கட்சி ஆலோசனை கூட்டத்துக்கு முக்கியத்துவம்அமைச்சர்களுக்கு அ.தி.மு.க., தலைமை உத்தரவு| Dinamalar

தமிழ்நாடு

கட்சி ஆலோசனை கூட்டத்துக்கு முக்கியத்துவம்அமைச்சர்களுக்கு அ.தி.மு.க., தலைமை உத்தரவு

Added : ஜூன் 30, 2013
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

நாமக்கல்: லோக்சபா தேர்தலையொட்டி, கட்சி செயல்வீரர் மற்றும் தேர்தல் ஆலோசனைக் கூட்டத்துக்கு முக்கியத்துவம் அளித்து, அதில் பங்கேற்கும்படி, அமைச்சர்களாக உள்ள, அ.தி.மு.க., மாவட்டச் செயலாளர்களுக்கு, அக்கட்சித் தலைமை உத்தரவிட்டுள்ளது.லோக்சபா தேர்தலுக்கு, சில மாதங்களே உள்ள நிலையில், அனைத்து அரசியல் கட்சியினரும், அதற்கான ஆயுத்தப் பணியில், தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். அ.தி.மு.க.,வைப் பொறுத்தவரை, அந்தந்த மாவட்டத்தில், நகர, ஒன்றிய, பேரூர் கழக தேர்தல் ஆலோசனைக் கூட்டம், செயல்வீரர்கள் கூட்டம் நடத்தப்பட்டு வருகிறது.கூட்டத்தில், கட்சியில் உறுப்பினர் சேர்த்தல் மற்றும் தேர்தல் பணி தொடர்பாக பல்வேறு ஆலோசனை வழங்கப்பட்டு வருகின்றன. அமைச்சர்களில் பலர், மாவட்டச் செயலாளர்களாகவும் உள்ளனர். சனி, ஞாயிறு உள்ளிட்ட விடுமுறை தினத்தில், சொந்த மாவட்டம் வரும் அமைச்சர்கள், இரு தினங்களும், பல்வேறு அரசு நிகழ்ச்சியில் பங்கேற்பது வழக்கம்.இந்நிலையில், லோக்சபா தேர்தலை முன்னிட்டு, விடுமுறை தினத்தில், கட்சிக் கூட்டம் இருந்தால், அமைச்சர்களாக உள்ள மாவட்டச் செயலாளர்கள், அந்தக் கூட்டத்தில் பங்கேற்று, தேர்தல் பணி குறித்த ஆலோசனையை வழங்க வேண்டும். கட்சிக் கூட்டங்களுக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும்.அரசு நிகழ்ச்சியை காரணம் காட்டி, கட்சி தேர்தல் மற்றும் செயல்வீரர்கள் கூட்டத்தை புறக்கணிக்க வேண்டாம் என, அக்கட்சி தலைமை, வாய்மொழியாக உத்தரவிட்டுள்ளது.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை