E-paper| Mobile Apps

iPad

iPad E-paper

iPhone

Android

Android Tablet

Windows

Windows 8

Blackberry

bbicon OS 10

Mobile Election

| Get Font | Site Map |  RSS Feed
Advertisement
மெயின்ரோட்டில் உலா வரும் ஆடு மாடுகள்ஆத்தூரில் வாகன ஓட்டிகள் அவதி
Advertisement
 
 
Advertisement
 
 
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

30 ஜூன்
2013
06:30

ஆத்தூர்:ஆத்தூர்-ஆறுமுகநேரி மெயின்ரோட்டில் சுற்றித்திரியும் தெருவிலங்குகளால் தினமும் வாகனஓட்டிகள் பெரும் அவதியுற்று வருகின்றனர்.ஆத்தூர் மற்றும் ஆறுமுகநேரி சுற்றுப்பகுதியில் தற்போது தொடர்ந்து பலத்த காற்று வீசி வருவதால் ரோட்டில் 24 மணிநேரமும் புழுதி பறந்து வருகிறது. இதனால் இந்த ரோட்டில் வந்து செல்லும் வாகனஓட்டிகள் வண்டி ஓட்டவே சிரமப்பட்டு வருகின்றனர். இதற்கிடையில் ஆத்தூரிலிருந்து ஆறுமுகநேரிவரை வழக்கம் போலவே ரோட்டில் ஆங்காங்கே தெருவிலங்குகள் சுற்றி வருகின்றன.இந்த நிலையில் ஆத்தூர் சந்தனமாரியம்மன் கோவில், போலீஸ்ஸ்டேஷன் அருகே, தெற்குஆத்தூர், நரசன்விளை, கீரனூர், தண்ணீர்பந்தல், ஆறுமுகநேரி மெயின்பஜார் உள்பட பல இடங்களில் ஆடு, மாடு, பன்றி, நாய் என பல தெருவிலங்குகளும் தடையின்றி சுற்றி வருகின்றன. இந்த விலங்குகள் ரோட்டின் குறுக்கே அடிக்கடி பாய்வதால் இருசக்கர வாகனஓட்டிகள் பெரும் அவதியுற்று வருகின்றனர். இதனால் அடிக்கடி சிறுசிறு விபத்துகளும் நடந்து வருகிறது. எனவே ஆத்தூர்-ஆறுமுகநேரிமெயின்ரோட்டில் சுற்றித்திரியும் தெருவிலங்குகளை கட்டுப்படுத்த உரிய அதிகாரிகள் உடனடி நடவடிக்கை எடுத்து அந்த வழியே வந்து செல்லும் வாகனஓட்டிகளின் உயிரைக்காக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.




Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.