E-paper| Mobile Apps

iPad

iPad E-paper

iPhone

Android

Android Tablet

Windows

Windows 8

Blackberry

bbicon OS 10

Mobile Election

| Get Font | Site Map |  RSS Feed
Advertisement
காங்கிரஸ் கட்சி அமைப்புகளில் பெண்களுக்கு 50 சதவீத பிரதிநிதித்துவம்: ராகுல்
Advertisement
 
 
Advertisement
 
 
எழுத்தின் அளவு:
Advertisement

மாற்றம் செய்த நாள்

30 ஜூன்
2013
06:04
பதிவு செய்த நாள்
ஜூன் 29,2013 23:42

புதுடில்லி:"அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியிலும், இதர கட்சி அமைப்புகளிலும், பெண்களுக்கு, 50 சதவீதம் பிரதிநிதித்துவம் அளிக்கப்படும்' என, காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் உறுதி அளித்தார்.

அடுத்த ஆண்டு லோக்சபா தேர்தல் நடைபெறவுள்ளது. இதையொட்டி, அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் அலுவலக பொறுப்பாளர்கள், சமீபத்தில், மாற்றி அமைக்கப்பட்டனர். புதிதாக நியமிக்கப்பட்ட, பொறுப்பாளர்களுடன், காங்., துணைத் தலைவர் ராகுல், நேற்று முதல் முறையாக ஆலோசனை நடத்தினார்.

அப்போது அவர் பேசியதாவது: அகில இந்திய காங்., கமிட்டி பொதுச் செயலாளர்கள், 12 பேரில், தற்போது, பெண் பிரதிநிதியாக, அம்பிகா சோனியா மட்டுமே இடம் பெற்றுள்ளார். அதேபோல், 44 செயலர்களில், ஐந்து பேர் மட்டுமே பெண்கள்.

பிரதிநிதித்துவம்:



இதைப் பார்க்கும் போது, காங்., கமிட்டியில், பெண்களின் பிரதிநிதித்துவம் குறைவாக உள்ளது தெரிகிறது. கட்சி அமைப்புகளில், பெண்களுக்கு, 50 சதவீதம் பிரதிநிதித்துவம் அளிப்பது உறுதி செய்யப்படும். இரண்டு அல்லது மூன்று ஆண்டுகளில், இது முழுமையாக நிறைவேற்றப்படும்.மேலும், கட்சியின் பொதுச் செயலாளர்களும், செயலர்களும், தங்களின் பொறுப்பை உணர்ந்து அக்கறையுடன் செயல்பட வேண்டும். புதிதாக நியமிக்கப்பட்ட காங்., கமிட்டி பொறுப்பாளர்களில் பலர், 52 வயதிற்கு குறைவானவர்கள். கட்சிப் பொறுப்பிற்கு நியமிக்கப்பட்டுள்ள இளைஞர்கள், கட்சியின் மூத்த தலைவர்களுடன், அவ்வப்போது ஆலோசனை நடத்த வேண்டும்; அவர்களின் அனுபவங்களை கேட்டறிந்து, அதற்கேற்ற வகையில் செயல்பட வேண்டும்.கட்சி எப்போதும், பொதுமக்களுடன் தொடர்புடையதாக இருக்க வேண்டும். கீழ்மட்ட அளவில், இதுவரை இல்லாத வகையில், கட்சியை பலப்படுத்தும் பணியில், தலைவர்கள் ஈடுபட வேண்டும்.இவ்வாறு ராகுல் பேசியதாக, காங்., தகவல் தொடர்பாளர், பக்த சரண் தாஸ் கூறினார்.

கூட்டத்தில், ஆலோசிக்கப்பட்ட விஷயங்கள் குறித்து, கட்சியின் மூத்த தலைவர் ஒருவர் கூறியதாவது: அடுத்த ஆண்டு நடக்கவுள்ள லோக்சபா தேர்தலிலும், இந்த ஆண்டு சில மாநிலங்களில் நடைபெறவுள்ள, சட்டசபை தேர்தல்களின் போதும், எந்தெந்த கட்சிகளுடன் கூட்டணி வைப்பது என்பது தொடர்பாக, எதுவும் விவாதிக்கப்படவில்லை. அதேபோல், நரேந்திர மோடி பற்றியும் எதுவும் பேசப்படவில்லை.கட்சியின் புதிய பொறுப்பாளர்களாக நியமிக்கப்பட்ட பலர், தங்களை அந்தப் பதவிக்கு நியமித்ததற்காக, ராகுலுக்கு நன்றி தெரிவித்தனர். பொதுச் செயலர்கள் மற்றும் செயலர்கள் பங்கேற்ற ஆலோசனை கூட்டம் நடப்பதற்கு முன், இந்த ஆண்டு தேர்தல் நடக்கவுள்ள மாநிலங்களின், காங்., பொதுச் செயலர்கள் உட்பட சிலருடன், ராகுல் தனித்தனியாக ஆலோசனை நடத்தினார்.இவ்வாறு காங்., மூத்த தலைவர் கூறினார்.


தொடர்புடைய செய்திகள்:


Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (8)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
JALRA JAYRAMAN - chennai,இந்தியா
30-ஜூன்-201310:22:17 IST Report Abuse
JALRA JAYRAMAN காங்கிரஸ் கட்சி அமைப்புகளில் பெண்களுக்கு 50 சதவீத பிரதிநிதித்துவம்: ராகுல் நல்லது ஆனால் பிரச்சினை என்னவென்றால் கட்சியில், கட்சிகளில் உள்ளவர்கள் தங்கள் வீட்டு பெண்களுக்கு பிரதிநிதித்துவம் கொடுத்துவிடுகின்றனர்,
Rate this:
1 members
0 members
5 members
Share this comment
Cancel
Pandian Reddiar - Chennai,இந்தியா
30-ஜூன்-201309:51:43 IST Report Abuse
Pandian Reddiar அறிவிப்பு பெயரளவில் தானா? அல்லது செயளிலுமா?
Rate this:
1 members
1 members
1 members
Share this comment
Cancel
kumaresan.m - hochimin ,வியட்னாம்
30-ஜூன்-201309:05:25 IST Report Abuse
kumaresan.m " முன்பு கோஷ்டி சண்டைகளில் பொது கூட்டங்களில் கதர் சட்டைகள் தான் கிழித்தது இப்பொழுது கூடுதலாக சேலைகள் கிழிய வாய்ப்புகள் உள்ளது அவ்வளவு தான் வித்தியாசம் வேறொன்றும் அதிசயம் நடந்து விடாது "
Rate this:
1 members
0 members
0 members
Share this comment
Cancel
kumaresan.m - hochimin ,வியட்னாம்
30-ஜூன்-201309:02:30 IST Report Abuse
kumaresan.m " காங்கிரஸ் கட்சியில் 50% பெண்களுக்கு பிரதிநித்துவம் தருவதில் தவறு இல்லை ....ஆனால் பிரதிநித்துவ பெண்களின் கணவன்மார்களால் கோஷ்டி பூசல்கள் தான் அதிகரிக்க செய்யுமே தவிர குறையவே வாய்ப்பு இல்லை "
Rate this:
1 members
0 members
0 members
Share this comment
Cancel
பி.டி.முருகன் - திருச்சிராப்பள்ளி ,இந்தியா
30-ஜூன்-201306:47:17 IST Report Abuse
பி.டி.முருகன்    50:50 பிஸ்கட் தான் ஞாபகம் வருகிறது.
Rate this:
3 members
0 members
5 members
Share this comment
Cancel
villupuram jeevithan - villupuram,இந்தியா
30-ஜூன்-201306:19:10 IST Report Abuse
villupuram jeevithan பிரியங்காவை அகில இந்திய காங்., கமிட்டி பொதுச் செயலாளர் ஆக ஆக்கிவிடுங்கள் 12ல் 2 பேர் என்று ஆகிவிடுமே? அதற்கு தான் அடி போடுகிரீரோ?>
Rate this:
3 members
0 members
4 members
Share this comment
Cancel
villupuram jeevithan - villupuram,இந்தியா
30-ஜூன்-201306:10:04 IST Report Abuse
villupuram jeevithan திட்டம் போட்டு எல்லா கார்பொரேட்களையும் தனது விளம்பரங்களில் வரும் பாத்திரத்திற்கு ராகுல் என்று பெயர் வைக்கச் சொல்லி விளம்பரம் தேடுகிறீர். இப்போது இளைஞர்கள் எத்தனை விளம்பரங்களில் எந்தெந்த விளம்பரங்களில் உங்கள் பெயர் வருகிறது என்று எண்ணிக் கொண்டிருக்கின்றனர்?
Rate this:
3 members
0 members
6 members
Share this comment
Cancel
யதார்தவாதி வெகுஜன விரோதி - சிராப்பள்ளி,இந்தியா
30-ஜூன்-201305:55:59 IST Report Abuse
யதார்தவாதி வெகுஜன விரோதி இன்னும் இரண்டு தலைமுறைகளுக்கு பின் யாராவது ஒரு தொண்டரின் நாட்குறிப்பு, வெளியாகமால் பார்த்து கொள்வதும் நலம்.
Rate this:
2 members
0 members
3 members
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
( OR )Login with
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.