மழை குறைந்ததால் மூணாறில் நிம்மதி| Dinamalar

இந்தியா

மழை குறைந்ததால் மூணாறில் நிம்மதி

Updated : ஜூன் 30, 2013 | Added : ஜூன் 30, 2013
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

மூணாறு: மூணாறில் பெய்த கன மழையால், கடந்த வராம் ஏற்பட்ட சேதங்களை கண்டு, அச்சமுற்ற மக்கள், கடந்த 2 நாட்களாக மழை குறைந்ததால், நிம்மதியடைந்துள்ளனர். மூணாறில் கடந்த வாரம் பெய்த கன மழையில், மண் சரிவு ஏற்பட்டு, 3 பேர் பலியாகினர். ஏராளமான வீடுகளும், விவசாய நிலங்களும், ரோடுகளும் சேதமடைந்தன. பல பகுதிகளில் போக்குவரத்து தடைபட்டது. மின்சாரம் துண்டிக்கப்பட்டு, பல பகுதிகள் இருளில் மூழ்கின. இதனால், பொது மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. தொடர்ந்து மழை பெய்தால், மலைப்பகுதியில் குடியிருப்புகள் கட்டப்பட்டுள்ள இடங்களில், மண் சரிவு ஏற்படும் அபாயம் இருப்பது குறித்து வருவாய் துறை மற்றும் போலீசார் ஆய்வு நடத்தினர். இதனால் பொதுமக்களிடையே அச்சம் ஏற்பட்டு, நிம்மதி இழந்தனர். இந்நிலையில், மழை படிப்படியாக குறைந்து வருகிறது. கடந்த 28ம் தேதி, 20.33 மி.மீ.,பெய்த மழை,நேற்று முன்தினம் 10.77 மி.மீ., பெய்தது.நேற்று பகலில் வெயில் காணப்பட்டது.பிறகு மேக மூட்டத்துடன் சிறு மழை பெய்தது. கடந்த 2 நாட்களாக மழை குறைந்ததால், மக்கள் நிம்மதி அடைந்துள்ளனர்.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை