கோவில்பட்டியில் பள்ளி ஆசிரியையிடம் நகை பறிப்பு : மர்மநபருக்கு வலை| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

கோவில்பட்டியில் பள்ளி ஆசிரியையிடம் நகை பறிப்பு : மர்மநபருக்கு வலை

Added : ஜூன் 30, 2013
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

கோவில்பட்டி:கோவில்பட்டியில் பள்ளி ஆசிரியையிடம் 14 பவுன் நகையை பறித்து சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது, கோவில்பட்டி ஏஆர் நகரை சேர்ந்த கருணாகரன் என்பவரது மனைவி மாரியம்மாள் (43). இவர் கோவில்பட்டி அருகேயுள்ள காட்டுநாயக்கன்பட்டி பள்ளியில் ஆசிரியையாக பணி புரிந்து வருகிறார். இந்நிலையில் நேற்று முன்தினம் (ஜூன் 28) மாலை பணிமுடித்து கோவில்பட்டி பஸ் ஸ்டாண்டில் இருந்து மினி பஸ்சில் சென்று இறங்கி வீட்டுக்கு செல்லும் வழியில் அவரது கழுத்தில் கிடந்த 11 பவுன் தாலிச்செயின் மற்றும் டாலர் செயின் உள்பட 14 பவுன் தங்க நகைகளை மர்ம நபர்கள் பறித்து சென்றதாக கூறப்படுகிறது. இது குறித்து மாரியம்மாள் கோவில்பட்டி மேற்கு காவல் நிலையத்தில் புகார் செய்ததின் பேரில் குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் ஆனந்த் வழக்கு பதிவு செய்து கொள்ளையர்களை தேடி வருகிறார்.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை