தைலாபுரம் வந்தார் ராமதாஸ்| Dinamalar

அரசியல் செய்தி

தமிழ்நாடு

தைலாபுரம் வந்தார் ராமதாஸ்

Added : ஜூன் 30, 2013
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

திண்டிவனம் : உடல் நிலை பாதித்து, சென்னை மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட பா.ம.க.,நிறுவனர் ராமதாஸ் ஒன்றரை மாதத்திற்கு பின் தைலாபுரம் திரும்பினார். கடந்த ஏப்ரல் 25ம் தேதி மகாபலிபுரத்தில் நடந்த வன்னியர் சங்க சித்ரா பவுர்ணமி விழாவின் போது மரக்காணத்தில் கலவரம் ஏற்பட்டது. அதற்கு நீதி விசாரணை கோரி ஏப்., 30ம் தேதி பா.ம.க.,நிறுவனர் ராமதாஸ் தடையை மீறி விழுப்புரத்தில் ஆர்ப்பாட்டம் செய்ய முயன்றார்.
அவரை போலீசார் கைது செய்து திருச்சி சிறையில் அடைத்தனர். மே 13ம் தேதி ஜாமினில் விடுதலையான அவர், அன்று மாலை தைலாபுரம் வந்தார். அன்றிரவு அவருக்கு மூச்சு திணறல் ஏற்பட்டு, சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு தீவிர சிகிச்சைக்கு பின் அறுவை சிகிச்சை நடந்தது. மே 28ம் தேதி மருத்துவமனையிலிருந்து டிஸ்சார்ஜ் ஆனார். அதிலிருந்து சென்னையில் ஓய்விலிருந்தார்.
இந்நிலையில், ராமதாஸ் நேற்று தைலாபுரம் வந்தார். அவருக்கு கட்சியினர் விழுப்புரம் மாவட்ட எல்லையான தொழுப்பேடு டோல்கேட் அருகே மாலை 6.45 மணிக்கு வரவேற்பு அளித்தனர். பின், ராமதாஸ் தைலாபுரம் தோட்டத்திற்கு சென்றார்.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை