நாற்காலி ஆசையில் மக்களை தவிக்க விட்டவர்கள் - அசோகமித்திரன்
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement
எழுத்தின் அளவு:
Advertisement

இத்தாலியில் முசோலினி சர்வாதிகாரியாக இருந்த நாட்களில், ரயில் வண்டிகள் உரிய நேரத்தில் வரும், போகும் என்று கிண்டலாக சொல்வர். ஆனால், ரயில்கள் உரிய நேரத்தில் வருவதும் போவதும் மிக முக்கியம். அது "எமர்ஜென்சி' நாட்களில் நடந்தது. சாலை விதிகள் அனுசரிக்கப்பட்டன. அலுவலகங்களும், வங்கிகளும் உரிய நேரத்தில் இயங்கின. யாரும் இப்படிச் செய்யுங்கள் அப்படிச் செய்யுங்கள் என்று உத்தரவிடவில்லை. ஆனால் பணியாளர்களாக இப்படி நடந்து கொண்டனர். சற்று மிகையாகவே இதைச் செய்தனர்.நானறிந்து ஒரு ரயில்வே எழுத்தர் உரிய நேரத்தில் அலுவலகத்தை அடைந்து விட்டார். காலை பத்து பத்துக்கு, ஆஜர் அட்டவணை, அதிகாரி அறைக்குப் போய் விடும்.எழுத்தர் ஐந்தாவது மாடிக்குப் போக வேண்டும். லிப்ட் வேலை செய்யவில்லை. அவர், ஐந்து மாடிப்படிகளை ஏறிச் சென்றார்.அப்போதுதான், வருகைப் பதிவு அட்டவணை உள்ளே எடுத்துச் செல்லப்பட்டது. நாற்காலியில் உட்கார்ந்தவர் எழுந்திருக்கவில்லை. அவர் எழுந்திருக்கவே இல்லை. இது சென்னையில் நடந்தது என்று பலரும் அறியமாட்டார்கள்.


வாழ்வை தொலைத்தவன்:

உண்மையான விபரீதங்களை, "ஜன சங்' நண்பர்கள் அனுபவித்தனர். அன்று தமிழகத்தில் அக்கட்சி பெரிய அளவில் இல்லை. ஓர் இளைஞன் போலீஸ் காவலுக்குப் பிறகு, சித்த சுவாதீனத்தை இழந்தான் என்று, என் உறவினர்களே கூறியிருக்கின்றனர். பத்திரிகைத் தணிக்கை சற்று மிகையாகத்தான் இருந்தது. அபாயம், சட்ட மீறல் கற்பனையில்தான் அதிகம் இருந்தது. அதிகாரிகள் சற்று மிகுதி யாக 'எமர்ஜென்சியைப்' புகுத்தினர் என்று ஒப்புக்கொள்ளப்பட்டது.ஆனால் நடந்தது நடந்ததுதானே. போன உயிர் திரும்ப வராது. சிதைந்த மூளை சிதைந்ததுதான். அந்த இளைஞன் ஆண்டு கணக்கில் தூக்கத்தில் அலறிக்கொண்டிருந்தான் என்று சொன்னார்கள். "எமர்ஜென்சி' காலத்தில், நான் இரு முறை டில்லி செல்ல வேண்டிஇருந்தது. நகரமே கதிகலங்கிஇருந்தது. நகரை அழகுபடுத்துவதாக, சாலையோரக் குடியிருப்புகள் அகற்றப்பட்டு விட்டன. அந்த மக்கள் என்ன செய்வார்கள்? பெரும்பாலும் வீட்டு வேலை செய்பவர்கள். அவர்களை 20 மைல்கள் தள்ளிப் போகச் செய்தாகிவிட்டது."துர்க்மேன் கேட்' பகுதி இடித்து தள்ளப்பட்டாயிற்று. அதற்குக் காரணமான ஒருவர், இன்று மத்திய மந்திரியாக இருக்கிறார்.அன்று ஓர் அலுவலகத்துக்கு என்னை அழைத்துச் சென்றார் நண்பர். ஓரிடத்தில் காரை நிறுத்திய பிறகு, நாங்கள் உள்ளே சென்றோம். திரும்பி வந்த போது, காரைக் காணவில்லை; அது பாதுகாப்புக்கு இடைஞ்சல் என்று, நான்கு போலீஸ்காரர்கள் தூக்கி, ஒரு மூலையில் போட்டிருந்தனர். பள்ளத்திலிருந்து வண்டியைக் கிளப்பவே முடியவில்லை; திண்டாடிப் போய்விட்டோம். ஆனால் மிகவும் வேதனைக்குரியது கட்டாயக் குடும்பத் தடை. மிகச் சாதாரண அலுவலகத்துக்கு செல்லவும் கூட தனி அனுமதி சீட்டு வேண்டும்.ஒரு முறை ஓவியர் ஆறுமுகத்தைப் பார்க்கப் போனேன். உள்ளேவிடவில்லை. அதிகாரிகளாகவே இந்தப் பைத்தியக்காரத்தனத்துக்கு வழி வகுத்தனர்.


தோல்வி:

"எமர்ஜென்சி' முடிந்து, தேர்தல்களும் முடிந்த பிறகு, வட இந்தியாவில் பஞ்சாபிலிருந்து வங்காளம் வரை "எமர்ஜென்சி' ஆட்சி நடத்தியவருக்கு ஓரிடம் கூடக் கிடைக்கவில்லை.சென்னை, ராஜேஸ்வரி அரங்கத்தில் ஒரு பொதுக்கூட்டம். எள் போட்டால் கீழே விழாது. அன்று பல நண்பர்கள், ஏராளமான அதிகார அத்துமீறல்கள் பற்றித் தெரிவித்தனர்.குறிப்பாக, இளைஞர்கள் ஏராளமானோர், சித்ரவதைக்கு ஆளாகியிருக்கின்றனர். எதற்கு? அனேகமாக எல்லாத் தலைவர்களையும் கைது செய்தாகிவிட்டாயிற்று.அன்றைய பிரதமர், தன்னை ஜோன் ஆப் ஆர்க்காகவும், ஜான்சி ராணியாகவும் பாவித்துக் கொண்டு, டில்லி முழுதும் சுவரொட்டிகள்ஒட்டியதாக சொல்லப்பட்டது. இன்று நினைத்துப் பார்த்தால் நாற்காலிக்காக, ஒட்டு மொத்த மக்களையே தவிக்கச் செய்வார்களா என்று மலைக்க வேண்டியிருக்கிறது.ஒன்று கூற வேண்டும். ரயில் வண்டிகள் நேரப்படி ஓடின.

AdvertisementAdvertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (4)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
kumaresan.m - hochimin ,வியட்னாம்
30-ஜூன்-201316:40:20 IST Report Abuse
kumaresan.m " இந்திராகாந்தியை தான் இப்படி கூறுகிறார் "
Rate this:
Share this comment
Cancel
g.s,rajan - chennai ,இந்தியா
30-ஜூன்-201310:43:52 IST Report Abuse
g.s,rajan இப்ப நம்ம ஊருல எந்த ரயில் வண்டி சரியான நேரத்துக்கு வருது எல்லாமே லேட்தான் ,எப்பவும் ,காலதாமதம்தான்.அவர்களை யார் தட்டிக்கேட்பது ?ரயில் அட்டவணையில் குறிப்பிட்டுள்ள நேரத்திற்கா வருகிறது ,நிச்சயம் இல்லவே இல்லை .கேட்டால் பொல்லாப்புத்தான்.சட்டம் பேசுவார்கள் ,ஆனால் நுகர்வோம் சட்டம் அங்கு எடுபடவே செய்யாது ஆனால் மற்ற நாடுகளில் இப்படியா சேவைக் குறைபாடாக கருதி ரயில்வேத்துறையின் மீது வழக்குப்போட்டு உரிய நஷ்ட ஈட்டை ப் பெற்று விடுவார்கள் ஜி.எஸ்.ராஜன் சென்னை .
Rate this:
Share this comment
Pannadai Pandian - wuxi,சீனா
30-ஜூன்-201315:02:25 IST Report Abuse
Pannadai Pandianஎமெர்ஜென்சி எனக்கு ரொம்ப மகிழ்ச்சி அளித்தது. திமுக செய்த அராஜகத்துக்கு முட்டிக்கு முட்டி தட்டி ரொட்டி தட்டினார்கள். டீ வாங்கிவர சொன்ன திமுக கரைவேட்டிகளை அதே போலீஸ்காரர்களின் கையால் விலங்கு மாட்டி ரோட்டில் இழுத்து வந்தது மனதுக்கு நிம்மதியை தந்தது....
Rate this:
Share this comment
Cancel
K.Sugavanam - Sengkang,சிங்கப்பூர்
30-ஜூன்-201307:37:48 IST Report Abuse
K.Sugavanam எமெர்ஜென்சி இந்திய ஜனநாயக வரலாற்றில் ஒரு கரும்புள்ளி.அதுவே சி பி ஐ இன் தனித்துவத்தை குலைத்தது.ஆளும் அரசின் ஏவலாள் ஆக்கியது.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.
மேலும் செய்திகள்