E-paper| Mobile Apps

iPad

iPad E-paper

iPhone

Android

Android Tablet

Windows

Windows 8

Blackberry

bbicon OS 10

Mobile Election

| Get Font | Site Map |  RSS Feed
Advertisement
நெசவாளருக்கு 16% ஊதிய உயர்வு ஒப்புதல் :முத்தரப்பு பேச்சுவார்த்தையில் முடிவு
Advertisement
 
 
Advertisement
 
 
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

30 ஜூன்
2013
02:09

கும்பகோணம்: கும்பகோணத்தில் தனியார் கைத்தறி நெசவுத் தொழிலாளர்களுக்கு கூலி உயர்வு, போனஸ் உள்ளிட்ட கோரிக்கைகள் தொடர்பாக பேச்சுவார்த்தை நடந்தது.
தஞ்சை, நாகை, திருவாரூர், அரியலூர், பெரம்பலூர், கடலூர் ஆகிய மாவட்டங்களில் தனியார் கைத்தறி நிறுவனங்கள் இயங்கி வருகிறது. இவற்றிற்கு மையமாக கும்பகோணம் இருந்து வருகிறது. இங்கு மட்டும், 50 ஆயிரம் தனியார் கைத்தறி நெசவு கூடங்கள் செயல்படுகிறது. இவற்றில், இரண்டு லட்சம் நெசவு தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர்.
கும்பகோணம் பட்டு ஜவுளி கைத்தறி உற்பத்தியாளர்களிடம் பணியாற்றும் நெசவுத்தொழிலாளர்கள், 40 சதவீதம் கூலி உயர்வு வேண்டும் என, கடந்த ஓராண்டாக கோரிக்கை விடுத்து வந்தனர். ஆனால், முடிவு ஏற்படாமல் இருந்து வந்தது.
சமீபத்தில், கும்பகோணம் ஆர்.டி.ஓ., அலுவலகத்தில், ஆர்.டி.ஓ., சங்கரநாராயணன் தலைமையில் கூலி உயர்வு தொடர்பான முத்தரப்பு கூட்டம் நடந்தது.
கூட்டத்துக்கு கும்பகோணம் மேற்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் சுதா முன்னிலை வகித்தார். கூட்டத்தில், தொழிற்சங்கம் சார்பில், அதன் பிரதிநிதிகள் கூறுகையில், ""விலைஉயர்வு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. நெசவுத்தொழிலாளர்களுக்கு போதிய வருமானம் இல்லாத காரணத்தால் ஜவுளி கடை, ஹோட்டல், நகைகடைகளுக்கு வேலைக்குச் செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது. எனவே, நெசவாளர்களுக்கு, 40 சதவீத ஊதிய உயர்வையும், இரண்டு மாத ஊதியத்தை போனஸாக வழங்கவேண்டும்,'' என்றனர்.
இதற்கு உற்பத்தியாளர்கள் தரப்பில் பங்கேற்ற தலைவர் ராமசாமி, உப தலைவர் ராயா கோவிந்தராஜன் ஆகியோர் தெரிவிக்கையில், ""கைத்தறி பட்டு உற்பத்தியாளர்கள் நாளுக்கு நாள் பல சோதனைகளை சந்திக்க வேண்டியுள்ளது. ஒரு பக்கம் விசைத்தறிகளின் வரவால், கைத்தறியில் நெய்யப்படும் பட்டுச் சேலைகளும், பிற துணிகளும் விற்பனை மந்தமாக உள்ளது. கோரா, கச்சாப் பட்டு உள்ளிட்ட மூலப்பொருட்களின் விலை மாதந்தோறும் ஏறுமுகத்தில் இருப்பதால், கூலி உயர்வு குறைத்து தான் வழங்கப்படும். அதே நேரத்தில் போனஸ் என்பது நெசவாளர்களுக்கு உற்பத்தியாளர்களாக பார்த்துக் கொடுக்கும் அன்பளிப்புத் தொகை என்பதால், அதை கூட்டத்தில் விவாதிக்க முடியாது,'' என்றனர்.
தொடர்ந்து நடந்த கூட்டத்தில் தொழிலாளர் தரப்பில், 40 சதவீத ஊதிய உயர்வு கோரப்பட்டது. ஆனால், உற்பத்தியாளர்கள், 10 சதவீதம் மட்டுமே தரமுடியும் என்று பேசினர். அதன்பின் இழுபறியாக நடந்த பேச்சுவார்த்தையில், நெசவாளர்களுக்கு, 16 சதவீதம் ஊதிய உயர்வு வழங்க, உற்பத்தியாளர்கள் தரப்பில் ஒத்துக் கொள்ளப்பட்டது. இதை நெசவு தொழிலாளர் தரப்பில் பேசியவர்களும் ஏற்றுக் கொண்டனர்.
புதிய ஊதிய உயர்வு வரும், ஜூலை, ஒன்றாம் தேதி முதல் அமல்படுத்தப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டது. இதை நெசவாளர்களும் ஏற்றுக்கொண்டனர். இதையடுத்து முத்தரப்பு கூட்டம் முடிவுக்கு வந்தது.




Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
( OR )Login with
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.