| E-paper

 
Advertisement
மின் உற்பத்தி அதிகரிப்பு: மின்வெட்டும் நீட்டிப்பு
Advertisement
 
 
Advertisement
 
 
எழுத்தின் அளவு:
Advertisement

மாற்றம் செய்த நாள்

30 ஜூன்
2013
06:28
பதிவு செய்த நாள்
ஜூன் 30,2013 00:13

சென்னை:தமிழகத்தின் மொத்த மின் உற்பத்தி, நேற்று முன்தினம், 11,325 மெகா வாட்டை தாண்டியது. தமிழகத்தின் மொத்த மின் உற்பத்தி திறன், 18,154 மெகா வாட். இதில், காற்றாலைகளின் பங்களிப்பு, 7,134 மெகா வாட். ஆண்டுதோறும், ஜூன் முதல், செப்., வரை, அதிக அளவில், காற்றாலை மின்சாரம் கிடைக்கும். காற்றாலை மூலம், ஏப்ரல் மாதம், 27 கோடி யூனிட் மின்சாரமும், மே மாதம், 144 கோடி யூனிட் மின்சாரமும், உற்பத்தி செய்யப்பட்டுள்ளது. ஜூன் முதல் வாரம் முதல், தென்மேற்குப் பருவ மழை தீவிரம் அடைந்து உள்ளது. இதனால், காற்றாலை மின் உற்பத்தியும் அதிகரித்திருக்கிறது. கடந்த ஒரு வாரத்திற்கு மேலாக, காற்றாலை மூலம், தினசரி, 3,000 முதல், 3,400 மெகா வாட் மின்சாரம் கிடைக்கிறது. காற்றாலை, அனல் மின் உற்பத்தி நிலையங்கள், முழு அளவில் இயங்குவதால், மாநிலத்தின் மொத்த மின் உற்பத்தி, 11,325 மெகா வாட்டை தாண்டியது. இருப்பினும், சென்னை உட்பட, பெரும்பாலான இடங்களில், பகல் நேரத்தில், அறிவிக்கப்பட்ட மின் தடையை நீக்கி விட்டு, இரவு நேரத்தில், மின் தடை செய்யப்படுகிறது. மின் வாரியத்தின் இந்த நடவடிக்கைக்கு, பொதுமக்கள் கடும் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர். இதற்கான தீர்வு எப்போது கிடைக்கும் என்றும் அறிவிக்கப்படவில்லை.




Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (1)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
kumaresan.m - hochimin ,வியட்னாம்
30-ஜூன்-201310:01:39 IST Report Abuse
kumaresan.m " இன்னும் அரிசியே வாங்கவில்லை எப்படி சோறு கிடைக்கும் ???
Rate this:
0 members
0 members
1 members
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.