மாற்றுக் கொள்கைகளுக்காக இடதுசாரிகள் மாநாடு : பிரகாஷ் காரத் பேச்சு| Dinamalar

அரசியல் செய்தி

தமிழ்நாடு

மாற்றுக் கொள்கைகளுக்காக இடதுசாரிகள் மாநாடு : பிரகாஷ் காரத் பேச்சு

Added : ஜூன் 30, 2013
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement
மாற்றுக் கொள்கைகளுக்காக இடதுசாரிகள் மாநாடு  : பிரகாஷ் காரத் பேச்சு

மதுரை: ""மாற்றுக் கொள்கைகளை மக்களிடம் கொண்டு செல்வதற்கு திட்டமிட, டில்லியில், ஜூலை 1 ல், இடதுசாரிகள் மாநாடு நடக்கிறது,'' என மார்க்சிஸ்ட் பொதுச்செயலாளர் பிரகாஷ் காரத் பேசினார்.

மதுரையில் நடந்த கூட்டத்தில், அவர் பேசியதாவது: இயற்கை எரிவாயு விலையை, 2 மடங்கு உயர்த்த மத்திய அமைச்சரவை முடிவு செய்துள்ளது. இதனால், கோதாவரி ஆற்றுப்படுகையில், இயற்கை எரிவாயுவை உறிஞ்சும் கார்ப்பரேட் நிறுவனம் பயனடையும். இயற்கை எரிவாயு மூலம் மின்சாரம், உரம் உற்பத்தி செய்யப்படுகிறது. அவற்றின் விலையும், 2 மடங்கு உயரும். பொதுப்போக்குவரத்து கட்டணம் உயரும். அரசின் முடிவை பா.ஜ., எதிர்க்கவில்லை. எண்ணெய் நிறுவனங்கள் லாபம் ஈட்டுவதற்காக, பெட்ரோல் விலை 1 மாதத்தில், 5 ரூபாய் உயர்த்தியுள்ளனர். சாதாரண மக்கள் வாழ்வுரிமைக்காக போராடினால், "அரசிடம் பணம் இல்லை' என்கின்றனர். பெரிய நிறுவனங்கள் பயனடையும் வகையில், மத்திய பட்ஜெட்டில், 5 லட்சம் கோடி ரூபாய் சலுகை வழங்கியுள்ளனர். சில்லரை வர்த்தகத்தில் அன்னிய முதலீட்டை அனுமதித்தால், லட்சக்கணக்கானோர் பாதிக்கப்படுவர். வங்கி, நிதித்துறையில் அன்னிய முதலீட்டை எதிர்க்கிறோம். காங்., மற்றும் பா.ஜ., வுக்கு இடையே பொருளாதார கொள்கையில் வேறுபாடு இல்லை. உணவு, கல்வி, சுகாதாரம், வேலைவாய்ப்பிற்கான உரிமையை பெற்றுத்தரும் கொள்கை தேவை. மாற்றுக் கொள்கைகளை, மக்களிடம் கொண்டு செல்வதற்கு திட்டமிட, டில்லியில் இடதுசாரிகள் மாநாடு நடக்கிறது, என்றார்.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை