சினிமா இயக்குனர் மீது திருநங்கை ரோஸ்புகார்| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

சினிமா இயக்குனர் மீது திருநங்கை ரோஸ்புகார்

Added : ஜூலை 05, 2013 | கருத்துகள் (1)
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

சென்னை : தான் நடித்து வரும் படத்தின் இயக்குனர், தூண்டு தலின் பேரில், மிரட்டிய உதவி இயக்குனர்கள் மீது நடவடிக்கை கோரி, திருநங்கை ரோஸ், சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில், மனு அளித்துள்ளார்.
சென்னை, தி.நகரைச் சேர்ந்தவர், ரோஸ் வெங்கடேசன், 33; திருநங்கை. இவர் தற்போது, "வாய்மை' எனும் படத்தில், நடித்து வருகிறார். நேற்று, சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்திற்கு வந்த ரோஸ், புகார் ஒன்றை அளித்தார்.
அப்புகாரில், அவர் கூறியிருப்பதாவது:
"வாய்மை' படத்தில் நடித்து வருகிறேன். அப்படத்தின் இயக்குனர் செந்தில். படத்தில் நடிப்பதற்கான, "கால்ஷீட்' கொடுக்கப்பட்டது. ஆனால், அதற்கான சம்பளத் தொகை, முழுவதும் கொடுக்கப்படவில்லை. அதன் பின், "கால்ஷீட்'டை நீட்டித்த போது, அதற்கான ஒப்பந்தம் போடப்படவில்லை. வாய்மொழியாக உத்தரவாதம் கொடுக்கப்பட்டது.
இந்நிலையில், "கால்ஷீட்' நாட்களில், பெரும்பாலும் படப்பிடிப்பு நடப்பதில்லை. "கால்ஷீட்' தொடர்பான பிரச்னையில், நேற்று முன்தினம், 3ம் தேதி, இரவு, 7:30 மணிக்கு காரில், தேனாம்பேட்டை பகுதியில் நான் வந்து கொண்டிருந்த போது, உதவி இயக்குனர் இருவர், டூவீலரில் வந்து, காரை வழிமறித்து நிறுத்தி, மிரட்டினர்.
கையைப் பிடித்து இழுத்ததுடன், கடத்தல் முயற்சியிலும் ஈடுபட்டனர். இதனால், என் உயிருக்கும், உடைமைகளுக்கும் ஆபத்து உள்ளது. அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு, மனுவில் கூறியுள்ளார்.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Skv - Bangalore,இந்தியா
05-ஜூலை-201305:23:05 IST Report Abuse
Skv இவர் திருநங்கை என்பதால் தானே இப்படி நடக்குரானுக. இதே நடைமுறைய, அனுஷ்கா, அமலாபால் போன்ற நடிகைகளிடம் நடத்துவானுகளா/ செய்யும் தொழிலுக்கு காசு தராதவன் மகா கேவலமானவன்
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை