"கூடங்குளத்தில் மின் உற்பத்தி எந்த நேரத்திலும் துவங்கலாம்'| Dinamalar

பொது செய்தி

இந்தியா

"கூடங்குளத்தில் மின் உற்பத்தி எந்த நேரத்திலும் துவங்கலாம்'

Updated : ஜூன் 30, 2013 | Added : ஜூன் 30, 2013 | கருத்துகள் (5)
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement
"கூடங்குளத்தில் மின் உற்பத்தி எந்த நேரத்திலும் துவங்கலாம்'

கோல்கட்டா: "கூடங்குளம் அணுமின் நிலையத்தின் முதல் பிரிவு, எந்த நேரத்திலும் செயல்படத் துவங்கலாம்,'' என, அணுசக்தி விஞ்ஞானியும் மத்திய அரசின் ஆலோசகருமான சிதம்பரம் கூறினார்.


சிதம்பரம் மேலும் கூறியதாவது: கூடங்குளம் அணுமின் நிலையத்தின் முதல் பிரிவில், அணுமின் கழகம் நடத்திய சோதனைகளில், அணுசக்தி கட்டுப்பாட்டு வாரியம் திருப்தி அடைந்து உள்ளது. அதனால், அணுமின் நிலையத்தின் முதல் பிரிவு, எந்த நேரத்திலும் செயல்படத் துவங்கலாம். கூடங்குளம் அணுமின் நிலையம் பாதுகாப்பற்றது என்ற கருத்து தவறானது. அது முழுமையான பாதுகாப்புடன் உள்ளது. கூடங்குளம் அணுமின் நிலையத்தின் பாதுகாப்பு அம்சங்கள் குறித்து, சாதாரண மக்கள் புரிந்து கொள்வது கஷ்டம். மொத்தத்தில், அணுமின் சக்தி பாதுகாப்பானது மற்றும் சுற்றுச் சூழலுக்கு உகந்தது. கார்பன் டை ஆக்சைடால், சுற்றுச் சூழல் மாசுபடுவதைத் தடுக்க, அணுமின் சக்தி மிகச்சிறந்த பதிலி யாகும். உலக நாடுகளில், தற்போது, 66க்கும் மேற்பட்ட அணு உலைகள் உள்ளன; அவற்றில், ஏழு உலைகள் இந்தியாவில் இருக்கின்றன. நம்நாட்டில் அணுமின் நிலையங்கள் பாதுகாப்பாக இருக்க தேவையான, அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளன. இவ்வாறு சிதம்பரம் கூறினார்.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து (5)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Natarajan Iyer - chennai,இந்தியா
30-ஜூன்-201318:35:01 IST Report Abuse
Natarajan Iyer மோடி வந்துதான் கூடங்குளம் மின் உற்பத்தியை துவக்கி வைப்பார் என்று தோன்றுகிறது.
Rate this:
Share this comment
Cancel
Pandian Reddiar - Chennai,இந்தியா
30-ஜூன்-201310:24:42 IST Report Abuse
Pandian Reddiar விரைவில் என்றால் இன்னும் எத்தனை வருடத்தில்????
Rate this:
Share this comment
Cancel
Bala Sreenivasan - Singapore,சிங்கப்பூர்
30-ஜூன்-201308:42:00 IST Report Abuse
Bala Sreenivasan அரசியல் கட்சிக் கூட்டங்களில் முக்கிய தலைவர் பேச்சுக்காக வரும் மக்கள் கலைந்து போகாதிருக்க அவ்வப்போது "தலைவர் வந்து கொண்டிருக்கிறார், எந்நேரமும் இங்கு வந்துவிடுவார் என்று எதிர்பார்க்கப் படுகிறது வந்து கொண்டே இருக்கிறார் இதோ வரப்போகிறார்" என்று அறிவுப்புகள் வந்த வண்ணம் இருக்கும். ஆனால் தலைவர் லேசில் வந்துவிடமாட்டார் அது போலதான் கூடங்குளம் பற்றிய இந்த லேட்டஸ்ட் அறிவிப்பும் கோடை முடியப் போகிறது அடுத்து மழைக் காலமும் வந்து விடும், மின் சக்தி பயனீடு குறைந்துவிடும் இருக்கும் மின்வெட்டு ஓரளவு பழகிவிட்டதால் அடுத்த கோடை வரை வண்டி இப்படியே ஓடிவிடும். சும்மா சும்மா அணு உலை செயல் பாடு பற்றி அறிக்கை விடாதீங்க. கேட்டுக் கேட்டு போரடிச்சுப் போச்சு நடப்பது கேவலமான அரசியல். எங்களுக்கு அது கூடவா புரியாது?
Rate this:
Share this comment
Cancel
KarlMarx - Chennai,இந்தியா
30-ஜூன்-201308:19:16 IST Report Abuse
KarlMarx நாராயண சாமிக்கு மாற்றாக சிதம்பரம் எப்போ மாறிநாருன்னு தெரியல.... ஆளாளுக்கு பேசி, நீங்க ஓபன் பண்ணுறதுக்குள்ள, அந்த அணு உலையோட காலமே முடிஞ்சு போயிரும் போல இருக்கு...
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை