பயிற்சி நிறைவு பெற்ற மாணவர் அணிவகுப்பு| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

பயிற்சி நிறைவு பெற்ற மாணவர் அணிவகுப்பு

Added : ஜூன் 30, 2013
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement
பயிற்சி நிறைவு பெற்ற மாணவர் அணிவகுப்பு

மதுரை: மதுரை அருப்புக்கோட்டை ரோடு ஆர்.எல்.இன்ஸ்டிடியூட் ஆப் நாட்டிக்கல் சயின்ஸில், பயிற்சி நிறைவு பெற்ற மாணவர்களின் அணிவகுப்பு நிகழ்ச்சி நடந்தது. அணிவகுப்பு மரியாதையை ஏற்று, மும்பை சீயர்லேண்ட் மேனேஜ்மென்ட் சர்வீஸ் இயக்குனர் கேப்டன் ஷியாம் ஜெய்ராம் பேசியதாவது: கப்பல் தொழிற்சாலையைப் பொறுத்தவரை, முதுநிலை "ராங்கிங்' நிலையில், திறமை வாய்ந்தவர்கள் பற்றாக்குறையாக உள்ளது. இந்த பற்றாக்குறை, துறை சார்ந்த வளர்ச்சியை கட்டுப்படுத்தி விடும். ஆர்.எல்.இன்ஸ்டிடியூட் நிறுவனம், நிறைய பட்டதாரிகளை உருவாக்கி வருகிறது. இதன் மூலம் தற்போதைய மனிதவள பற்றாக்குறை, குறைக்கப்படுகிறது. மாணவர்களுக்கு நல்ல பயிற்சி அளித்து, தகுதியான அலுவலர்களை எதிர்காலத்திற்காக உருவாக்கி வருகிறது, இந்த கல்லூரி. கடல்சார்ந்த பணிவாய்ப்பு முக்கியமானதும், அனுபவித்து செய்யக்கூடிய பணியாகும். மாணவர்கள் தற்போது முதற்கட்ட பயிற்சியை முடித்துள்ளார்கள். அடுத்து தொழில்நுட்ப அறிவு பெற வேண்டும், என்றார். துணை முதல்வர் (இன்ஜினியரிங்) சந்திரசேகரன் வரவேற்றார். முதல்வர் சுப்ரமணியன், ஆலோசகர் பாலகிருஷ்ணன், கேப்டன் நம்பியார் பங்கேற்றனர்.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை