E-paper| Mobile Apps

iPad

iPad E-paper

iPhone

Android

Android Tablet

Windows

Windows 8

Blackberry

bbicon OS 10

Mobile Election

| Get Font | Site Map |  RSS Feed
Advertisement
இந்தியாவிற்கு ரூ.10 லட்சத்து 32 ஆயிரம் கோடி, வெளிநாட்டுக் கடன்
Advertisement
 
 
Advertisement
 
 
எழுத்தின் அளவு:
Advertisement

மாற்றம் செய்த நாள்

30 ஜூன்
2013
05:54
பதிவு செய்த நாள்
ஜூன் 30,2013 05:51

புதுடில்லி:இந்தியாவிற்கு ரூ.10 லட்சத்து 32 ஆயிரம் கோடி வெளிநாட்டு கடன் உள்ளது. இது குறுகிய கால வெளிநாட்டுக்கடன்கள். இதை இன்னும் 9 மாதங்களில் திருப்பிச்செலுத்த வேண்டியது அவசியம்.ரூபாயின் மதிப்பு சரிவு:டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு தொடர்ந்து சரிவை சந்தித்து வருகிறது. இந்த நிலையில் இந்தியா இன்னும் ஓராண்டுக்குள் திருப்பி செலுத்த வேண்டிய குறுகிய காலக்கடன்கள் பெருகி இருப்பது பெரும் கவலை அளிக்கக்கூடியதாக உள்ளதாக பொருளாதார வல்லுனர்கள் கருதுகின்றனர்.

9 மாதங்களில் செலுத்துதல் அவசியம்:இன்னும் 9 மாதங்களில், அதாவது அடுத்த ஆண்டு மார்ச் மாதத்துக்குள் சுமார் ரூ.10 லட்சத்து 32 ஆயிரம் கோடிகுறுகிய காலக்கடன்களை வெளிநாடுகளுக்கு இந்தியா திரும்பச் செலுத்த வேண்டி உள்ளது.இந்த குறுகிய காலக் கடன்கள் 6 ஆண்டுகளில் 3 மடங்காக உயர்ந்துள்ளது. உலகப் பொருளாதாரம் சரியத் தொடங்கிய காலக்கட்டத்தில், 2008-ம் ஆண்டு மார்ச் மாதம் இது ரூ.3 லட்சத்து 28 ஆயிரத்து 200 கோடி மட்டுமே இருந்தது.இந்தக் காலகட்டத்தில் நடப்புக் கணக்கு பற்றாக்குறை 2.5 சதவீதத்தில் இருந்து 5 சதவீதமாக உயர்ந்துள்ளது. இந்த நடப்பு கணக்கு பற்றாக்குறை கடன்களால் சரி கட்டப்பட்டுள்ளது.

இன்னும் ஓராண்டுக்குள் இந்தியா திருப்பிச் செலுத்த வேண்டிய குறுகிய காலக்கடன்களின் அளவு ரூ.10 லட்சத்து 32 ஆயிரம் கோடி என்பது தற்போது நமது கையில் இருக்கிற மொத்த அன்னியச் செலாவணியில் 60 சதவீதம் ஆகும்.


இந்த 60 சதவீதம் என்பது, 2008-ம் ஆண்டு மார்ச் மாதம் வெறும் 17 சதவீதமாகவே இருந்தது. 2008-ம் ஆண்டில் இருந்து இந்தியாவின் திருப்பிச் செலுத்தும் சக்தி குறைந்து கொண்டே வருவதை இது காட்டுகிறது.வெளிநாட்டுக்கடன்கள் இந்த அளவுக்கு பெருகி இருப்பதற்கு 2004-ம் ஆண்டுக்கு பிறகு கார்ப்பரேட் நிறுவனங்கள் வாங்கிய பெருமளவு கடன்களும் காரணம்.

ஆனால் இந்த நிபந்தனைகளை அமெரிக்க ரிசர்வ் வங்கி கடினமானதாக்கி விட்டால், தற்போது அமெரிக்க டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு வரலாறு காணாத அளவுக்கு வீழ்ச்சியை சந்தித்துள்ள நிலையில், கார்ப்பரேட் நிறுவனங்கள் தாங்கள் வாங்கிய கடன்களை எப்படி திருப்பிச் செலுத்தும் என்பது கேள்விக்குறியாக உள்ளது.

ரூ. 5 லட்சத்து 40 ஆயிரம் கோடி தேவை:ஏற்கனவே வரும் மார்ச் மாதத்துக்குள் இந்தியா ரூ.10 லட்சத்து 32 ஆயிரம் கோடி குறுகிய கால கடன்களை திருப்பிச் செலுத்த வேண்டிய நிலையில், நாட்டின் தற்போதைய நடப்பு கணக்கு 4.7 சதவீதம் சரிக்கட்டுவதற்கு மேலும் ரூ. 5 லட்சத்து 40 ஆயிரம் கோடி நிதி தேவைப்படுவதாக தகவல்கள் கூறுகின்றன.




Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (20)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Baskaran Kasimani - Singapore,சிங்கப்பூர்
01-ஜூலை-201303:56:26 IST Report Abuse
Baskaran Kasimani ஐமு கூட்டணியின் சாதனை. ஊழல்களின் ஊற்றாக காங்கிரசை ஆக்கிய பெருமை முகவுக்கு மட்டுமே உண்டு.
Rate this:
0 members
0 members
2 members
Share this comment
Cancel
amukkusaamy - chennai,இந்தியா
01-ஜூலை-201300:33:16 IST Report Abuse
amukkusaamy 1. ரிலையன்ஸ், டாட்டா, போன்ற கம்பெனிகள் வாங்கியதற்கு இந்திய அரசுக்கு நிர்பந்தம் இல்லை. 2. 2 G மற்றும் நிலக்கரி ஊழல் போன்றவற்றில் ஏற்பட்ட கட்சிகளின் கொள்ளைப்பணம் கழிக்கப்படவேண்டும். 3. பதுக்கி வைக்கப்பட்டுள்ள கருப்புப்பணம் வெளியே வரவேண்டும். இவை எல்லாம் கழிந்தால் கொடுபடவேண்டிய கடன் பாதிக்கும் குறைவாகி விடும்.
Rate this:
0 members
0 members
1 members
Share this comment
Cancel
Muru - Tekka,சிங்கப்பூர்
30-ஜூன்-201311:41:45 IST Report Abuse
Muru மொத்தத்தில் அணைத்து அரசியல் திருடர்களும்,திருந்த வேண்டும் எனில்,மக்கள் மனம் வைக்கவேண்டும்,மக்கள் புரட்சியே மாற்றத்தை ஏற்படுத்தும். அவர்கள் மேடையில் பேசும் பேச்சையெல்லாம்,மெய்மறந்து கேட்டுவிட்டு.அவர்கள் கொடுக்கும் அன்பளிப்பு எனும் இலவசத்தையும்,தேர்தல் நேரத்தில்,அவர்கள் கொடுக்கும்,பணத்தையோ பொருளையோ வாங்கமறுத்து,இன்று உள்ள அரசியல் சாமர்த்தியர்கள் யார் என்று தேர்வுசெய்து.வாக்களித்து,தேர்தலின் பின்பு அவர்களிடம் கேள்விகள் கேட்கும் மனோநிலையும்,தைரியமும், மக்களுக்கு என்று வருகிறதோ,அன்றுதான் உண்மையான,அரசியல் வாதியும்,நல்லபல சட்டமும் திட்டமும், லஞ்சமில்லா செயல்திட்டமும் உருவாகும்.யாருக்கு தைரியம் இருக்கிறது, கருப்புமணம் படைத்த திருட்டு அரசியல் வாதிகளின் பதிக்கிவைதிருக்கும் கறுப்புபணத்தை,பிடுங்கி, அரசாங்கத்தின் உண்மையான,வரவு செலவு கணக்கில் காட்டி,இந்தியாவின்,தேவையில்லாத வெளிநாட்டின் கடனை அடைப்பதற்கு ?? எத்தனையோ போராட்டங்கள் நடந்து முடிந்துவிட்டது பதுக்கல் பணத்தை வெளியில் கொண்டுவர, யார் இதுவரை அதற்கான நடவடிக்கை எடுக்க முன்வந்தார்கள், அதனால் திருடனாய் பார்த்து திருந்தாவிட்டால் திருட்டைஒழிக்க முடியாது. அதனால் மக்களாய் பார்த்து,திருத்தா விட்டால்,மக்கள் ஆட்சி மலராது, இந்தியாவும் கடனிலிருந்து மீலாது.
Rate this:
0 members
0 members
14 members
Share this comment
Cancel
skmoorthi - sivakasi  ( Posted via: Dinamalar Android App )
30-ஜூன்-201309:23:14 IST Report Abuse
skmoorthi வெளி நாட்டு வங்கியிலுள்ள கருப்பு பணத்தை மீட்டாலே இந்தி்யா கடனில்லாத நாடாகிவிடும் என்ன செய்வது அவ்வளவு பணமும் மத்தி்யில் ஆளும் அதி்காரத்தி்ல் உள்ளவர்களின் கணக்கிலல்லவா இருக்கின்றது
Rate this:
2 members
0 members
15 members
Share this comment
Cancel
HARIOM - PERTH,ஆஸ்திரேலியா
30-ஜூன்-201309:04:13 IST Report Abuse
HARIOM Hello boss, we can settle this debt with in a while by seizing the black money from the swiss or by taking redemptive measures from sharad pawar, karunanidhi, sun network, mayawati, ub groups, all air service operators, lallu, corporate brigands, and the list is big.... deploy marshal law under the command of narra modi, channelize him with a broad view every thing will be straightened.....
Rate this:
2 members
0 members
3 members
Share this comment
Cancel
P.Balajirajan - Doha,கத்தார்
30-ஜூன்-201308:46:27 IST Report Abuse
P.Balajirajan மக்களே அனைவரும் காங்கிரெஸ் கே ஒட்டு போடுங்கள் அப்பா தான் இந்தியா உலக அளவில் கடனாளி லிஸ்டில் முதலிடம் பெறமுடியும், மக்களே இதற்க்கு உதவுங்கள் காங்கிரெஸ் சே மீண்டும் ஆட்சிக்கு வரட்டும், மோடி போன்ற திறமை உள்ளவர்களுக்கு ஒட்டு போட்டு இந்தியா தலை நிமுற வைத்து வீடாதிர்கள், கலைகர் கருணாநிதி போன்ற சுயநலவாதி சொல்ல்வதையே கேளுங்கள் அப்ப தான் உங்கள் பிள்ளைகள் சீக்கிரம் பிச்சை காரர்கள் ஆகா முடியும்.
Rate this:
10 members
0 members
143 members
Share this comment
Cancel
Tamilan - Chennai,இந்தியா
30-ஜூன்-201308:42:26 IST Report Abuse
Tamilan கோடிகணக்கா கொள்ளையடிச்சா இந்த நிலைமை வரத்தானே செய்யும்
Rate this:
4 members
0 members
41 members
Share this comment
Cancel
பி.டி.முருகன் - திருச்சிராப்பள்ளி ,இந்தியா
30-ஜூன்-201307:32:32 IST Report Abuse
பி.டி.முருகன்    ஓ.. ஓ.. அதான் மக்களிடம் வோட்டு வாங்க இலவசங்களை அள்ளி விடுறாங்களா?
Rate this:
2 members
2 members
37 members
Share this comment
Cancel
என்னுயிர்தமிழகமே - hyderabad,இந்தியா
30-ஜூன்-201306:53:49 IST Report Abuse
என்னுயிர்தமிழகமே தமிழகத்தை சேர்ந்த பலநாள் திருடர்கள் முன்னேற்ற கழகத்தின் விடிவெள்ளி, குத்து விளக்கு, இந்த பணத்தை ஒரேநாளில் கட்டி முடித்து உதவினால் நன்றாக இருக்கும்,
Rate this:
3 members
0 members
50 members
Share this comment
Cancel
ஆரூர் ரங - chennai,இந்தியா
30-ஜூன்-201306:52:38 IST Report Abuse
ஆரூர் ரங 2 ஜி 4 ஜி சுரங்கம் னு எல்லாத்திலயும் அடித்ததைக் கணக்கு பண்ணினால் இதனைத் தாண்டும் அதுவேதான் இந்த நிலைமைக்குக் காரணம்
Rate this:
3 members
0 members
47 members
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
( OR )Login with
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.