறது. 2009ம் ஆண்டில், லோக்சபா தேர்தல், இலங்கை பிரச்னையை மையப்படுத்தி நடந்தது. அதில், அ.தி.மு.க., கூட்டணியை விட, அதிக தொகுதிகளை தி.மு.க., - காங்கிரஸ் கூட்டணி வெற்றி பெற்றது. எனவே, லோக்சபா தேர்தலில், இலங்கை தமிழர்கள் பிரச்னை, தமிழக தேர்தலில் எந்த பாதிப்பும் ஏற்படுத்தாது என்ற அடிப்படையில் தான், ராஜ்யசபா எம்.பி., தேர்தலில், கனிமொழியின் வெற்றிக்காக, மீண்டும் காங்கிரசுடன் தி.மு.க., கைகோர்த்துள்ளது. இது சந்தர்ப்பவாத கூட்டணி.இவ்வாறு, கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
- நமது நிருபர் -

Advertisement

தொடர்புடைய செய்திகள்:


Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (45)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Mohan Ramachandran - Itanagar,இந்தியா
30-ஜூலை-201306:47:29 IST Report Abuse
Mohan Ramachandran அரசியலில் இதல்லாம் சாதாரணமப்பா. அதுவும் கருணாவின் அரசியல் சித்து விளையாட்டில் மிக சாதாரணம். ஏமாறுபவர்கள் இருக்கும் வரையில் ஏமாற்றுபவர்கள் இருப்பார்கள். மக்கள் ஏமாறுபவர்கள் .
Rate this:
Share this comment
Cancel
Peria Samy - chennai,இந்தியா
01-ஜூலை-201301:14:09 IST Report Abuse
Peria Samy மாணிக்கம் அவர்களின் புள்ளிவிபரங்களுடன் கூடிய ஆணித்தரமான வாதம் சிந்தனைக் குரியது. வடக்கு வாழ்கிறது,தெற்கு தேய்கிறது என்று அன்று சொன்ன தி.மு.க இன்று சுயநல குடும்ப அரசியலால் தேய்ந்து கொண்டிருக்கிறது.
Rate this:
Share this comment
Cancel
sairam - muscat,ஓமன்
30-ஜூன்-201318:41:37 IST Report Abuse
sairam கட்சி என்னடா கொள்கை என்னடா குடும்பத்துக்கான கட்சிலை.....
Rate this:
Share this comment
Cancel
karuvaayan - karimedu,இந்தியா
30-ஜூன்-201316:28:40 IST Report Abuse
karuvaayan எப்ப பாத்தாலும் இலங்கை தமிழர் பிரச்சனையை பேசிக் கொண்டே இருப்பதால் தான் நம் தமிழ்நாட்டு பிரச்சனை அதிகமாகிக் கொண்டே இருக்கிறது . இதை நிறுத்திவிட்டு நம் தமிழ்நாடு உருப்படுவதற்குப் சிந்தியுங்கள்
Rate this:
Share this comment
Cancel
Ganesh G - Hyderabad,இந்தியா
30-ஜூன்-201316:19:49 IST Report Abuse
Ganesh G இங்கே தான் ஜெ வின் ராஜ தந்திரம் இருக்கிறது. தி.மு.க.வை மறுபடியும் காங்கிரஸ் உடன் இனைய வைத்தது ஜெ.வகுத்த வ்யுகம். ஒரே கல்லில் ரெண்டு மாங்காய். விஜயகாந்த்திற்கும் பாடம் புகட்டியாச்சு, தி.மு.க.வையும் காங்கிரஸ் உடன் கூட்டு சேரும்படி செய்தாச்சு. மு.க.வின் முகத்திரையையும் கிழிச்சாச்சு. ஜெ நினைத்திருந்தால் ராஜ்ய சபை தேர்தலில் 6 பேரை நிறத்தி வெற்றிபெற்றிருக்க முடியும்.
Rate this:
Share this comment
மதுரை விருமாண்டி - சான் ஹோஸே, கலிபோர்னியா ,யூ.எஸ்.ஏ
01-ஜூலை-201301:57:29 IST Report Abuse
மதுரை விருமாண்டிமம்மி காக்காய் ஒக்கார, காங்கிரஸ் பழம் விழுந்திடிச்சாம்.. காங்கிரஸ் திமுக சேரல்லைன்னா, தேமுதிகவோட சேர்ந்து கேப்டன் மம்மியோட மூக்கை ஒடைச்சிருப்பார்... மானம் போகாமே தப்பிச்சுன்னு மம்மியே கம்முன்னு இருக்காங்க.. இந்த சொம்புகளின் கூவல் தான் தாங்கல்லை.....
Rate this:
Share this comment
Cancel
adithyan - chennai,இந்தியா
30-ஜூன்-201316:16:42 IST Report Abuse
adithyan ஆரியக்கூத்தாடினாலும் தாண்டவகோனே, பதவி காரியத்தில் கண்வையடா தாண்டவக்கோனே. உள்ளே பகைவையடா தாண்டவக்கோனே, உதட்டில் உறவாடடா தாண்டவக்கோனே, இந்த முட்டாள் ஜனங்களை எல்லாம் தாண்டவக்கோனே, காசு விலை கொடுத்து வாங்கிடலாம் தாண்டவக்கோனே.
Rate this:
Share this comment
Cancel
Vijayan S, Mumbai - mumbai,இந்தியா
30-ஜூன்-201315:05:28 IST Report Abuse
Vijayan S, Mumbai தன் குடும்பத்தினருக்காக எதுவும் செய்வார் கருணாநிதி. மக்கள் புரிந்து கொண்டு விட்டனர்.
Rate this:
Share this comment
Cancel
R.Subramanian - Chennai,இந்தியா
30-ஜூன்-201312:13:16 IST Report Abuse
R.Subramanian விடுதலை புலிகள் மற்றும் அவர்கள் ஆதரவாளர்களின் தற்போதைய நிலைப்பாடு தனி ஈழம் கிடைக்க இந்தியா தடையாக இருக்கும் என்றால் இந்தியாவை அழிக்கவும் நாங்கள் தயங்க மாட்டோம் என்ற நிலைப்பாடு அதற்காக பாகிஸ்தான் (சீமான் யாசின் மாலிக் கூட்டு ஒரு உதாரணம்) கூட சேர நாங்கள் தயங்க மாட்டோம் என்று மிக வெளிப்படையாக சொல்கிறார்கள். இதை விட பெரிய சுயநலம் மற்றும் துரோக செயல் வேறு எதுவும் இருக்க முடியாது அவர்களின் தவறான தீவிரவாத செயல்களுக்கு நாம் பலியாக வேண்டும்மா ? அவர்களின் அதிகார போதைக்கு நம் நாடு பலியாக வேண்டும்மா ? அதனால். இந்தியா தமிழர்களாகிய நாம் ஒற்றுமையாக தேசபற்றோடு இருந்தால் இம்மாதிரியான துரோக செயல்கள் வெற்றி பெறாது. விடுதலை புலிகள் மற்றும் அவர்களின் ஆதரவாளர்களின் இம்மாதிரியான துரோக செயல்களால் தான் பெரும்பாலான தமிழக மக்கள் இலங்கை பிரச்சனையில் இருந்து விலகி இருக்கிறார்கள் ஆனால் அதை புரிந்துகொள்ளும் நிலையில் விடுதலை புலிகள் இல்லை, அவர்கள் நிதர்சன உண்மை நிலையைவிட ஒருவித கற்பனை நிலையில் இருப்பதை தான் விரும்புகிறார்கள், தாங்கள் செய்யும் செயல் தவறு என்பது அவர்களுக்கு புரியவில்லை தங்களின் செயல் சரியே என்று நினைத்து அவர்களை அவர்களே ஏமாற்றிக்கொள்கிறார்கள் இதை சொல்ல காரணம் விடுதலை புலிகள் மற்றும் அவர்களின் ஆதரவாளர்கள் செயல் சரி என்றால் அதை பெரும்பாலான உலக நாடுகள் (முக்கியமாக தமிழகம்) ஏற்று இருக்கும், இன்று வரையில் தமிழகமோ, இந்தியா அரசோ அல்லது உலக நாடுகளோ விடுதலை புலிகள் மற்றும் அவர்கள் ஆதரவாளர்கள் செயலை சரி என்று சொல்லி ஏற்கவில்லை
Rate this:
Share this comment
Cancel
காளி. சந்திர மௌலி - Kuala Lumpur,மலேஷியா
30-ஜூன்-201311:41:09 IST Report Abuse
காளி. சந்திர மௌலி ஒரு சீட்டா, சீட்டு மகளுக்கப்பா, மகளுக்கு. குடும்ப உறுப்பினர்கள் எண்ணிக்கைக்கே தனி நாடு கேட்கலாம். இதிலே தமிழனாம், இலங்கைத் தமிழனாம். புரியாமல் செய்தி போட்டு அப்பழுக்கில்லா அரசியல்வாதியின் செயலுக்கு அவப் பெயர் சேர்க்கிறீர்களே அப்பா. நான் பொறுப்பான அப்பா, அப்பா.
Rate this:
Share this comment
Cancel
Rajkumar Sakthivelu - coimbatore,இந்தியா
30-ஜூன்-201310:38:04 IST Report Abuse
Rajkumar Sakthivelu கெட்டுப்போனது தி மு க வின் குருதி ... அதனாலே வெளியேறினார் பரிதி ... இனி அனைத்து தேர்தலிலும் தி மு க தோற்பது உறுதி ....
Rate this:
Share this comment
மதுரை விருமாண்டி - சான் ஹோஸே, கலிபோர்னியா ,யூ.எஸ்.ஏ
01-ஜூலை-201302:01:28 IST Report Abuse
மதுரை விருமாண்டிகங்கையில் குளித்தால் புனிதமாம்.. மம்மிக்கு அதை விட பவர் சற்று அதிகமாம்.. நேற்று வரை பரிதி ஒரு கெட்ட பாவியாம்.. இன்று அவர் புனிதர், அதற்கு காரணம் மம்மியின் ஆசியாம்.. இதெல்லாம் ஒரு பொழைப்பு .....
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.
மேலும் செய்திகள்