ஓய்வு பெற்றால் ஓய்ந்து கிடக்க வேண்டுமா?
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement
எழுத்தின் அளவு:
Advertisement

மேடவாக்கம் பிரதான சாலை, பல்லாவரம் துரைப்பாக்கம் ரேடியல் சாலை சந்திப்பு, பள்ளிக்கரணை, மடிப்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் சாலையின் நடுவே போக்குவரத்து போலீசார் போல, சீருடை அணிந்த முதியவர் ஒருவர் போக்குவரத்தை சீர்செய்யும் பணியில் ஈடுபடுவதை காணலாம்.அவரின் சைகைக்கு கட்டுப்பட்டு வாகனங்கள் நிற்கின்றன; செல்கின்றன. உரிமம் பெற முடியாத வயதில் வாகனங்களை ஓட்டி வரும் சிறார்கள், இருசக்கர வாகனத்தில் அளவுக்கு அதிகமான நபர்களோடு வருவோரை லாவகமாக ஓரம் கட்டுகிறார்.சிறார்களுக்கு தேவையான அறிவுரை வழங்கி, அவர்களின் பெற்றோரை வரவழைத்து வாகனத்தை ஒப்படைக்கிறார். அவரின் கனிவான பேச்சுக்கு கட்டப்பட்ட பலர் மன்னிப்பு கேட்டு செல்கின்றனர்.அவர் மடிப்பாக்கத்தை சேர்ந்த பராமனந்தன், 61.அவரிடம் பேசியதில் இருந்து...

எப்போது முதல் இந்த சேவையில் ஈடுபட்டு வருகின்றீர்கள்?
தனியார் நிதி நிறுவனம் ஒன்றில், 33 ஆண்டுகள் மூத்த உதவியாளராக பணிபுரிந்தேன். 2010ம் ஆண்டு ஓய்வு பெற்ற பின், போக்குவரத்தை சீர்செய்யும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறேன்.

இந்த எண்ணம் எப்படி உங்களுக்கு வந்தது?
ஓய்வு பெற்று விட்டால், வீட்டில் முடங்கி கிடக்க வேண்டும் என்ற அவசியம் கிடையாது. அதேநேரம் சுயநலத்திற்காக பொருள் ஈட்ட வேண்டும் என்றும் நினைக்க கூடாது.
ஓய்வு பெறும் வரை குடும்பத்திற்கு உழைக்க வேண்டும். ஓய்வு பெற்ற பின் நமக்கு ஓய்வு கிடைக்கும் வரை நாட்டுக்காகவும், மக்களுக்காகவும் உழைக்க வேண்டும். இதுதான் என் லட்சியம். அதை நோக்கி தான் பயணிக்கிறேன்.

இதில் உங்கள் அன்றாட பணிகளை எப்படி வகுத்து கொள்கின்றீர்கள்?
கடந்த மூன்று ஆண்டுகளாக இந்த சேவையில் ஈடுபட்டு வருகிறேன். தினமும் காலை, 8:00 மணி முதல் மதியம், 12:00 மணி வரையிலும், மாலை, 4:00 மணி முதல் இரவு, 9:00 மணி வரையிலும் போக்குவரத்து சீரமைப்பில் ஈடுபடுவேன்.இடைப்பட்ட நேரத்தில் அதிவேகமாக வாகனம் ஓட்டும் பெண்கள், அளவுக்கு அதிகமான நபர்களை ஏற்றி வருவோர், உரிமம் பெற வயதில்லாமல் வாகனங்களை ஓட்டி வரும் சிறார்களை நிறுத்தி, என்னால் முடிந்த அளவு அறிவுரை வழங்குவேன்.என் சேவைக்கு அங்கீகாரம் கிடைக்கும் வகையில், போக்குவரத்து போலீசாருக்கான சீருடை வழங்கப்பட்டுள்ளது.

குடும்ப தேவையை எப்படி சமாளிக்கின்றீர்கள்?
என் குடும்பம் வறுமையில் தான் வாடுகிறது. ஓய்வூதியம் இல்லை. வாடகை வீடு என, தனிப்பட்ட முறையில் பல்வேறு பிரச்னைகள் உள்ளன. அப்படி இருந்தும் மக்கள் சேவை என்ற லட்சியத்தை விடுவதில்லை.நான் செய்யும் பணிக்கு ஊதியமும் எதிர்ப்பார்க்கவில்லை. இருப்பினும் போலீசார் கொடுப்பதை வாங்கி கொள்வேன்.எனக்கு அரசு உதவி புரிய நினைத்தால், பஸ் பாஸ் வழங்கினால் மகிழ்வுடன் ஏற்றுக் கொள்வேன். என் உடல் தளர்ந்து போகும் வரை சமூக சேவையில் ஈடுபடுவேன்.

AdvertisementAdvertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (6)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
S Rama(samy)murthy - karaikudi,இந்தியா
30-ஜூன்-201316:16:57 IST Report Abuse
S Rama(samy)murthy உங்களுக்கு இறைவன் அருள் கிடைக்கும் .வாழ்க பல்லாண்டு .சுப ராம காரைக்குடி
Rate this:
Share this comment
Cancel
suresh - Singapore  ( Posted via: Dinamalar Android App )
30-ஜூன்-201315:15:47 IST Report Abuse
suresh great father பாராட்டுக்கள்
Rate this:
Share this comment
Cancel
Aravind - mysore  ( Posted via: Dinamalar Android App )
30-ஜூன்-201311:25:30 IST Report Abuse
Aravind சிறந்த முன்னுதாரணம் அரசு இது போன்ற நல்ல மனிதர்களை ஊக்குவிக்க வேண்டும்
Rate this:
Share this comment
Cancel
pragash - coimbatore  ( Posted via: Dinamalar Android App )
30-ஜூன்-201307:36:00 IST Report Abuse
pragash பாராட்டுக்குரிய முயற்சி வாழ்த்துக்கள்
Rate this:
Share this comment
Cancel
g.s,rajan - chennai ,இந்தியா
30-ஜூன்-201306:24:39 IST Report Abuse
g.s,rajan ஒய்வு பெற்ற பிறகு வீட்டில் ஆனந்தமாக இருந்து கொண்டு மற்றவர்களைப்போல் இந்த உதவாக்கரை தொலைக்காட்சி மெகாத்தொடர்களைப்பார்த்து பொன்னான நேரத்தை வீணடிக்காமல் வெட்டியாக பொழுதைப் போக்காமல் மக்களுக்கு சேவை செய்யும் திரு .பரமானந்தத்தை எவ்வளவு பாராட்டினாலும் தகும் . ஜி.எஸ்.ராஜன் சென்னை .
Rate this:
Share this comment
Cancel
subbarayan s - Chennai,இந்தியா
30-ஜூன்-201301:33:30 IST Report Abuse
subbarayan s திரு பரமானந்தம் அவர்களின் சேவை மிக உயர்ந்த சேவை. சாலை விபத்திலிருந்து பல பேரை காப்பாற்றும் சேவை. வறுமையிலும் முதுமையிலும் மக்கள் சேவை வேகாத வெய்யிலிலும் வகன புகையிலும் அவர் நாள் முழுதும் நின்று செய்யும் சேவையை பாராட்ட வார்த்தைகள் இல்லை.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.
மேலும் செய்திகள்