உத்தரகாண்ட் வெள்ள பாதிப்பு தேசிய பேரிடர்| Dinamalar

தமிழ்நாடு

உத்தரகாண்ட் வெள்ள பாதிப்பு தேசிய பேரிடர்

Added : ஜூன் 30, 2013
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement
Advertisement

நாகர்கோவில்:உத்தரகாண்ட் மாநிலத்தில் மழை வெள்ளத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்காக நிதி திரட்டும் பணியை நாகர்கோவிலில், பா.ஜ., மாநில தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன் தொடங்கி வைத்தார்.
உத்தரகாண்ட் மாநிலத்தில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்காக பா.ஜ.. சார்பில் நிதி திரட்டப்பட்டு அனுப்பி வைக்கப்படுகிறது. அதன் அடிப்படையில் நேற்று தமிழகம் முழுவதும் பா.ஜ., சார்பில் நிதி திரட்டும் நிகழ்ச்சி நடந்தது. நாகர்கோவிலில் நிதி திரட்டும் நிகழ்ச்சியை துவக்கி வைத்து மாநில பா.ஜ., தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன் கூறியதாவது; உத்திரகாண்ட் மாநிலத்தில் மழை வெள்ளத்தால் ஏற்பட்டுள்ள பாதிப்பு ஒரு தேசிய பேரிடராக பா.ஜ., கருதுகிறது. 2004ம் ஆண்டு ஏற்பட்ட சுனாமி பேரழிவு உலகை எப்படி உலுக்கியதோ, அதுபோன்று உத்திரகாண்ட் மாநிலத்தில் ஏற்பட்டுள்ள பேரிடர்உலக மக்களை அதிர்ச்சியடைய செய்துள்ளது. ஆனால் அரசு இதனை பேரிடராக கருதாமல் இருப்பது வேதனைக்குரியது. மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்கள் தாங்கள் இருந்த விடுதியில் இருந்து விடுதியோடு அடித்து செல்லப்பட்ட காட்சி காட்டப்பட்டது. மலை சரிவின் காரணமாக உதவி கரம் நீட்ட செல்வோருக்கு பாதிக்கப்பட்ட பகுதிகளை சென்றடைய முடியாத நிலை உள்ளது. அரசால் மட்டுமே துயரத்தை தீர்க்க முடியும். மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் அளிக்கும் வகையில் பா.ஜ., நாடுமுழுவதும் உதவி தொகை பெறும் நிகழ்ச்சி நடத்துகிறது. குமரி மாவட்டத்தில் அனைத்து பகுதிகளிலும் நிதி திரட்டும் பணி துவக்கியுள்ளது. நாகர்கோவிலில் நேற்றும், இன்றும் நிதி திரட்டும் பணி நடக்கிறது.இந்த பணம் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அனுப்பி வைக்கப்படும். தமிழகத்தில் எம்.பி., எம்.எல்.ஏ.,க்கள் இல்லாததால் முன்னாள் எம்.பி., எம்.எல்.ஏக்கள் தங்கள் ஒரு மாத ஓய்வூதியத்தை நிவாரணபணிகளுக்கு அனுப்ப வேண்டுகோள் விடுத்துள்ளேன். நானும் ஒருமாத ஓய்வூதியத்தை வழங்கிஉள்ளேன். ராஜ்யசபா தேர்தல் கூட்டணி வரும் பார்லி தேர்தலில் இருக்க வாய்ப்பில்லை. அணிகள் மாறலாம். ஏழை இந்து மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை கேட்டு பா.ஜ., மூன்றாண்டுகளாக போராட்டம் நடத்தி வருகிறது. இந்த ஆண்டு பா.ஜ., இளைஞரணி சார்பில் வரும் ஜூலை 28ம் தேதி நாகர்கோவிலில் போராட்டம் நடக்கிறது. இவ்வாறு பொன்.ராதாகிருஷ்ணன் கூறினார்.பின்னர் நாகர்கோவில் நகர பகுதிகளில் மழை வெள்ள நிவாரண நிதி திரட்டும் பணியை நகர தலைவர் ராகவன் தலைமையில் மாநில தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன் துவக்கி வைத்தார். மாவட்டதலைவர் தர்மராஜ், துணைதலைவர் தேவ், நகராட்சி சேர்மன் மீனாதேவ், பொதுச்செயலாளர்கள் ரமேஷ், சொக்கலிங்கம், நகரபொதுச்செயலாளர் அஜித்குமார், ரமேஷ்,நகர பொருளாளர் கணேசன், நிர்வாகிகள் சாந்தி மோகன், சீதாலட்சுமி, இளைஞரணி தலைவர் கண்ணன், துணைதலைவர் அஜெயன், நிர்வாகிகள் ராஜன், ஜெகசெல்வன், கவுன்சிலர்கள் செல்வம், நாகராஜன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை