சிவகிரியில் திடீர் தீ விபத்து7 கடைகள்,ஒரு வீடு எரிந்து சாம்பல்| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

சிவகிரியில் திடீர் தீ விபத்து7 கடைகள்,ஒரு வீடு எரிந்து சாம்பல்

Added : ஜூன் 30, 2013
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement

சிவகிரி:சிவகிரியில் ஏற்பட்ட திடீர் தீ விபத்தில் ஏழு கடைகள் மற்றும் ஒரு வீடு எரிந்து சாம்பலானது. சுமார் 10 லட்சம் மதிப்பிலான பொருட்கள் தீக்கிரையானது.சிவகிரியில் மக்கள் நெருக்கடி மிகுந்த கடைவீதி பகுதி காந்தி சாலை. நகரின் பிரபலமான கடைகள், ஹோட்டல், சார்பதிவாளர் அலுவலகம், அரசு பள்ளி, கட்சி அலுவலகம், பத்திரம் எழுதும் கடைகள் போன்ற முக்கிய கட்டடங்கள் இங்கு உள்ளன. நள்ளிரவு 2.45 மணியளவில் இங்குள்ள இ.கம்யூ., கட்சி அலுவலகம் எதிரேயுள்ள கட்டடத்திலிருந்து திடீரென தீப்பற்றி எரியத்துவங்கியது. நள்ளிரவு நேரத்திலும் பொதுமக்கள் திரண்டு தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். தொடர்ந்து வாசுதேவநல்லூர், சங்கரன்கோவில் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து போராடி தீயை அணைத்தனர்.இந்த தீ விபத்தில் ஹரிகிருஷ்ணமூர்த்தி மற்றும் நடராஜன் என்பவர்களுக்கு சொந்தமான இரண்டு பத்திரம் எழுதும் கடைகள், ராமமூர்த்தி மற்றும் குருசாமி ஆகியோருக்கு சொந்தமான இரண்டு பெட்டிக்கடைகள், வனராஜ் என்பவருக்குரிய சலவை கடை, காதர்பாட்ஷா என்பவரின் சைக்கிள்கடை, பாலு என்பவரின் டீக்கடை என மொத்தம் 7 கடைகள் நடராஜன் என்பவரின் வீடு போன்றவை தீயில் எரிந்து நாசமாயின. கடைகளில் இருந்த கம்ப்யூட்டர், 25 சைக்கிள்கள், கம்பரசர், ரூ.80ஆயிரம் ரொக்கப்பணம், துணி வகைகள், குளிர்சாதன பெட்டிகள் என அனைத்தும் தீயில் எரிந்து கருகின.சாம்பலான கல்விச்சான்றிதழ்கள் : தீயில் முற்றிலும் எரிந்துவிட்ட சலவை கடை உரிமையாளர் வனராஜ் மகன் கண்ணன் (25). இவரின் 10ம் வகுப்பு, பிளஸ் 2, ஐ.டி.ஐ., ஆகிய மதிப்பெண் சான்றிதழ்கள் மற்றும் மாற்றுசான்றிதழ், வேலைவாய்ப்பு அலுவலக பதிவுச்சான்று, நடத்துனர் உரிமச்சான்று, பாஸ்போர்ட் ஆகியவை முழுவதும் எரிந்து சாம்பலானது. மேலும் சம்பவ இடத்தை டவுண் பஞ்.,தலைவர் இரணவீறு நேரில் பார்வையிட்டு பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆறுதல் கூறினார். மேலும் சிவகிரி தாசில்தார் புகாரி பார்வையிட்டார்.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை