Kanimozhi thanks sonia | சோனியாவுக்கு நன்றி தெரிவித்தார் கனிமொழி| Dinamalar

சோனியாவுக்கு நன்றி தெரிவித்தார் கனிமொழி

Added : ஜூன் 29, 2013 | கருத்துகள் (45)
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement
சோனியாவுக்கு நன்றி தெரிவித்தார் கனிமொழி

புதுடில்லி : காங்கிரஸ் தலைவர் சோனியாவை, தி.மு.க., ராஜ்யசபா, எம்.பி., கனிமொழி, நேற்று சந்தித்துப் பேசினார். அப்போது, ராஜ்யசபா தேர்தலில் வெற்றி பெற, காங்கிரஸ் ஆதரவு தந்ததற்காக, நன்றி கூறினார்.

தமிழகத்திலிருந்து, ராஜ்யசபா, எம்.பி.,க்கள், ஆறு பேரை தேர்வு செய்ய, சமீபத்தில், தேர்தல் நடந்தது. இந்தத் தேர்தலில், தி.மு.க., சார்பில் போட்டியிட்ட, கனிமொழிக்கு, காங்கிரஸ் ஆதரவு தெரிவித்தது. அதனால், அவர் வெற்றி பெற்றார். இதன்மூலம், இரண்டாவது முறையாக, ராஜ்யசபா, எம்.பி.,யாக, அவர் தேர்வானார்.காங்கிரஸ் தலைமையிலான, ஐ.மு.கூட்டணியிலிருந்து, சில மாதங்களுக்கு முன், தி.மு.க., வெளியேறிய நிலையில், அந்தக் கட்சியின் வேட்பாளரான, கனிமொழிக்கு, காங்கிரஸ் ஆதரவு தெரிவித்தது, பல தரப்பிலும் வியப்பை ஏற்படுத்தியது.

இந்நிலையில், காங்கிரஸ் தலைவர் சோனியாவை, நேற்று டில்லியில் சந்தித்த கனிமொழி, ராஜ்யசபா தேர்தலில், தான் வெற்றி பெற, காங்., ஆதரவு தெரிவித்ததற்காக, நன்றி கூறினார்.

சோனியாவை சந்தித்த பின், நிருபர்களிடம் பேசிய கனிமொழி, ""ராஜ்யசபா தேர்தலில், காங்., என்னை ஆதரித்தற்காக, தி.மு.க., சார்பில், நன்றி தெரிவிக்க, சோனியாவை சந்தித்தேன்,'' என்றார்.

சோனியாவை, கனிமொழி சந்தித்தபோது, தி.மு.க.,வைச் சேர்ந்த முன்னாள் மத்திய அமைச்சரான, டி.ஆர்.பாலுவும் உடனிருந்தார். பின், பிரதமர் மன்மோகன் சிங்கையும் சந்தித்து, கனிமொழி நன்றி தெரிவித்தார்.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...Advertisement

வாசகர் கருத்து (45)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
MUTHUKUMAR S - CHENNAI,இந்தியா
01-ஜூலை-201312:28:51 IST Report Abuse
MUTHUKUMAR S வெற்றி பெற்றவுடனேயே முதல் டெல்லி பயணத்தில் தனக்கு ஆதரவு அளித்த காங்கிரஸ் தலைவர் சோனியாவிற்கு நன்றியைத் தெரிவித்த கனிமொழியின் பண்பாடு பாராட்டுக்குரியது.
Rate this:
Share this comment
Cancel
MOHAMED GANI - MADURAI,இந்தியா
01-ஜூலை-201312:26:51 IST Report Abuse
MOHAMED GANI தி.மு.க வைப் பொறுத்தவரை டெல்லிக்கு முரசொலி மாறனுக்குப் பிறகு தி.மு.க வின் குரலை ஒலிக்க, நம்பிக்கைக்குப் பாத்திரமான ஒரு பிரதிநிதி உருவாகியுள்ளார்.
Rate this:
Share this comment
Cancel
Dharma Durai - trichy,இந்தியா
30-ஜூன்-201318:48:55 IST Report Abuse
Dharma Durai வாழ்க ஜனநாயகம்.
Rate this:
Share this comment
Cancel
ragul - kovai,இந்தியா
30-ஜூன்-201318:24:14 IST Report Abuse
ragul மக்கள் எல்லாம் முட்டாள் என்று நினைத்து காரியத்தில் ஈடுபடும் கோமாளிகளே உங்களுக்கு சரியான பாடம் புகுத்தப்படும்.இப்படிக்கு மக்களில் ஒருவன்.
Rate this:
Share this comment
Cancel
adithyan - chennai,இந்தியா
30-ஜூன்-201316:24:51 IST Report Abuse
adithyan நவகிரகங்களையும் திருப்பதி செய்வதற்காக எல்லா நிறங்களும் போட்ட உடையை அணிந்திருக்கிறார். பழுதில்லாமல் அறிவுரை கூறுவதில் கலைஞர் கெட்டி.
Rate this:
Share this comment
Cancel
suresh rajan - hyderabad,இந்தியா
30-ஜூன்-201315:04:52 IST Report Abuse
suresh rajan மஞ்சள் டிரஸ் போடாமல், பச்சை டிரஸ் போட்டு மறைமுகமா நன்றி தெரிவித்து விட்டார்
Rate this:
Share this comment
K.Sugavanam - Sengkang,சிங்கப்பூர்
30-ஜூன்-201318:24:07 IST Report Abuse
K.Sugavanamஅதுல மஞ்ச கலரும் இருக்கே கண்ணுக்கு தெரியலையா?கலர் ப்ளைண்டா இருக்க போவுது... ...
Rate this:
Share this comment
Cancel
Tamilan (To Avoid Corruption) - Trichy,இந்தியா
30-ஜூன்-201311:45:59 IST Report Abuse
Tamilan (To Avoid Corruption) அடுத்த ஊழலுக்கு அஸ்திவாரம் செய்யப்பட்டுள்ளது. மக்களுக்கு நல்லது செய்து இந்த பதவியை அடைந்திருந்தால் பாராட்டுக்கள் ஆனால் என்ன நடந்தது என்று எல்லோருக்கும் தெரியும். திமுக மக்களுக்கு திரோகம் இளைத்திருக்கிறது குறிப்பாக தமிழீழ மக்களுக்கு. மஞ்சள் துண்டார் சொல்கிறார் இது ராஜ்யசபா தேர்தலுக்கான கூட்டணி இது பாடாளுமன்ற கூட்டணி அல்ல என்று. இதை என்னவென்று சொல்ல்வது. திமுக ஒரு சந்தர்ப்பவாத கட்சி என்பது இப்போது மக்கள் அறிவார்கள். காங்கிரஸ் இருக்கும் வரை ஊழல் இருக்கும் என்பது என் தனிப்பட்ட கருத்து. ஜெய் ஹிந்த் / வாழ்க பாரதம்.
Rate this:
Share this comment
Cancel
பச்சைத் தமிழன் - புலவர் வேலாங்குடி,இந்தியா
30-ஜூன்-201311:45:32 IST Report Abuse
 பச்சைத் தமிழன் அட கடவுளே .... என்ன கொடுமை இது ஜெயில் ல இருந்து பெயில் ல வந்தவ எல்லாம் ராஜ்யசபா mp .
Rate this:
Share this comment
Cancel
maayavaraththan - Bangalore,இந்தியா
30-ஜூன்-201310:30:37 IST Report Abuse
maayavaraththan வெட்கமில்லை, வெட்கமில்லை, இங்கு யாருக்கும் வெட்கம் இல்லை.
Rate this:
Share this comment
Cancel
hindustani - beijing,சீனா
30-ஜூன்-201308:00:54 IST Report Abuse
hindustani இதற்கு நேரம் உண்டு.. தமிழ் நாட்டு - காவேரி, முல்லைபெரியறு, தமிழக மீனவர்கள், மத்திய தொகுப்பில் இருந்து மின்சாரம்..... இதற்கு ???
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை