பயிற்சி டாக்டர் மீதான தாக்குதலைகண்டித்து உள்ளிருப்பு போராட்டம்| Dinamalar

தமிழ்நாடு

பயிற்சி டாக்டர் மீதான தாக்குதலைகண்டித்து உள்ளிருப்பு போராட்டம்

Added : ஜூன் 30, 2013
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement

பெருந்துறை: பெருந்துறை மருத்துவக் கல்லூரி, பயிற்சி டாக்டர் தாக்கப்பட்டதை கண்டித்து, நேற்று பயிற்சி டாக்டர்கள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பெருந்துறை மருத்துவக் கல்லூரியின் பயிற்சி டாக்டர் சத்தியநேஷ், 23. இவரிடம், சிலேட்டர்புரத்தை சேர்ந்த செக்யூரிட்டி மணி, பயிற்சி டாக்டர்கள் டூவீலரை பயன்படுத்த கூடாது எனவும், டீனின் அனுமதியுடன் தான், டூவீலரை பயன்படுத்த வேண்டும் எனவும், தெரிவித்தார்.மேலும், சத்தியநேஷிடம், டூவீலர் ஒப்புதலுக்கான கடிதத்தை காண்பிக்குமாறு, செக்யூரிட்டி மணி கேட்டதால், இருவருக்குள்ளும் வாக்குவாதம் ஏற்பட்டது. வாக்குவாதம் முற்றியதால், பயிற்சி டாக்டர் சத்தியநேஷை, செக்யூரிட்டி மணி அடித்ததாக கூறப்படுகிறது.இதை கண்டித்து பயிற்சி டாக்டர்கள், 30 பெண்கள் உட்பட, 56 பேர் உள்ளிருப்பு வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர். தகவல் அறிந்ததும், டீன் டாக்டர் செலஸ்டீன்ராஜ் மனோகர், பயிற்சி டாக்டர்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார்.அப்போது, டூவீலர் பயன்படுத்த பயிற்சி டாக்டர்களை அனுமதிக்க வேண்டும். செக்யூரிட்டிக்கு அதிக அதிகாரம் வழங்குவதை, நிர்வாகம் நிறுத்த வேண்டும். மூன்று ஆண்டாக வழங்கப்படாத, 300 ரூபாய் உதவி தொகையை, சேர்த்து வழங்க வேண்டும். பயிற்சி டாக்டர்களுக்கு, உதவி தொகையை உயர்த்தி வழங்க வேண்டும், எனப்பல கோரிக்கையை, பயிற்சி டாக்டர்கள், டீனிடம் தெரிவித்தனர்.
கோரிக்கையை நிறைவேற்ற நடவடிக்கை எடுப்பதாக டீன் உறுதி அளித்ததன்பேரில், போராட்டத்தை கைவிட்டு, பயிற்சி டாக்டர்கள் பணிக்கு திரும்பினர்.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை